மேலும் அறிய

காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது.. அனைத்து கட்சியையும் அழைத்து டெல்லி செல்ல வேண்டும் - அன்புமணி

பாமக, இளைஞர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.

சென்னை பல்லாவரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில்  மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நடைற்றது. இந்நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.  தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் மாவட்ட நிர்வாகிகள், இதில் கலந்து கொண்டனர். 
 
கர்நாடக அரசு அடாவடித்தனம் 
 
முன்னதாக அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக ரசு அடாவடித்தனம் செய்கிறது இது கண்டிக்கத்தக்கது. காவிரி படுகையில் அணைகள் நிரம்பி இருக்கிறது. 84% நீர் இருக்கிறது. இங்கு நமக்கு வறட்சி இருக்கிறது. இப்போதைய சூழலை நம்மால் சமாளிக்க முடியவில்லை, மேகதாது அணையை கட்டினால் தண்ணீர் கிடைக்காது. தமிழக முதல்வர் அனைத்து கட்சியினரை அழைத்துக் கொண்டு டெல்லி செல்ல வேண்டும் என்றார். விவசாயிகளுக்கு தண்ணீர் வேண்டும். இதில் அனைத்து கட்சியும் உறுதுணையாக இருக்க வேண்டும் இதில் அரசியல் செய்ய வேண்டாம்.

காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது.. அனைத்து கட்சியையும் அழைத்து டெல்லி செல்ல வேண்டும் - அன்புமணி
நாங்குநேரி சம்பவம் கண்டிக்கத்தக்கது
 
சமீபத்தில் நடந்த நாங்குநேரி சம்பவம் கண்டிக்கத்தக்கது. பள்ளியில் தாக்குதல் நடந்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. போதைப் பொருள் அதிகளவில் பள்ளி அருகே விற்கபடுகிறது.  2 ஆண்டுகளாக போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி வருகிறேன். ஆனால் ஏதோ நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.
 
தமிழ்நாடு அரசு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை
 
என்.எல்.சி.மூன்றாவது சுரங்கம் அமைக்கப்படுவது குறித்து கேட்டதற்கு, சமீபத்தில் கூட நெய்வேலியில் 26 கிராமங்கள் அடங்கிய 12500 ஏக்கர் நிலங்கள் காவிரி டெல்டா பகுதியில் வருகிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக வருகிறது. என்.எல்.சி.நிர்வாகம் மூன்றாவது சுரங்கம் அமைக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலமைச்சர் சட்டமன்றத்திற்குள் ஒரு உத்தரவாதம் அளித்தார். ஆனால் அனுமதி கொடுக்க மாட்டோம் என ஒரு அறிவிப்பும் தற்போதுவரை வரவில்லை. மத்திய அமைச்சரிடம் நான் கேட்ட போது, இதுவரை தமிழ்நாடு அரசு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என சொல்லியதாக அன்புமணி கூறினார்.

காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது.. அனைத்து கட்சியையும் அழைத்து டெல்லி செல்ல வேண்டும் - அன்புமணி
என்.எல்.சி.விவகாரத்தில் பாமக உணர்வுப்பூர்வமாக போராடி வருகிறது. 65000 ஏக்கர் விளைநிலங்களை தமிழக அரசு குத்தகைக்கு விட்டுள்ளது. இதில் 40000 ஏக்கர் நிலங்களை அழித்து விட்டனர். சோறு போடும் புண்ணிய மண் இது, 38 மாவட்டத்தில் 4வது இடத்தில் வருவது கடலூர் மாவட்டம் நெல் உற்பத்தியில், அங்கு யாராவது இந்த திட்டத்தினை தொடர்வார்களா என கேள்வி எழுப்பினார். 
 
மிகப்பெரிய காமெடி
 
முதல்வர் சட்டமன்றத்தில் மூன்றாவது நிலக்கரி சுரங்கம் கொண்டு வரகூடாது என சொன்னார். விவசாயிகளை அச்சுறுத்தி நிலங்களை பிடுங்குகிறீர்கள், என்.எல்.சி.இல்லையென்றால் தமிழகம் இருண்டு விடும் என்பது மிகப்பெரிய காமெடி என விமர்சித்தார். என்.எல்.சி. தமிழகத்திற்கு 800 மெகாவாட்  மின்சாரம் தருகிறது. அதிகளவில் ஆந்திராவிற்கும், கர்நாடகாவிற்கும் தான் கொடுக்கிறது. எங்கள் மண்ணை அழித்து அவர்களுக்கு ஏன் மின்சாரம் தர வேண்டும்?
 
காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது.. அனைத்து கட்சியையும் அழைத்து டெல்லி செல்ல வேண்டும் - அன்புமணி
 
மண்ணுக்கு போராடியவர்கள் சிறையில் இருக்கிறார்கள்
 
மண்ணிற்காக போராடிய எங்கள் கட்சிக்காரர்கள் சிறையில் இருக்கிறர்கள். கஞ்சா விற்பவர்கள் எல்லாம் வெளியே இருக்கிறார்கள். வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து கலவரம் செய்ததாக வேளாண் அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அன்புமணி, ஜப்பானில் இருந்து ஆட்களை அழைத்து வந்தோமா?  கட்சிக்காரர்கள் வந்தார்கள் மண்ணுக்காக்க வந்தார்கள். வேளாண் துறை அமைச்சருக்காக போராட வந்தார்கள். அவருக்கு வேளாண் துறையை பற்றி தெரியுமானு தெரியல. இதிலென்ன வன்முறை. ஸ்டெர்லைட் வன்முறை இல்லையா? ஒரு போராட்டம் நடக்கிறது அங்கு. மூன்றாவது சுரங்கம் வராது என சொல்ல அமைச்சருக்கு என்ன தடுக்கிறது.
 
பூவுலக நண்பர்கள்
 
சமீபத்தில் பூவுலக நண்பர்கள் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்கள். அதில் என்.எல்.சி.சுற்றி வசிக்கும் 90% வீடுகளில் இருப்பவருக்கு ஏதோ ஒரு நோய் உள்ளது.  மெர்குரி 250% அதிகமாகியிருக்கு, இந்நேரம் தமிழக அரசு ஆய்வு செய்திருக்க வேண்டும், பொதுமக்கள் மீது அக்கறை கிடையாது, வேளாண் அமைச்சரின் குடும்பம் அங்குள்ளது அவர்கள் மீது அக்கறை வைத்து செய்திருக்கலாமே. அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. அவர் சொந்தகாரர் ஒப்பந்ததாரராக இருப்பதால் அமைதியாக இருக்கிறார்களா.?

காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது.. அனைத்து கட்சியையும் அழைத்து டெல்லி செல்ல வேண்டும் - அன்புமணி
 
பாஜகவை தவிர
 
நீட் மசோதா கையொப்பமிட மாட்டேன் என ஆளுநர் சொல்வது அவர் சொந்த கருத்தை திணிக்க கூடாது. நடுநிலையோடு செயல்பட வேண்டும். இது மக்களுடைய விருப்பம். எனக்கு பிடிக்கும் உங்களுக்கு பிடிக்காது என ஆளுநர் பிரதிபலிக்க கூடாது. தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்து கட்சிகளும் நீட் தேவையில்லை என தெரிவிக்கிறார்கள்.  ஆளுநர் சொல்லியது ஏற்றுக்கொள்ள முடியாது. காசு இருந்தா மட்டும் தான் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
 
காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது.. அனைத்து கட்சியையும் அழைத்து டெல்லி செல்ல வேண்டும் - அன்புமணி
 
7.5% இட ஒதுக்கீடு இல்லை என்றால் அரசு பள்ளி மாணவர்கள் விரல் விட்டு எண்ணும் வகையில் தான் இருந்திருப்பார்கள். எதற்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு நடத்துகிறீர்கள் நீட் மட்டும் நடத்துங்க, அறிவு சார்ந்த கல்வி இல்லை, பயிற்சி சார்ந்த கல்வி இல்லை என்றார். நீட் பயிற்சி மையங்கள் தமிழ்நாட்டில் மூட வேண்டும் என ஆளுநர் ஒப்புக் கொள்வாரா. நீட் ஏழை பிள்ளைகளுக்கு எதிரானது ஆளுநர் இது போன்ற பேச்சை நிறுத்தி வைக்க வேண்டும்
 
மணிப்பூருக்கு பிரதமர் செல்ல வேண்டும்
 
மணிப்பூர் விவகாரம் மோடி பேச்சு திருப்திகரமாக இருந்ததா என கேட்டதற்கு. எல்லை கடந்த பிரச்சனையாக பார்க்கிறேன். இரு சமூக மத பிரச்சினை, மத்திய அரசு இன்னும் கவனம் செலுத்தி சரிபடுத்த வேண்டும்.பிரதமர் அங்கு சென்று ஒரு உத்திரவாதம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget