மேலும் அறிய
Advertisement
சென்னை: தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக புகார்- நர்சிங் ஹோம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியல்
’’அரசு மருத்துவமனைக்கு பொன்னியின் உடலை அனுப்பி பிரேத பரிசோதனை செய்து அதனை தேவைப்பட்டால் வீடியோவாக பதிவு செய்து முழுமையாக விசாரிப்பதாக உறுதி’’
சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் இவருக்கு திருமணமாகி சசிகலா என்கின்ற பொண்ணி (35) என்ற மனைவியும் 17 வயதில் கீர்த்தனா என்ற மகளும் 15 வயதில் அரி என்ற மகனும் உள்ளனர். கணேசன் அதே பகுதியில் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கணேசனின் மனைவி பொன்னிக்கு அடிக்கடி வயிற்று வலி வந்துள்ளது. இதனால் கொளத்தூர் எஸ்.ஆர்.பி கோவில் தெரு 10 ஆவது தெருவில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் காண்பித்துள்ளனர்.
அவர்கள் பொன்னியின் கர்ப்பப்பையை நீக்கி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் கடந்த 27 ஆம் தேதி கணேசன் பொன்னியை குறிப்பிட்ட அந்த தனியார் நர்சிங் ஹோமில் சேர்த்துள்ளார். 28 ஆம் தேதி பொன்னிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதன் பிறகு சகஜமாக உறவினர்களிடம் பொன்னி பேசி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் திடீரென்று பொன்னி மருத்துவமனையிலேயே இறந்து விட்டார். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு செய்தி தெரிய வந்ததும் மருத்துவமனை முன் குவிந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நேற்றிரவு பொன்னிக்கு குளுக்கோஸ் ஏற்றும் போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் யாரும் உடன் இல்லாமல் குளுக்கோஸ் பாட்டில் முடிந்தும் தொடர்ந்து செவிலியர்கள் அஜாக்கிரதையாக இருந்ததாகவும் இதனாலேயே பொன்னி இறந்ததாகவும் அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து பொன்னியின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, அவர்கள் சரிவர பதில் அளிக்காமல் மாரடைப்பால் இறந்ததாக கூறி உள்ளனர். அவர்கள் கூறிய பதிலில் திருப்தி அடையாத பொன்னியின் உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அதே பகுதியில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து நேரில் வந்த புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா மற்றும் செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு உள்ளிட்ட போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசு மருத்துவமனைக்கு பொன்னியின் உடலை அனுப்பி பிரேத பரிசோதனை செய்து அதனை தேவைப்பட்டால் வீடியோவாக பதிவு செய்து முழுமையாக விசாரிப்பதாக உறுதி அளித்தனர்.
அதன் பேரில் பொன்னியின் உறவினர்கள் கலைந்து சென்றனர். மேலும் பொன்னியின் உடலைக் பெரவள்ளூர் போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனை செய்ய உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. பொன்னியின் 17 வயது மகளும் அவரது கணவர் கணேசனும் சாலையில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் அவ்வழியாக செல்வோரை கண் கலங்க வைத்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion