மேலும் அறிய

Book Fair 2023 : மீண்டும் வந்துவிட்டது செங்கை புத்தக திருவிழா..! முழு தகவல் இதோ..!

Chengai Book Fair 2023 : 2023 டிசம்பர் 28 முதல் 2024 ஜனவரி 4-ஆம் தேதி வரை செங்கை புத்தகத்திருவிழாவாக நடைபெற உள்ளது

செங்கல்பட்டு மாவட்டம்  பார்வை

சிற்பக்கலையின் மாமன்னன் மாமல்லனின் மாமல்லபுரம் சிற்பங்களும், கடல்போன்று பரந்து விரிந்த மதுராந்தகம் ஏரியும், வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயங்களும், 'சங்குத்தீர்த்தம்' 'பட்சித்தீர்த்தம்' எனப் புகழப்படுகின்ற, வேதகிரீஸ்வரர் ஆலயமும், செங்கல்பட்டு நகரை ஒட்டிய கொளவாய் ஏரியும், சுழித்துக்கொண்டு பாய்கின்ற பாலாறும், மலைகளும் அமைந்திருக்கின்ற செங்கல்பட்டு மாவட்டம் மிக முக்கிய நகரமாக இருந்து வருகிறது.

 செங்கை புத்தகத் திருவிழா  ( chengalpattu book fair 2023 )

செங்கல்பட்டு மாவட்டத்தில்  தனியார்   அமைப்புகள் சார்பில்  ஆண்டு தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடைபெற்று வந்தன. புதிதாக பொறுப்பேற்ற தமிழ்நாடு அரசு மாவட்ட முழுவதும் மாவட்ட   நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழாக்கள்  நடத்த தீவிரம் காட்டியது.  இதனால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மிக விமரிசையாக, ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் கடந்த ஆண்டு செங்கல்பட்டு  புத்தகத் திருவிழா  மாவட்ட நிர்வாகம்  சார்பில் நடைபெற்றது. இந்தநிலையில் இந்த ஆண்டு  புத்தகத் திருவிழா  வருகின்ற  டிசம்பர் 28ஆம் தேதி துவங்கி நடைபெற உள்ளது.

டிசம்பர் 28 முதல் 2024 ஜனவரி 4-ஆம் தேதி வரை

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாசிப்பை வசமாக்கி வாழ்வை வளமாக்குவது நூல்கள். இப்படிப்பட்ட நூல்களைக் கொண்டாடும் வாசகர்களின் திருவிழா தமிழக அரசின் முன்னெடுப்பில் தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக  செங்கல்பட்டு மாநகரில் அமைந்துள்ள அலிசன் காசி பெண்கள் மேநிலைப்பள்ளி மைதானத்தில் எதிர்வரும் 2023  டிசம்பர் 28 முதல் 2024 ஜனவரி 4-ஆம் தேதி வரை செங்கை புத்தகத்திருவிழாவாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வினை  மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் ஆகியவை இணைந்து  நடத்தவுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தகத் திருவிழாவினை எதிர்வரும் டிசம்பர் 28 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில்  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். இத்திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் இலட்சக்கணக்கான நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. நாள்தோறும் பகல் வேலைகளில் பள்ளி மாணவர்களுக்கான  நிகழ்வுகளும், பல்வேறு போட்டிகளும் நடைபெறவுள்ளன. மாலை நேரங்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

கலந்து கொள்ளும் அறிஞர்கள்

இபாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, முது முனைவர் வெ.இறையன்பு, மருத்துவர் கு.சிவராமன், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், பத்திரிக்கையாளர் திருப்பூர் கிருஷ்ணன், பேராசிரியர்பர்வீன் சுல்தானா, இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், காலநிலை வல்லுநர் முனைவர் எஸ்.இரமணன் ஆகிய பேரறிஞர்களின் சிறப்பு  உரைவீச்சுகளும் சுகிசிவம் குழுவினரின் பட்டிமன்ற நிகழ்ச்சியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மாணவர்களுக்கான கோளரங்கமும், உணவகமும், பல்வேறு கேளிக்கை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. நூல் வெளியீட்டு  நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

தொடக்க விழா

தொடக்க விழா நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், செங்கற்பட்டு மாவட்டத் திட்ட அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், தாம்பரம், செங்கற்பட்டு ஆணையாளர்கள். உள்ளிட்ட பிற அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வுகளுக்கான விளக்கக் குறிப்பு (நோட்டீஸ்),  இலச்சினை வெளியீடு,  கேட்பொலி வெளியீடு ஆகியவற்றை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இந்து பாலா, செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு)  சாகிதா பர்வீன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Thalapathy Rerelease :  ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
Thalapathy Rerelease : ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
"நீங்கள் வரும்போது மட்டும்தான் உணவு நன்றாக இருக்கும்" - ஆட்சியரிடம் புகார் அளித்த பழங்குடி மாணவர்கள்
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Embed widget