Crime: கடன் பிரச்னையால் மனைவி, மகளை கொன்று கணவர் தற்கொலை முயற்சி - சென்னை அருகே அதிர்ச்சி
அவரது உறவினர்கள் அரவிந்திற்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் எடுக்காததால் தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரில் கடன் நெருக்கடியால் தனது 7 வயது மகன் மற்றும் மனைவிக்கு மாத்திரை கொடுத்து கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற கணவன், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வலது கை மணிக்கட்டு நரம்பை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் பகுதியில் வசித்து வருபவர் அரவிந்த் (33). அரவிந்த் தாழம்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அரவிந்திற்கு சுமார் 17 லட்சம் கடன் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கடன் கொடுத்தவர்கள் அதிகளவு நெருக்கடி கொடுத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து 7-வயது மகள் ஐஸ்வர்யாவுக்கு தூக்க மாத்திரையை கொடுத்த பிறகு அவரது மனைவி 32-வயதான சுஜிதாவிற்கும் அதே மாத்திரை கொடுத்த பிறகு அவரது வலது கை மணிக்கட்டு நரம்பை துண்டிதுள்ளார்.
உடல்களை மீட்ட போலீசார்
பின்னர் அரவிந்த் தானும் தற்கொலை செய்துகொள்ள அதே மாத்திரையை உட்கொண்ட பிறகு அவரது கை நரம்பையும் லேசாக அறுத்துகொண்டதில் மயக்கமடைந்துள்ளார். அவரது உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொண்டபோது, அரவிந்த் செல்போன் எடுக்காததால் தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அரவிந்த் மயங்கிய நிலையிலும், அவரது மனைவி மற்றும் மகள் உயிரிழந்த நிலையிலும் இருந்ததை கண்ட போலீசார், உடனடியாக அரவிந்த்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். விசாரணையில் கடன் தொல்லை அதிகரித்தால் வேறு வழியில்லாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து இதுபோன்று சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, முதல் கட்டமாக உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு உள்ளோம். உறவினர்கள் கொடுத்த தகவலின் படி கடன் பிரச்சினை இருந்தது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் முதல் கட்ட விசாரணையை துவங்கி உள்ளோம் என தெரிவித்தனர்.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்