மேலும் அறிய
Advertisement
பேருந்து இல்லாமல் பரனூர் சுங்கச்சாவடியில் விடிய விடிய காத்திருந்த பயணிகள்!
விடுமுறை தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றச்சாட்டு
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு பிரதான சாலையாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையில் செங்கல்பட்டு அருகே பரனூரில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையின் காரணமாக பரனூர் சுங்கச்சாவடியில், நேற்று மாலை முதல், இன்று காலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையின் புறநகர் பகுதியாக இருக்கும் கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். பரனூர் சுங்கச்சாவடி காத்திருந்து சென்னையிலிருந்து வரும் பேருந்துகளில் ஏறி பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
@RRajakannappan ஐயா தாம்பரம் முதல் செங்கல்பட்டு சுங்கச்சாவடி வரை வெளியூருக்கு செல்வோர் கூட்டம் அலை மோதுகிறது... பேருந்துகளை அதிக படுத்துங்கள்... @mkstalin @Udhaystalin pic.twitter.com/AKTYxyW9eq
— DURAI 2.0 (@duraimaniraj1) September 9, 2021
சென்னையில் இருந்து தென் மாவட்டம் செல்லும் பேருந்துகள் செங்கல்பட்டு நகர் பகுதியில் அமைந்திருக்கும் பேருந்து நிலையத்திற்கு வராமல், நேரடியாக புறவழிச்சாலை வழியாக செல்வதால், பயணிகள் வேறுவழியின்றி சுங்கச்சாவடியில் காத்திருந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
தொடர் விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு செல்வதற்காக, சுங்கச்சாவடி வந்த பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தும் போதிய அளவில் பேருந்துகள் வராததால் , அதிகாலை வரை காத்திருந்தனர். மேலும் சென்னையில் இருந்து வந்த பல பேருந்துகள் முழுவதுமாக நிரம்பி வந்த காரணத்தினால், கொரோனா வைரஸ் தொற்று விதிமுறைகள் காற்றில் பறந்தன.
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலம் என்பதை கருத்தில் கொண்டு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர். கடும் போக்குவரத்து நெரிசலால் ஆமை வேகத்தில் வாகனங்கள் நகர்ந்து சென்றன. இதனால் சாலை தொடர்ந்து பரபரப்பாக காணப்படுகிறது.
செங்கல்பட்டு Toசென்னை தேசிய நெடுஞ்சாலை கடும் போக்குவரத்து நெரிசல்🤦🤦🤦😁😁 pic.twitter.com/mLdR2XhAtp
— தே.அருண்சங்கர் (@ArunSan38477351) September 9, 2021
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion