மேலும் அறிய

மது போதையில் நண்பரை சுத்தியால் அடித்து கொலை செய்த நபர் கைது

’’கைது செய்யப்பட்ட முரளிகிருஷ்ணன் மீது கொத்தவால்சாவடி பகுதியில் கொலை வழக்கு உள்ளது என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது’’

சென்னை வியாசர்பாடி தேபர் நகர் 10 ஆவது தெருவை சேர்ந்தவர் சூர்யா (32). இவர் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவருக்கு அதிக குடிப்பழக்கம் உள்ளது என கூறப்படுகிறது. இவரது அண்ணன் விஜயகாந்த் என்பவர் தனியாக வீடு எடுத்து சூர்யாவை தங்க வைத்துள்ளார். தேவைப்படும் போது பணம் கொடுத்து உதவி வந்துள்ளார். சூர்யாவுக்கு பாரிமுனை  பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் (37) மற்றும் பெரியபாளையத்தை சேர்ந்த தினேஷ் (30) என்ற இரு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி சூர்யா வீட்டிற்கு வந்து மது அருந்துவது வழக்கம். அதே போன்று இருவரும் வந்து சூர்யா வீட்டில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது சூர்யா மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து முரளிகிருஷ்ணனின் அண்ணன் சசி குமார் என்பவரிடம் பணம் கேட்டு வாங்கி தருமாறு கூறி உள்ளனர்.
 
அதற்கு முரளி கிருஷ்ணா என்னால் முடியாது  என்று கூறியுள்ளார். அப்போது முழு மது போதையில் இருந்த சூர்யா மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து முரளி கிருஷ்ணனை அடித்துள்ளனர். அதன் பிறகு தினேஷ் வீட்டிற்குச் சென்று விட்டார். சூர்யா மற்றும் முரளி கிருஷ்ணன் ஆகிய இருவரும் வீட்டிலேயே தூங்கி விட்டனர். முரளி கிருஷ்ணன் எழுந்து எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள ஒரு  கடைக்குச் சென்று  சுத்தி வாங்கியுள்ளார். அதை சூர்யா வீட்டிற்கு எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த சூர்யாவை தட்டி எழுப்பி உள்ளார். அப்போது என்னை இருவரும் சேர்ந்து ஏன் அடித்தீர்கள் என கேட்டுள்ளார்.  

மது போதையில் நண்பரை சுத்தியால் அடித்து கொலை செய்த நபர் கைது
 
அப்போது மது போதையில் இருந்த சூர்யாவை  கையில் இருந்த சுத்தியை எடுத்து ஓங்கி சூர்யா தலையில் பலமாக முரளி கிருஷ்ணா அடித்துள்ளார். அப்போது சூர்யா சம்பவ இடத்திலேயே துடி துடித்து மயக்கமடைந்தார். அதன் பிறகு முரளி கிருஷ்ணா அங்கிருந்து கிளம்பி விட்டார். சிறிது நேரம் கழித்து சூர்யாவின் அண்ணன் விஜயகாந்த் சூர்யா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது  சூர்யா ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சூர்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்த போதிலும் இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி சூர்யா உயிரிழந்தார். இதுகுறித்து உடனடியாக எம்.கே.பி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு சென்ற எம்.கே.பி நகர் போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து பாரிமுனை பகுதியில் பதுங்கியிருந்த முரளி கிருஷ்ணனை கைது செய்தனர்.

மது போதையில் நண்பரை சுத்தியால் அடித்து கொலை செய்த நபர் கைது
 
கைது செய்யபட்ட முரளி கிருஷ்ணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முரளி கிருஷ்ணா அடிக்கடி அவரது அண்ணன் சசிகுமாரை  மிரட்டி  பணம் வாங்கி உயிரிழந்த சூர்யாவிற்கு மது வாங்கிக் கொடுத்தது தெரிய வந்தது. சம்பவத்தன்று சூர்யா மற்றும் தினேஷ் ஆகிய இருவரும்  சசிகுமாரிடம் பணம் கேட்டு வாங்கி வரச் சொல்லி தகராறில் ஈடுபட்டதால் போதையில் கொலை செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும்  கைது செய்யப்பட்ட முரளிகிருஷ்ணன் மீது கொத்தவால்சாவடி பகுதியில் கொலை வழக்கு உள்ளது என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதுபோதையில் நண்பரையே சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

" கணவரின் காலைப் பிடித்த மனைவி " தலையணையால் அமுக்கிய கள்ளக் காதலன் —தப்பிய கணவனின் அலறல் சத்தம்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
திருமணம் மீறிய உறவு !! கணவனை பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழப்போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
திருமணம் மீறிய உறவு !! கணவனை பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழப்போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramayana Trailer: ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
Embed widget