மேலும் அறிய
Advertisement
மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக அடிகளார் பேரன் கே.ப.அ.அகத்தியன் தேர்வு.
மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக அடிகளாரின் பேரன் கே.ப.அ.அகத்தியன் தற்பொழுது ஊராட்சிமன்றத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். kish
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக். 6ம் தேதியும், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,9-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.
பொதுவாக ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் கட்சிகள் தங்களின் அடிமட்ட பலத்தை அதிகரிக்கும் வகையில் தனியாக நிற்பது வழக்கம். அதேபோல் ஒவ்வொரு ஊரிலும் புகழ்பெற்று விளங்கும் நபர்கள், பிரபலங்கள் தனித்து சுயேட்சையாக போட்டியிடுவதும் வழக்கம். அந்த வகையில் மேல்மருத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அடிகளாரின் மனைவி லட்சுமி, போட்டியிட வேட்புமனு தாக்கல் தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யதால், போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவர் ஆனார் லட்சுமி .
துணைத் தலைவர்
நேற்று முன்தினம் மேல்மருவத்தூர் ஊராட்சியில் அடிகளாரின் மனைவி லட்சுமி ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அதேபோல் வார்டு எண் 2 இல் போட்டி இல்லாமல் வெற்றி பெற்ற ஸ்ரீ தேவி அடிகளாரின் மகள் ஆவார். அதேபோல், வார்டு எண் 6 இல் போட்டியிட்டு வெற்றிபெற்ற அகத்தியன், அடிகளாரின் மகன் வழி பேரன் ஆவர். ( அடிகளாரின் மூத்த மகன் கே.ப. அன்பழகனின் மகன் ).
இதனையேடுத்து இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலுக்கு அகத்தியன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடுவதால் ஒருமனதாக அகத்தியன் ஊராட்சிமன்றத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை மேல்மருவத்தூர் அடிகளார் குடும்பத்தினர் கைப்பற்றியுள்ளனர். முன்னதாக பதவி ஏற்றபின் பேசிய அடிகளாரின் மனைவி லட்சுமி கூறுகையில், ”மக்களுக்கு சேவை செய்வதில் அகத்தியர் மிகுந்த ஈடுபாடுடன் உள்ளார். அவர் என்னுடைய வாரிசு. அவர் எனக்கு பேரனாக இருப்பதைவிட மகனாகப் பிறந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்” எனக்கூறி மேடையிலேயே அகத்தியனுக்கு முத்தம் கொடுத்தார்.
சொத்து மதிப்பு குழப்பம்
முன்னதாக கடந்த மாதம் 16 ஆம் தேதி பங்காரு அடிகளாரின் மனைவி தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது மொத்த சொத்து மதிப்பு அசையும் சொத்துக்கள் - 75,149,141 , அசையா சொத்துக்களின் மதிப்பு - 160,280,003 , இதன் கூட்டுத்தொகை 23,54,29,144 வருகிறது. ஆனால் வேட்பு மனுவில் , அதற்கு பதிலாக 253,54,29,144 என தவறாக குறிப்பிடப்பட்டது. இதன் காரணமாக சமூக வலைத்தளத்தில் 250 கோடி ரூபாய் சொத்து மதிப்பு என பரவத்துவங்கியது. இதுதொடர்பாக மேல்மருவத்தூர் வட்டாரங்கள் இச்செய்தியை மறுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து 20 ஆம் தேதி லஷ்மி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். தனது அசையும் சொத்துக்களின் மதிப்பு 95,495,146 அசையா சொத்துக்களின் மதிப்பு 160,280,003 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தனது சொத்து மதிப்பு 25,57,75,149 எனக் குறிப்பிட்டுள்ளார்.
வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அடிகளார் மகள் மற்றும் அவரை சார்ந்தோர் சொத்து மதிப்பு 133,409,870 என வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் அடிகளாரின் பேரனான அகத்தியன் சொத்து மதிப்பு 6,91,45,207 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவருடைய சார்ந்தோர் சொத்து விவரம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சேலம்
தமிழ்நாடு
க்ரைம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion