Flight: போகி எதிரொலியால் புகை மூட்டம்..! திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்! 50 விமானங்கள் சேவை பாதிப்பு..!
4 விமானங்கள் ஹைதராபாத் திருப்பி அனுப்பப்பட்டன. அந்தமான் புறப்பட வேண்டிய ஒரு விமானம் ரத்து. மேலும் 21 வருகை விமானங்கள், 24 புறப்பாடு விமானங்கள், சில மணி நேரங்கள் தாமதம்.

Bhogi Pongal 2024 ( போகிப் பண்டிகை )
உலகம் முழுக்கவே அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அறுவடை திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. வேளாண்மையே இந்நாட்டின் முதன்மையான தொழில் என்பதால் அறுவடை காலத்தையும், விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் சூரியனை போற்றி நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள், போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுத்தம், சுகாதாரத்தை பேணும் விதமாக போகி கொண்டாடப்பட்டு வருகிறது. ‘புதியன புகுதல்’ என்று சொல்லப்படுவதை கேட்டிருப்போம். தை பிறந்தால் வழி பிறக்கும் என கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தை மாதத்தின் முதல் நாளான நாளை கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளை போகிப் பண்டிகை என கொண்டாடுவது தமிழ் மக்களின் மரபு.
ட்ரெண்டிங் செய்திகள்





















