Chennai Book Fair : 6-ஆம் தேதி தொடங்கும் 46-வது புத்தகக் கண்காட்சி; ஆனால், இந்தமுறை இந்த அரங்கம் தனி ஸ்பெஷல்!
Chennai Book Fair : 46-வது புத்தகக் கண்காட்சி வரும் 6 - ஆம் தேதி தொடங்குகிறது.
சென்னையில் வரும் 6-ஆம் தேதி (ஜனவரி, 6,2023 / வெள்ளிக்கிழமை) தொடங்க இருக்கும் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இம்முறை திருநங்கைகள் / பால்புதுமையினர் இலக்கியங்கள் மற்றும் அவர்களின் படைப்புகளுக்காக தனி அரங்கம் இடம்பெறுகிறது.
தமிழ்நாடு அரசுடன் இணைந்து தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BookSellers and Publishers Association of South India (BAPASI)) சார்பில் ஆண்டுதோறும் புத்தக் கண்காட்சி நடத்தப்படும். சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதனாத்தில் 46-வது புத்தக் கண்காட்சி இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. வாசர்களின் திருவிழாவில் இந்தாண்டு திருநங்கைகள் / பால்புதுமையினர் இலக்கியங்கள் இடம்பெற உள்ளதாக பா.ப.சி. -யின் செயலாளர் எஸ்.கே. முருகன் தெரிவித்துள்ளார்.
புத்தக் கண்காட்சியில் LGBTQIA+ இலக்கியங்கள்
சென்னை புத்தகக் கண்காட்சியில் முதன்முறையாக LGBTQIA+ இலக்கியங்களை காட்சிப்படுத்துவதற்காக அரங்கம் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளில் திருநங்கையினர் படைப்புகள் இடம்பெறுவது இதுவே முதல்முறை. 'Queer Publishing House’ கடந்த வாரம் புத்தகக் கண்காட்சியில் அரங்கம் அமைக்க பா.ப.சி. நிர்வாகிகளிடம் கடிதம் அளித்திருந்தனர். அனுமதி உறுதிசெயப்படாததை எதிர்த்து பலரும் கண்ட குரலை எழுப்பினர். இந்த விசயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு அனுமதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு திருநர் உரிமைக்கூட்டமைப்பு கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர். பின்னர், அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
’Trans Rights Now Collective’ என்ற அமைப்பின் முன்னெடுப்புதான் குயர் பப்ளீஷிங் ஹவுஸ். திருநங்கை நலன்களுக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர் கிரேஸ் பான கூறுகையில், “ இந்தச் சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவரும் நோக்கில் இம்முறை புத்தகக் கண்காட்சியில் பால்புதுமையினரின் படைப்புகள் இடம்பெற இருக்கிறது.” என்று தெரிவித்தார்.
LGBTQIA+ இலக்கியங்கள் இடம்பெறும் அரங்கில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், பால்புதுமையினரின் படைப்புகள் இடம்பெற உள்ளது. இம்முறை பெரிதும் போராடி புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க அனுமதி பெற்றுள்ளனர்.
சர்வதேசக புத்தக் கண்காட்சி
இந்தாண்டு முதன்முறையாக சென்னை புத்தகக் கண்காட்சி சர்வதேச அளவில் நடைபெறுகிறது. ஜனவரி,16 ஆம் தேதி முதல் ஆம் 18 தேதி வரை ‘சர்வதேசக் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சிக்கு 30 குளிரூட்டப்பட்ட அரங்குகள் தனியாக ஒதுக்கப்பட்டு உள்ளன.
1000 அரங்குகளில் புத்தகங்கள் இடம்பெற உள்ளன. இன்னும் ஐந்து நாட்களில் புத்தக திருவிழா தொடங்க இருக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 6-ஆம் தேதி நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டானின் புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். கருணாநிதி பொற்கிழி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்குகிறார்.
தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.