TN Rain Alert: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட் இதோ..
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 4 தினங்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
21.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22.03.2023 மற்றும் 23.03.2023: கடலோர தமிழக மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
24.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெலாந்துறை (கடலூர்) 9, அண்ணாமலை நகர் (கடலூர்), சிதம்பரம் AWS (கடலூர்), தொழுதூர் (கடலூர்) தலா 8, வேப்பூர் (கடலூர்) 7, கீழச்செருவாய் (கடலூர்), கல்லணை (தஞ்சாவூர்), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), அகரம் சீகூர் (பெரம்பலூர்), தொண்டி (ராமநாதபுரம்) தலா 6, செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக விட்டு விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தாம்பரம், சேலையூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பூமியின் உஷ்ணம் தணிந்து குளிர்ந்துள்ளது. இருப்பினும் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. காற்றின் உள்ள ஈரப்பதம் குறைந்துள்ளதால் வெப்பநிலை அதிகரித்துள்ளது. மீண்டும் மழை வந்தால் வெப்பநிலை குறையும்.