Chembarambakkam Lake: விடாது பெய்யும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன தெரியுமா?
இன்று காலை 9 மணியளவில் ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட உள்ளது
![Chembarambakkam Lake: விடாது பெய்யும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன தெரியுமா? chembarambakkam lake water level today north east monsoon in tamilnadu 2022 Chembarambakkam Lake: விடாது பெய்யும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/12/1cec837fb8c7fbbeb01e25141994d1511670810854848109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
![Chembarambakkam Lake: விடாது பெய்யும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/28a60c30d853e3d2aa93451c202290531667363035965109_original.jpg)
செம்பரம்பாக்கம் ஏரி
![Chembarambakkam Lake: விடாது பெய்யும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/28a60c30d853e3d2aa93451c202290531667363035965109_original.jpg)
ஏரி நிலவரம்
மாண்ட்ஸ் புயலின் எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது, குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து எதிரொலியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து முதல் கட்டமாக 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்பொழுது ஏரிக்கு நீர்வரத்து 2046 கன அடி குறைந்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் 22.65 அடியை எட்டியுள்ளது. 240 கனஅடியாக நீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட உள்ளது
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 25 மாவட்டங்களில் மழை..? வானிலை மையம் கொடுத்த அப்டேட் இதுதான்..!
அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஓரிரு இடங்களில் மிதமான மழை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைப்பொழிவு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் நாளை மறுநாள் (வரும் 13ஆம் தேதி) வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழைப்பொழிவு இருக்கும் எனவும், இது புயலாக மாறுமா? இல்லையா? என்பது வரும் காலங்களில் தான் தெரியும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்துள்ளதால், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதன் காரணமாக, இன்று 11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் 12.12.2022 மற்றும் 13.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)