மேலும் அறிய

Fengal Cyclone: நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.. பதற்றத்தில் செங்கல்பட்டு ? எச்சரிக்கை நடவடிக்கை என்ன ?

Fengal Cyclone Chengalpattu: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் 

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையே இன்று கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை -2024 தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 29.11.2024 முதல் 01.12.2024 வரை கன மற்றும் மிக கனமழை பெய்ய உள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை மூலம் முன்னெச்சரிக்கை அறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தயார் நிலையில் முகாம்கள் 

செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரையில் வெள்ள நீரால் பாதிக்கப்படக்குடிய தாழ்வான பகுதிகளாக 390 பகுதிகள் கண்டறியப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மேற்படி வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை மழைகாலங்களில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பொருட்டு 290 நிவாரண முகாம்கள் தாயார் நிலையில் உள்ளது. மேலும் 15 மண்டல அலுவலர்களை கொண்ட 33 Inter Departmental Zonal Teams அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் பொருட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளது. துணை ஆட்சியர் நிலையில் வட்ட அளவிளான கண்காணிப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. 

Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்

தயார் நிலையில் உபகரணங்கள் 

மேலும் அனைத்து துறைகளிலும் வெள்ள தடுப்பு உபகரணங்களான மணல் மூட்டை சவுக்கு கட்டை, ஜேசிபி, படகுகள், மரமருக்கும் இயந்திரங்கள். கயிறு. தார்பாய்கள், மருந்து மாத்திரைகள், பொக்லைன் இயந்திரம், மின் மரவெட்டி, ஆம்புலன்ஸ். நீர் இரைக்கும் இயந்திரம். ஜெனரெட்டர். மின்மாற்றிகள் போதுமான அளவில் தயார் நிலையில் உள்ளது. வெள்ள பாதிப்புக்குட்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் 4500 தன்னார்வலர்கள் மாவட்ட, கோட்ட மற்றும் வட்டார அளவில் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களுக்கு எச்சரிக்கை என்ன ?

மேலும் பொது மக்கள் இந்த கன மழையின் போது எவரும் ஆறு, ஏரி, குளங்கள் போன்ற ஆழமான நீர் நிலைகள் உள்ள பகுதிகளில் செல்லாமலும், மின் கம்பம் போன்றவற்றில் கால்நடைகளை கட்டி வைக்காமல் இருக்குமாறும், அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் மீனவர்கள் எவரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கடலோர பகுதிகளில் வசித்துவரும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் TN Alert ஆப் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் இயற்கை இடர்பாடுகள் குறித்த முன்னனெச்சரிக்கை செய்திகளை பெற்று பயன் பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்பு கொள்வது எப்படி ?

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்துவரும் பொதுமக்கள். இயற்கை இடர்பாடுகள் குறித்த புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் அவசர கட்டுபாட்டு அறை (24x7) தொலைபேசி எண்கள் மற்றும் What's App மூலம் எளிதில் உடனுக்குடன் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொலைபேசி எண்கள் விவரம் கீழ்கண்டவாறு.

கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு - 1077

கைபேசி 

044-27427412

044-27427414

வாட்ஸ் ஆப் எண்

9444272345

பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
IND vs AUS:
IND vs AUS: "கண்டா வரச் சொல்லுங்க" சிட்னியில் சிங்க முகம் காட்டுவார்களா ரோகித் - விராட்? ஏங்கும் ரசிகர்கள்!
Happy New Year 2025:
Happy New Year 2025: "இனி உச்சம்தான்" பிறந்தது புத்தாண்டு! ஆடிப்பாடி ஆனந்தமாய் வரவேற்ற மக்கள்!
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
Rule Changes: இனிமே இப்படி தான்..! இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிகள் - லாபமா? நஷ்டமா?
IND vs AUS:
IND vs AUS: "கண்டா வரச் சொல்லுங்க" சிட்னியில் சிங்க முகம் காட்டுவார்களா ரோகித் - விராட்? ஏங்கும் ரசிகர்கள்!
Happy New Year 2025:
Happy New Year 2025: "இனி உச்சம்தான்" பிறந்தது புத்தாண்டு! ஆடிப்பாடி ஆனந்தமாய் வரவேற்ற மக்கள்!
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!
Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!
small savings: 2025ம் ஆண்டின் முதல் நாளே ஏமாற்றம்..! சிறுசேமிப்பு திட்டங்கள், எந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி? - மத்திய அரசு
small savings: 2025ம் ஆண்டின் முதல் நாளே ஏமாற்றம்..! சிறுசேமிப்பு திட்டங்கள், எந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி? - மத்திய அரசு
Vidaamuyarchi Postponed: 'விடாமுயற்சி' பொங்கல் ரிலீஸ்னு ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த அஜித்! லைகா அறிக்கையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Vidaamuyarchi Postponed: 'விடாமுயற்சி' பொங்கல் ரிலீஸ்னு ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த அஜித்! லைகா அறிக்கையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
Embed widget