மேலும் அறிய
Advertisement
செம்பரம்பாக்கம் ஏரிக்கு குளிக்கச்சென்ற சகோதரர்கள்.. நீச்சல் தெரியாததால் உயிரிழந்த பரிதாபம்.. சோகத்தில் திருவள்ளூர்..
உடலை மீட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
செம்பரம்பாக்கம் ஏரியில் குளிக்க
சென்னைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி இருந்து வருகிறது. அதுபோக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பிடிக்கப்படும் மீன்கள் அந்தப் பகுதியில் விற்பனை செய்தும் வருகின்றனர். செம்பரம்பாக்கம் பகுதியில் விற்கப்படும் மீன்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இதன் காரணமாகவே செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீன் பிடிக்க மீனவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வப்பொழுது, செம்பரம்பாக்கம் ஏரியில் குளிக்க செல்லும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேலும், சகோதரர்களே இருவர் செம்பரம்பாக்கம் ஏரியில் முழுகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் சச்சின் (13), தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது உறவினர் வேலுமணி என்பவரின் மகன் நடிஷ் (13). அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்த இரண்டு சிறுவர்களும் அண்ணன், தம்பி உறவு முறையாகும். இருவரும் நேற்று மாலை செம்பரம்பாக்கம் ஏரியில் குளிக்க சென்றுள்ளனர்.
சடலமாக மீட்டனர்
செம்பரம்பாக்கம் ஏரியின் கரையில் அமர்ந்து குளித்து கொண்டிருந்தபோது திடீரென இருவரும் நிலை தடுமாறி நீரில் மூழ்கி உள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். இதனை கண்டதும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்து வந்த உறவினர்கள், ஏரியில் குதித்து தேடி நடீசை சடலமாக மீட்டனர். பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்துக்கு பின் சச்சின் உடலை மீட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் செம்பரம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion