Chennai Corona Update | சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன? மண்டலவாரி விவரம் இதோ..!
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மாநகராட்சியால் தினசரி வெளியிடப்பட்டு வருகிறது.
![Chennai Corona Update | சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன? மண்டலவாரி விவரம் இதோ..! Chennai Corona update zonal wise today 8 july 2021 Tamil Nadu Corona Cases Recovery Vaccine update Chennai Corona Update | சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன? மண்டலவாரி விவரம் இதோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/08/a2e8625522df1e8f0e91658a8e4dd200_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி திருவொற்றியூர் மண்டலத்தில் 14 ஆயிரத்து 651 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 248 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 60 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.மணலி மண்டலத்தில் 7 ஆயிரத்து 849 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 76 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 46 பேர் தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதவரம் மண்டலத்தில் 19 ஆயிரத்து 854 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 244 பேர் உயிரிழந்த நிலையில், அந்த மண்டலத்தில் 64 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தண்டையார்பேட்டை மண்டலத்தில் 34 ஆயிரத்து 833 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 540 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 123 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரம் மண்டலத்தில் 37 ஆயிரத்து 264 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 589 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 105 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திரு.வி.க. நகர் மண்டலத்தில் 40 ஆயிரத்து 514 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 833 நபர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது 153 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பத்தூர் மண்டலத்தில் 42 ஆயிரத்து 90 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 658 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ளனர். 94 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அண்ணாநகர் மண்டலத்தில் 54 ஆயிரத்து 695 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 955 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 151 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனாம்பேட்டை மண்டலத்தில் 48 ஆயிரத்து 870 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 946 நபர்கள் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ளனர். 171 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 51 ஆயிரத்து 672 நபர்கள் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். 929 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், தற்போது 136 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வளசரவாக்கம் மண்டலத்தில் 35 ஆயிரத்து 35 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 451 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 98 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலந்தூர் மண்டலத்தில் 24 ஆயிரத்து 173 நபர்கள் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 367 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 86 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடையாறு மண்டலத்தில் 44 ஆயிரத்து 22 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 662 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 153 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருங்குடி மண்டலத்தில் 24 ஆயிரத்து 986 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 662 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 153 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 16 ஆயிரத்து 122 நபர்கள் குணம் அடைந்துள்ள நிலையில், 135 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த மண்டலத்தில் 52 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)