மேலும் அறிய

Kanchipuram Lakes : அட அதுக்குள்ள இவ்வளவு ஏரிகள், முழு கொள்ளளவை எட்டி நிரம்பிடுச்சா? காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளின் நிலவரம் இதுதான்..

காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் 17 ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. பாலாறு படுக்கைக்கு கீழ் வரும் ஏரிகளில் 43 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் ஏரிகள் நிறைந்த மாவட்டங்களாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பாலாற்றில் மையமாக வைத்து ஏராளமான ஏரிகள் இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ளன. பாலாறு படுக்கைக்கு கீழ் வரும் ஏரிகள் காரணமாக, அதிக அளவு விவசாயமும் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் நிரம்பும் ஏரிகளை நம்பி , காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சார்ந்த பெரும்பாலும் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். அதேபோல காஞ்சிபுரம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த குடிநீர் ஆதாரமாகவும் சில ஏரிகள் இருந்து வருகின்றன. 
 
Kanchipuram Lakes : அட அதுக்குள்ள இவ்வளவு ஏரிகள், முழு கொள்ளளவை எட்டி நிரம்பிடுச்சா? காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளின் நிலவரம் இதுதான்..
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த பிரதான ஏரிகள்
 
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி, தென்னேரி, உத்திரமேரூர் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி, எடமிச்சி ஏரி ஆகியவை உள்ளன. 
 
வடகிழக்கு பருவமழை
 
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் நல்ல மழை பெய்தது. இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிக அளவில் கைகொடுக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையில் நீடிக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த ஓராண்டு மேலாக அவ்வப்பொழுது மழை பெய்து, வந்ததால் ஏரிகள் முழுமையாக வற்றாமல் இருந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 17 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

Kanchipuram Lakes : அட அதுக்குள்ள இவ்வளவு ஏரிகள், முழு கொள்ளளவை எட்டி நிரம்பிடுச்சா? காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளின் நிலவரம் இதுதான்..
 
பாலாறு படுகை ஏரிகள்
 
காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சுமார் 1022 ஏரிகள் உள்ளன. அவற்றில் 43 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 14 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 3 ஏரி, சென்னையை மாவட்டத்தை சேர்ந்த 1 ஏரி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 25 ஏரி ஆகியவை முழு (100 சதவீத கொள்ளளவு) கொள்ளளவை எட்டியுள்ளது. 
 
76% - 99%  கொள்ளளவை எட்டிய ஏரிகள்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32 ஏரிகள் , செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஏரிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில்  19 ஏரிகள், சுமார் 76% சதவீதத்திலிருந்து 99% சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது.
 
Kanchipuram Lakes : அட அதுக்குள்ள இவ்வளவு ஏரிகள், முழு கொள்ளளவை எட்டி நிரம்பிடுச்சா? காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளின் நிலவரம் இதுதான்..
 
51%- 75% கொள்ளளவை எட்டிய ஏரிகள்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89 ஏரிகள் ,செங்கல்பட்டு மாவட்டத்தில் 33 ஏரிகள், சென்னையில் 8 ஏரிகள், திருவண்ணாமலையில் 27 ஏரிகள், சுமார் 51 சதவீதத்திலிருந்து 75 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது.
 
26%- 50% கொள்ளளவை எட்டிய ஏரிகள்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 183 ஏரிகள் ,செங்கல்பட்டு மாவட்டத்தில் 146 ஏரிகள், சென்னையில் 7ஏரிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 ஏரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 1 ஏரி ,26%- 50% கொள்ளளவை எட்டியுள்ளது.
 
25 சதவீதத்திற்கும் கீழ் உள்ள ஏரிகள்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 63 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 338 ஏரிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஏரி, திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் நீர் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருவதால், கால்வாய்களில் நீர் வரத்து அதிகரிக்க துவங்கியிருப்பதால், விரைவாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்னும் பல ஏரிகள் நிரம்பும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வில் சோகம்..கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர்  பலி!
Breaking News LIVE: உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வில் சோகம்..கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலி!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வில் சோகம்..கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர்  பலி!
Breaking News LIVE: உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வில் சோகம்..கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலி!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
"சிலரின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது" நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு!
Embed widget