Chembarambakkam Lake: இடி, மின்னல்.. அடித்து வெளுக்கும் கனமழை.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது
செம்பரம்பாக்கம் ஏரி
ஏரி நிலவரம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து முதல் கட்டமாக 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. படிப்படியாக இந்த தண்ணீர் திறந்து விடப்பட்டு 700 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்பொழுது ஏரிக்கு நீர்வரத்து 1510 கன அடி அதிகரித்துள்ளது. ஏரியில் இருந்து சுமார் 700 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் 20.15 அடியை எட்டியுள்ளது. மழை பெய்தால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் அல்லது படிப்படியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூண்டி ஏரி
பூண்டி ஏரியில் இருந்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரி
நீர்வரத்து 550 கன அடியாக உள்ளது. வெளியேற்றம் 29 கன அடியாக உள்ளது .
வானிலை அறிவிப்பு
13.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.