மேலும் அறிய
Advertisement
Accident: மதுராந்தகம் கொடூர விபத்து; தூங்கிக் கொண்டிருந்தவர் உயிரிழந்த சோகம்
அரசு பேருந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
அரசு விரைவு பேருந்து, அரசு சொகுசு பேருந்தின் மீது மோதியது
செங்கல்பட்டு (Chengalpattu News): திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மாமண்டூர் என்ற இடத்தில், திருவாரூரில் இருந்து அரசு விரைவு பேருந்து ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. விரைவு பேருந்துக்கு முன்னால், அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக அரசு விரைவு பேருந்து, அரசு சொகுசு பேருந்தின் மீது மோதியது. இதன் காரணமாக பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அரசு பேருந்தில் பயணம் செய்த திருவாரூர் பகுதியை சேர்ந்த ஆண் பயணி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
போக்குவரத்து நெரிசல்
இதுகுறித்து தகவல் அடைந்து சம்பவ இடத்திற்கு விரைந்த படாளம் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தும் பணியிலும் போக்குவரத்து சரி செய்யும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். திங்கட்கிழமை என்பதால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் வாகனங்களின், எண்ணிக்கை இயல்பை விட சற்று அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலும் சில மணி நேரங்கள் அதிகரித்து இருந்தது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து பணிகளை சரி செய்யும் முயற்சியில் படாளம் போலீசார் ஈடுபட்டு போக்குவரத்து, நெரிசலை சரி செய்தனர். இதுகுறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடியிலும் போக்குவரத்து நெரிசல்
தமிழ்நாட்டின் தலைநகரமாக உள்ள சென்னையில் அதிக அளவு வேலை வாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன. இதன் காரணமாக சென்னை புறநகர் மாவட்டங்கள் மட்டுமின்றி, தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். சென்னையில் தங்கி வேலை பார்த்து வருபவர்கள், விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் , சென்னை நோக்கி படையெடுப்பது வழக்கம்.
அந்த வகையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளை தொடர்ந்து நேற்று காலை முதலே பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளன. திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அதுபோக தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள், தங்களின் சொந்த வாகனங்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் சென்னையை நோக்கி வர துவங்கியுள்ளதால், சென்னையில் முக்கிய நுழைவு வாயிலாக கருதப்படும் செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடிகள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். போக்குவரத்து சரி செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகின்றது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion