Chennai Airport : சென்னை விமான நிலையத்திற்கு வந்த மிகப்பெரிய விமானம்.. பின்னணியில் பல ஆச்சரியத் தகவல்கள்...
குஜராத்திலிருந்து தாய்லாந்து செல்லும் வழியில், எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் தரையிறங்கி சென்றது.
உலகத்திலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான திமிங்கலம் வடிவிலான, "ஏா்பஸ் பெலுகா" முதல் முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.நெதர்லாந்து நாட்டை தலைமையிடமாக வைத்து, ஏர்பஸ் விமானம் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பயணிகள் விமானம், சரக்கு விமானங்களையும் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில், பல்வேறு வடிவிலான பெரிய ரக பொருட்களை சரக்கு விமானத்தில் ஏற்றிச் செல்வதற்கு வசதியாக, திமிங்கலம் வடிவில், சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் எனும் "பெலுகா" (A300-608ST) என்ற புதிய சரக்கு விமானத்தை, 1995 ஆம் ஆண்டில் ஏர்பஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது.
The elegant whale is here and with such awesomeness!
— Chennai (MAA) Airport (@aaichnairport) July 11, 2022
The mighty #Beluga No.2 (A300-608ST) landed at Chennai Airport for the first time, today. The cargo transporter is a rare vistor in this part of the world and a marvel to behold. @AAI_Official @MoCA_GoI @pibchennai pic.twitter.com/ZAFkb15AzQ
இந்த சரக்கு விமானத்தில் ஓரே நேரத்தில் 47 ஆயிரம் கிலோ எடையிலான சரக்குகளை ஏற்றி செல்லும் திறன் உடையது. இந்த ரக பெரிய சரக்கு விமானம் முதல் முறையாக சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தது.
இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுவதாவது, ஏர்பஸ் பெலுகா சரக்கு விமானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து, சென்னைக்கு இன்று காலை வந்தது.விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக இந்த சரக்கு விமானம் வந்தது. இந்த வகை பெரிய சரக்கு விமானம், சென்னைக்கு வருவது இதுவே முதல் முறை. எரிபொருள் நிரப்பிய பின், சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டின் தலைநகர் பட்டாயாவிற்கு புறப்பட்டுச் சென்றது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்