மேலும் அறிய

EPS Condemns: “மெட்ரோவுல அம்மா ஜெயலலிதா பெயரை நீக்கிட்டாங்க” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை இருட்டடிப்பு செய்யும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தை கடுமையாக கண்டிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்  பெயரை இருட்டடிப்பு செய்யும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தை கடுமையாக கண்டிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அறிக்கை:

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்..

 2011ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, Chennai Metro Rail Limited (CMRL) என்று அழைக்கப்படும், சென்னை மெட்ரோ ரயில் லிட், - கட்டம் 1-ன் பணிகளை விரைவாக நடத்தி முடிக்க ஆணையிட்டார்கள். அதன்படி, மெட்ரோ ரயில் பணிகள் குறித்த காலத்தில் நடைபெற்று வந்தது. மேலும், வட சென்னை மக்களின் கோரிக்கையினை ஏற்று, திருவொற்றியூர் ! விம்கோ நகர் வரையிலான விரிவாக்கத் திட்டத்திற்கு 23.7.2016 அன்று அடிக்கல் நாட்டினார்கள்.

  • 21.9.2016 அன்று சென்னை விமான நிலையம் - லிட்டில் மவுண்ட் வரையான முதல் மெட்ரோ போக்குவரத்தினை, ஜெயலலிதா துவக்கி வைத்தார்கள்.
  • 14.5.2017 அன்று திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தை முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
  • 25.5.2018 அன்று நேரு பூங்கா முதல் சென்னை சென்ட்ரல் வரையும், மற்றும் சைதாப்பேட்டை முதல் ஏஜி-டி.எம்.எஸ். வரையான மெட்ரோ ரயில் போக்குவரத்தை துவக்கி வைத்தேன்.
  • 10.2.2019 அன்று ஏஜி-டிஎம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தை துவக்கி வைத்தேன். இத்துடன் சென்னை மெட்ரோ இரயில் கட்டம் 1-ன், ரூ.18,380 கோடி மதிப்பீட்டில் 45.1 கி.மீ நீளத்திலான பணிகள் முடிவடைந்தன.
  • திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான பெட்ரோ இரயில் கட்டம்-1-ள் நீட்டிப்பு வழித் தடத்தினை 14.02.2021 அன்று  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன்படி, 3,770 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 9.051 கினே மீட்டர் நீட்டிப்பு பணிகள் முழுமையடைந்து மெட்ரோ ரயில் கட்டம்-1 மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக வந்தது.
  • 21.11.2020 அன்று உள்துறை அமைச்சர் முன்ளிலையில், சென்னை மாநகரின் புறநகர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக, 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.90 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ இரயில் கட்டம் - 2 திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்கள்.

இவ்வாறு Chennai Metro Rail Limited (CMRL) என்று அழைக்கப்படும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனப் பணிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின், ஜெயலலிதா ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அரசிலும் விரைவுபடுத்தப்பட்டு, குறித்த காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது என்றால் அது மிகையல்ல.

ஆனால், இந்நிறுவனம் கடந்த சில நாட்களாக ஜெயலலிதாவின் பெயரை இருட்டடிப்பு செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இறங்குவதற்கு வசதியாக, ஒவ்வொரு நிறுத்தம் வருவதற்கு முன்பும், அந்த நிறுத்தத்தின் பெயரை அறிவிப்பு செய்வது வழக்கம். சென்ற வாரம் வரை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது தமிழக அரசு சூட்டிய புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்" என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அந்த நிறுத்தத்தின் பெயரை முழுமையாக அறிவிப்பு செய்து வந்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக மெட்ரோ ரயில் நிர்வாகம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது புட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலிதா பேருந்து நிலையம் என்று அறிவிப்பு செய்யாமல் பேருந்து நிறுத்தம்" என்று மட்டுமே அறிவிப்பு செய்கிறது. தமிழக அரசு சூட்டிய பெயரை மெட்ரோ ரயில் நிர்வாகம் முழுமையாக அறிப்பு செய்வதில்லை. ஜெயலலிதாவின் பெயரை இருட்டிப்பு செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியதுஎன எடப்பாடிபழனிசாமி தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
Trump Greenland NATO: கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
ABP Premium

வீடியோ

நடுரோட்டில் பயங்கரம் !DELIVERY BOY-க்கு கத்திக்குத்துசரமாரியாக வெட்டிய நபர்கள்
காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out
”தாய் மதத்துக்கு திரும்பு”கொந்தளிக்கும் பாஜகவினர்!AR ரஹ்மான் சர்ச்சை பின்னணி?
19 பீர் பாட்டில்கள்... நண்பர்களின் விபரீத போட்டி! பறிபோன உயிர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
Trump Greenland NATO: கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
Jan 23 Release : மங்காத்தா ரீரிலீஸ் முதல் திரெளபதி 2 வரை...ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் படங்கள்
Jan 23 Release : மங்காத்தா ரீரிலீஸ் முதல் திரெளபதி 2 வரை...ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் படங்கள்
Chennai Power Shutdown: சென்னைல ஜனவரி 21-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் பண்ணப் போறாங்க தெரியுமா.? பாருங்க
சென்னைல ஜனவரி 21-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் பண்ணப் போறாங்க தெரியுமா.? பாருங்க
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
Embed widget