மேலும் அறிய
Advertisement
Chengalpattu : கொட்டித் தீர்த்த கனமழையிலும் நிரம்பாத ஏரி, குளங்கள்...! செங்கல்பட்டில் சோகம்...
தொடர் மழை எதிரொலியாக விரைவில் ஏரி மற்றும் குளங்கள் நிரம்பும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிகள் மிக வேகமாக நிரம்பி வந்தாலும் ஊராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே கவலை அளித்துள்ளது.
சிறிய ஏரிகளில் நிலவரம் என்ன
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதிக்கு உட்பட்ட 81 ஏரிகளில் , ஒரு ஏரி கூட முழுமையாக நிரம்பவில்லை. பரங்கிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 13 ஏரிகளில் இரண்டு ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. திருக்கழுக்குன்றத்திற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 74 ஏரிகளில் ஒரு ஏரி கூட நிரம்பவில்லை. காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 82 ஏரிகளில் ஒரு ஏரி கூட முழு கொள்ளளவை எட்டவில்லை.
அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 108 ஏரிகளில் ஒரு ஏரி கூட முழு கொள்ளளவை எட்டவில்லை . மதுராந்தகம் ஒன்றியத்தில் 132 ஏரிகளில் உள்ளன அவற்றில் ஒரு ஏரி கூட முழு கொள்ளளவை எட்டவில்லை. ஒன்றியத்திற்குட்பட்ட 69 ஏரிகளில் ஒரு ஏரி கூட கொள்ளளவை எட்டவில்லை. இலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட 61 ஏரிகளில் ஒரு ஏரி கூட முழு கொள்ளளவை எட்டவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி நிர்வாகம் கீழ் வரும் 620 ஏரிகளில் , 02 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குளங்கள்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 421 குளத்தில் 03 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. பரங்கிமலை ஒன்றியத்திற்குட்பட்ட 57 குளங்களில் ஒரு குளம் கூட முழுமையாக நிரம்பவில்லை. திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட 391 குளம் உள்ளது அவற்றில் ஒரு குளம் கூட நிரம்பவில்லை. காட்டாங்குளத்தூர்க்கு உட்பட்ட 200 குளங்களில் ஒரு குளம் கூட முழுமையாக நிரம்பவில்லை.
அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட 431 குளங்களில் ஒரு குளம் கூட முழுமையாக நிரம்பவில்லை. மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட 438 குளங்களில் ஒரு குளம் கூட நிரம்பவில்லை, சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட 271 குளங்களில் ஒரு குளம் கூட நிரம்பவில்லை. லத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட 33 குளங்களில் 78 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு பகுதியில் மழை அதிகரித்துள்ளது தொடர்ந்து விரைவில் குளம் மற்றும் ஏரிகள் நிரம்ப துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 2512 குளங்களில், 1121 குளங்களில் 25% தண்ணீர் உள்ளது, 1041 குளங்களில் 50 சதவீதம் தண்ணீர் உள்ளது. 269 குளங்களில் 70% தண்ணீரும், 81 குளங்களில் 100% தண்ணீரும் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion