திருவொற்றியூர் : வகுப்பறைகளில் கசிந்த மழை நீர்... சென்னை மாநகராட்சி பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை..
வட்டாரக் கல்வி அலுவலர் பால்சு தாகர், அலுவலர்களுடன் பள்ளியைப் பார்வையிட்டு தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசித்தார்.
சென்னை, திருவொற்றியூரில் உள்ள பழைய கட்டடத்தில் இயங்கிவரும் அரசு ஆரம்பப் பள்ளியில் மழைநீர் கசிந்ததை அடுத்து, பள்ளிக்கு மூன்று நாள்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மணலி அரசு ஆரம்பப் பள்ளி
சென்னை, திருவொற்றியூரில் உள்ள மணலி பாடசாலைத் தெருவில் அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. 1932ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை சுமார் 1,100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் 12 கட்டடங்களும் 19 வகுப்பறைகளும் உள்ளன. இதில் பெரும்பாலான கட்டடங்கள் 25 ஆண்டுகள் பழமையானவை.
பள்ளியில் மழைநீர் கசிவு
இதனால் இந்தப் பழைய கட்டடத்தை இடித்து விட்டு ரூ.9 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. ஆனால் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று (ஜூன்.21) அதிகாலை பெய்த மழையால் பள்ளியின் பல வகுப்பறைகளில் மழைநீர் கசிந்தது.
பள்ளிக் கட்டடம் ஏற்கெனவே பழுதடைந்துள்ள நிலையில், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி நேற்று (ஜூன்.20) பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு, பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்கள் அனைவரும் பெற்றோர்களின் பாதுகாப்புடன் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்
இதனிடையே வட்டாரக் கல்வி அலுவலர் பால்சு தாகர், அலுவலர்களுடன் பள்ளியைப் பார்வையிட்டு, தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசித்தார். இதன் காரணமாக மேலும் இரண்டு நாள்கள் பள்ளிக்கு விடுமுறை விட ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
பெற்றோர் கோரிக்கை
பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் ஆங்கில வழிக்கல்வி, ஸ்மார்ட் வகுப்பு, கணினி அறை மாணவ,மாணவர்களின் திறன்மேம்படுத்த யோகா, சிலம்பம் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் பயிற்சி அளிக்கப்பட்டு வரும் சிறந்த பள்ளியாக இப்பள்ளி இயங்கி வருவதாக பெற்றோர்கள் இப்பள்ளிக்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், சிறந்த கல்வி பயிற்சி அளித்தும் பள்ளிக் கட்டடம் பழுதடைந்து இருப்பதால் பெற்றோர்கள் இப்பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு சற்று தயக்கம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், பள்ளிக் கட்டடத்தை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்