எல்லோரையும் காக்கும் சென்னை : நூற்றுக்கணக்கான நாய்களுக்கு உணவளிக்கும் தேவி மரகதம்..!
இந்த கொரோனா காலகட்டத்தில் மனிதர்களை போல பல விலங்குகளும் பெரிய அளவில் உணவு கிடைக்காமல் வாடி வருகின்றன.
இந்நிலையில் தினமும் நுற்றுக்கணக்காக ஆதறவற்று தெருக்களில் சுற்றிவரும் நாய்களுக்கு உணவளித்து வருகின்றனர் தேவி மரகதம் மற்றும் அவரது சகோதரர். சென்னை அம்பத்தூர் பகுதியில் தேவி மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் தினமும் 150க்கும் அதிகமான நாய்களுக்கு உணவளித்து வருகின்றனர். இதுபற்றி அவர்கள் கூறியபோதும். 'கடந்த லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்தே இதுபோன்று பசியால் வாடும் நாய்களுக்கு உணவளித்து வருவதாக அவர் தெரிவித்தார்'
'மேலும் இந்த இரண்டாம் அலையில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோது பி.சி.ஐ (BCI) எனப்படும் ப்ளூ கிராஸ் இந்தியாவின் (Blue Cross of India) தன்னார்வலர்கள் சிலர் தங்களை சந்தித்து ஒவ்வொரு நாள் மாலையும் விலங்குகளுக்கு தேவையான உணவுகளை அளித்ததாகவும். அந்த உணவை தேவி மற்றும் அவரது சகோதரர் விலங்குகளுக்கு அளிப்பதாகவும் அவர் கூறினார். BCIவுடன் இணைந்து சேவை செய்யும் நிறுவனத்தின் ஒரு அங்கமாக தான் திகழ்வதாகவும் தேவி கூறினார். மேலும் BCIயின் கருணா - 1 என்ற திட்டத்தின் கீழ் சுமார் 1.1 லட்சம் விலங்குகளுக்கு அவர்கள் உணவளித்துள்ளார். அதேபோல கருணா - 2 திட்டத்தின் கீழ் இதுவரை 72,000க்கும் அதிகமான விலங்குகளுக்கு தேவி உணவளித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொரோனா காலகட்டத்தில் சமூகத்தில் நம்மை சுற்றியுள்ள விலங்குகளுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்று தலைவர்கள் பலரும் அறிவுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது. மாநில அரசுகளும் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவது நினைவுகூரத்தக்கது. ப்ளூ கிராஸ் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் இணைந்து ஆதரவற்று இருக்கும் விலங்குகளுக்கு உணவு மற்றும் நீர் கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும் என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றமும் கூறியது.
பல குற்றவாளிகளை அடையாளம் காட்டிய மோப்பநாய் ராஜராஜன் மரணம் : 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்..!
தெருவில் ஆதரவின்றி சுற்றித்திரியும் விலங்குகளுக்கு தவறாமல் உணவளிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக BCI-யின் கவுரவ இணை செயலாளர் தியாகராஜன் கிருஷ்ணமூர்த்தி கூறினார். மேலும் எல்லாம் இடங்களுக்கும் தங்களால் செல்லமுடியாத நிலையில் இணையத்தின் மூலம் தன்னார்வலர்களை திரட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு நாளுக்கு சுமார் 10 பேர் தங்களுடைய திட்டத்தில் இணைவதாகவும் அவர் கூறினார். பார்க் ஹயாட் மற்றும் கிறீன் பார்க் போன்ற ஹோட்டல்கள் தங்களுக்கு உணவு தயாரிப்பில் உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்.