மேலும் அறிய

Chennai Air Show: மூடப்படும் சென்னை விமான நிலையம்.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா ? முழு தகவல் ?

Chennai Air Show 2024: சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், சென்னை விமான நிலையம் இன்று ஒன்றரை மணி நேரம் மூடப்படுகிறது. 

சென்னை மெரினா கடற்கரையில், வருகின்ற 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் ஏர் ஷோ நிகழ்ச்சிக்காக, இந்திய விமானப்படை விமானங்களின் ஒத்திகை நிகழ்ச்சி, இன்று சென்னை மெரினா கடற்கரையில் நடக்க இருப்பதை ஒட்டி, சென்னை விமான நிலையம், இன்று பகல் 1.45 மணி முதல், மாலை 3.15 மணி வரை, ஒன்றரை மணி நேரம் மூடப்படுவதால், இந்த நேரத்தில் சென்னையில் இருந்து புறப்படும் 15 விமானங்கள், சென்னையில் வந்து தரை இறங்கும் 10 விமானங்கள், மொத்தம் 25 விமானங்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

சாகச நிகழ்ச்சிகள்

சென்னை மெரினா கடற்கரையில், இந்திய விமானப்படை தினத்தை ஒட்டி, அக்டோபர் 6 ஆம் தேதி, ஞாயிறு அன்று காலை 11 மணியிலிருந்து, பகல் ஒரு மணி வரையில், சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை விமானங்களின் வீர சாகச நிகழ்ச்சிகள் ,ஏர்ஷோ பொதுமக்களின் பார்வைக்காக நடத்தப்பட இருப்பதால், இன்று முதல் இந்த விமானப்படை வீர சாகச நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகைகள் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை, சென்னை மெரினா கடற்கரை மற்றும் தாம்பரம் விமானப்படைத்தளம் ஆகிய இடங்களில் நடக்க இருக்கிறது. 

தற்காலிகமாக மூடப்படும் சென்னை விமான நிலையம் 

அந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து, விமானங்கள் புறப்படுவது, மற்றும் தரையிறங்குவது, விமானப்படை சாகசங்கள் செய்யும் விமானங்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கருதப்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் வரும் 8 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை வரையில், 15 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் வரையில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, சென்னை விமான நிலையமும் தற்காலிகமாக அந்த நேரங்களில் மூடப்படுகிறது. 

விமானங்களில் நேரம் மாற்றி அமைப்பு

முதல் நாளான இன்று செவ்வாய்க்கிழமை பகல் 1.45 மணி முதல், மாலை 3.15 மணி வரையில், சென்னை விமான நிலையம் மூடப்பட்டு, விமான சேவைகளின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து பகல் 1.45 மணியிலிருந்து மாலை 3.15 மணி வரையில்,15 விமானங்கள் புறப்படுகின்றன. அதில் சிங்கப்பூர், டாக்கா, யாழ்ப்பாணம் ஆகிய 3 சர்வதேச விமானங்களும், 12 உள்நாட்டு விமானங்களும் அடங்கும். அந்த விமானங்கள் அனைத்தும் இன்று மாலை 3.20 மணிக்கு மேல், புறப்பட்டுச் செல்லும் விதத்தில், நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றி அமைக்கப்பட்ட விமானங்களில் நேரம் 

அதன்படி இன்று பகல் 1.55 மணிக்கு, சென்னையில் இருந்து கோவா புறப்பட்டு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மாலை 3.20 மணிக்கும், பகல் 2.15 மணிக்கு சென்னை டெல்லி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மாலை 3.35 மணிக்கும், சென்னை- சிங்கப்பூர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பிற்பகல் 2.25 மணிக்கு பதிலாக மாலை 3.20 மணிக்கும், சென்னை- தூத்துக்குடி விமானம், பிற்பகல் 2.20 மணிக்கு பதிலாக, மாலை 3.30 மணிக்கும், சென்னை- கோவை விமானம் பிற்பகல் 2.25 மணிக்கு பதிலாக, மாலை 3.20 மணிக்கும், சென்னை- ராஜமுந்திரி விமானம் பிற்பகல் 2.25 மணிக்கு பதிலாக, மாலை 3.25 மணிக்கும், சென்னை- சீரடி பிற்பகல் 2.30 மணிக்கு பதிலாக, மாலை 3.30 மணிக்கும், சென்னை- கொல்கத்தா விமானம் மாலை 3 மணிக்கு பதிலாக, மாலை 3.35 மணிக்கும், சென்னை- மும்பை விமானம், மாலை 3 மணிக்கு பதிலாக மாலை 3.15 மணிக்கும், சென்னை புனே விமானம் மாலை 3 மணிக்கு பதிலாக, மாலை 4 மணிக்கும் மற்றும் யாழ்ப்பாணம், டாக்கா, மதுரை, ஹைதராபாத் உள்ளிட்ட விமானங்களின் புறப்பாடு நேரங்களும் மாலை 3.30 மணிக்கு மேல் புறப்படுவதுபோல் மாற்றப்படுகிறது. 

பயணிகளுக்கு அறிவுரை

அதைப்போல் இன்று பகல் 1.45 மணியிலிருந்து,மாலை 3.15 மணி வரையில், சென்னைக்கு வந்து தரையிறங்கும் விமானங்களான யாழ்ப்பாணம், கொழும்பு, அபுதாபி, டாக்கா, சீரடி, மதுரை, டெல்லி உள்ளிட்ட 10 விமானங்கள், நேரங்கள், மாலை 3.15 மணிக்கு மேல், சென்னையில் வந்து தரை இறங்குவது போல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்தில் இன்று பகல் 1.45 மணி முதல், மாலை 3.15 மணி வரையிலான, ஒன்றரை மணி நேரத்தில், புறப்பாடு விமானங்கள் 15, வருகை விமானங்கள் 10, மொத்தம் 25 விமானங்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, நேரம் மாற்றம் குறித்து உறுதி செய்து கொண்டு, தங்கள் பயணத்தை மேற்கொள்ளும்படி, இந்திய விமான நிலைய ஆணையம் பயணிகளை அறிவுறுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Embed widget