மேலும் அறிய

Chennai Cybercrime: சென்னையில் ரூ.189 கோடி அபேஸ், அதிகரிக்கும் சைபர் கிரைம் - 8 மாதங்களில் 1,679 வழக்குகள்

Chennai Cybercrime: சென்னையில் கடந்த 8 மாதங்களில் மட்டும் ஆயிரத்து 679 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Cybercrime: சென்னையில் கடந்த 8 மாதங்களில் மட்டும் சைபர் குற்றச்சாட்டுகளால் 189 கோடி ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்:

வழிப்பறி, திருட்டு சம்பவங்கள், செயின் பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது இருந்த இடத்திலிருந்தே வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கி லிருந்து மொத்த பணத்தையும் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. டிஜிட்டல் மயம் என்பது ஒருபுறம் பெரும் வரப்பிரசாதமாக கருதப்பட்டாலும், அது பெரும் எதிர்வினைகளையும் கொண்டிருக்கும் என்பதை தான் இந்த சைபர் குற்றங்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.   அந்த வகையில் சென்னையில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக 1,679 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1,589 வழக்குகள் நிதி இழப்பு தொடர்பான சைபர் குற்றங்கள் ஆகும்.

ரூ.189 கோடி இழப்பு:

போலீசார்டம் வழங்கப்பட்ட பல்வேறு மோசடி புகார்களின் அடிப்படையில், சைபர் குற்றங்கள் வாயிலாக சுமார் ரூ.189 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அவை ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி, பெடக்ஸ் கூரியர் மோசடி, ஸ்கைப் மோசடிகள், போலீஸ் அதிகாரி பெயரில் மோசடி, ஆன்லைன் பகுதிநேர வேலை மோசடி, திருமண மோசடி, பரிசு மோசடி என மோசடிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இதுபோன்ற மோசடி வாயிலாக பொதுமக்கள் ஏமாறுவதைத் தடுக்கவும், மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சைபர் கிரைம் போலீசாருக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும், சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை விசாரிப்பது தொடர்பாக அப்பிரிவு போலீசாருக்கு வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளார்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை:

பொதுமக்கள், அதிக லாபம் தருவதாக வெளியாகும் முதலீட்டு விளம்பரங்கள், போலியான முதலீட்டு செயலிகள், வலைதளங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறியாத வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்த வேண்டாம். சைபர்குற்றங்கள் மூலம் பாதிக்கப்பட்டால் சைபர் குற்றங்களுக்கான ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களிலும் புகார் தெரிவிக்கலாம் என காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தியுள்ளார். மேலும், முன்பின் தெரியாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளில் உள்ள, இணைய லிங்கை கிளிக் செய்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

பணத்தை மீட்பது எப்படி?

நிதி இழப்பு சைபர் குற்றங்களில் பணத்தை இழந்தவர்கள் என்சிஆர்பி பதிவு செய்து, பிறகு தங்கள் எல்லைக்கு உட்பட்ட சைபர் குற்ற போலீஸ் நிலையத்தை அணுகி, சந்தேகத்திற்கிடமான முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் தங்களது பணம் முடக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம். என்சிஆர்பி பதிவு எண் மற்றும் சைபர் போலீசாரின் அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளியின் வங்கிக் கணக்குகளில் முடக்கப்பட்ட தொகைகளை பெறுவதற்காக தங்கள் எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் சட்ட பிரிவின்படி மனு தாக்கல் செய்யலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பதில்
துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பதில்
Watch Video: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒரு பவுல் அவுட் போட்டி! பாகிஸ்தானை பஞ்சராக்கிய நாள் இன்று!
Watch Video: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒரு பவுல் அவுட் போட்டி! பாகிஸ்தானை பஞ்சராக்கிய நாள் இன்று!
Breaking News LIVE 14 Sep: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது
Breaking News LIVE 14 Sep: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது
Bajaj Chetak Blue vs TVS iQube: பஜாஜ் சேடக் ப்ளூ? டிவிஎஸ் ஐக்யூப்? எந்த மின்சார ஸ்கூட்டர் வாங்கலாம் - ஒப்பீடு இதோ..!
Bajaj Chetak Blue vs TVS iQube: பஜாஜ் சேடக் ப்ளூ? டிவிஎஸ் ஐக்யூப்? எந்த மின்சார ஸ்கூட்டர் வாங்கலாம் - ஒப்பீடு இதோ..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nirmala Sitharaman angry : வழிமறித்த இளைஞர்! வெடுக்குனு பேசிய நிர்மலா! ”டெல்லிக்கு வந்து பேசுங்க”Rahul Gandhi Annapoorna issue : ”ஆணவமா நிர்மலா? திமிர் பிடித்த பாஜக” எகிறி அடித்த ராகுல்Annamalai Apology to Nirmala Sitharaman on annapoorna srinivasan issue : பணிந்தது பாஜக!மன்னிப்பு கேட்ட அ.மலை!நிர்மலாவுக்கு பின்னடைவுAnnapoorna Srinivasan apologizes Nirmala | நிர்மலாவிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஓனர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பதில்
துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பதில்
Watch Video: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒரு பவுல் அவுட் போட்டி! பாகிஸ்தானை பஞ்சராக்கிய நாள் இன்று!
Watch Video: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒரு பவுல் அவுட் போட்டி! பாகிஸ்தானை பஞ்சராக்கிய நாள் இன்று!
Breaking News LIVE 14 Sep: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது
Breaking News LIVE 14 Sep: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது
Bajaj Chetak Blue vs TVS iQube: பஜாஜ் சேடக் ப்ளூ? டிவிஎஸ் ஐக்யூப்? எந்த மின்சார ஸ்கூட்டர் வாங்கலாம் - ஒப்பீடு இதோ..!
Bajaj Chetak Blue vs TVS iQube: பஜாஜ் சேடக் ப்ளூ? டிவிஎஸ் ஐக்யூப்? எந்த மின்சார ஸ்கூட்டர் வாங்கலாம் - ஒப்பீடு இதோ..!
CM MK Stalin:
CM MK Stalin: "11 ஆயிரம் பேருக்கு வேலை! அமெரிக்க பயணம் சாதனைக்குரியது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Suryakumar Yadav Birthday: மிஸ்டர் 360..உலகக் கோப்பை நாயகன்.. சூர்ய குமார் யாதவ் பிறந்தநாள்! சாதனைகள் என்ன?
Suryakumar Yadav Birthday: மிஸ்டர் 360..உலகக் கோப்பை நாயகன்.. சூர்ய குமார் யாதவ் பிறந்தநாள்! சாதனைகள் என்ன?
IND Vs Bang Test: 92 ஆண்டு கால சோகம் - டெஸ்ட் வரலாற்றில் சாதனை படைக்குமா ரோகித் படை? சென்னையில் இந்தியா Vs வங்கதேசம்
IND Vs Bang Test: 92 ஆண்டு கால சோகம் - டெஸ்ட் வரலாற்றில் சாதனை படைக்குமா ரோகித் படை? சென்னையில் இந்தியா Vs வங்கதேசம்
Kundrakudi Temple Elephant:  குன்றக்குடி கோயில் யானையின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Kundrakudi Temple Elephant: குன்றக்குடி கோயில் யானையின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Embed widget