சென்னையில் போர்க்கால ஒத்திகை தொடங்கியது! என்னென்ன நடக்கும்?
Chennai Defence Mock Drill: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போர்க்கால ஒத்திகையை மத்திய அரசு நடத்தி வருகிறது.

சென்னையில் இன்று சில இடங்களில் போர் சூழல் தொடர்பான ஒத்திகையானது நடத்தப்பட்டது. இந்நிலையில், போர் சூழல் ஒத்திகை என்றால் என்ன, என்ன மாதிரியான பயிற்சிகள் நடத்தப்படும் என்பது குறித்து பார்ப்போம்.
பஹல்காம் தாக்குதல்:
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த மே 5 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகமானது, மாநில அரசுகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதில் போர் ஒத்திகை நடத்துவது குறித்தும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் போர் சூழல் குறித்து ஒத்திகையானது, நடத்துவதற்கு துணை ராணுவ படையினர், பேரிடர் மேலாண்மை துறையினர், தீயணைப்பு துறையினர் , மாநில காவல்துறையினர் ஆகியோர் ஒன்றிணைந்து போர் சூழல் குறித்து ஒத்தியை நடத்தினர்.
போர் ஒத்திகை காண பயிற்சிகள் தற்போது சென்னை துறைமுகத்தில் தற்போது தொடங்க உள்ளது #IndianArmy pic.twitter.com/inl3TbpNpr
— RAMJI (@RAMJIupdates) May 7, 2025
போர் ஒத்திகை பயிற்சிகள் என்ன?
- இந்நிலையில், இன்று சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கத்தில் போர் சூழல் குறித்த ஒத்திகையானது, இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு நிறைவடைகிறது. இதில் போர் சூழல் ஏற்பட்டால், பொதுமக்கள், தங்களை எப்படி பாதுகாத்து கொள்வது என்பது குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
- போர் ஒத்திகையின் போது, ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் ஆலைகள், பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்படும்.
- வான்வெளி தாக்குதல் எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டு, சோதனை நடத்தப்படும்.
- இந்த தருணத்தில் பாதுகாப்பு படை வீரர்கள், தீயணைப்பு வீரரகள் அரசு அதிகாரிகள் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து எப்படி செயல்படுவது என்பது குறித்து ஒத்திகை நடத்தப்படும்.
- போர் ஒத்திகையின் போது, அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது.
- திடீரென மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டால், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயிற்சி
- எதிரிகள் தாக்கும் போது, எப்படி பாதுகாத்து கொள்வது என்பது மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
- மேலும், அடுக்குமாடி குடியிருப்பவர்களை, எப்படி கயிறு கட்டி கீழே கொண்டு வருவது என்பது குறித்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- தீப்பற்றிய இடங்களில், உடனடியாக எப்படி அணைப்பது என்பது குறித்து பயிற்சியை பேரிடர் மேலாண்மை துறையினர் மேற்கொள்வர்.
- காயம் ஏற்பட்டவர்களை, உடனடியாக எப்படி மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் போர் ஒத்திகை என்பது, அனைவரும் எப்படி முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற ஒத்திகைதான், இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.





















