மேலும் அறிய

Breaking News LIVE: சென்னை, காஞ்சிபுரத்தில் பள்ளிகள் நாளை வழக்கம்போல இயங்கும்

Breaking NEWS LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE: சென்னை, காஞ்சிபுரத்தில் பள்ளிகள் நாளை வழக்கம்போல இயங்கும்

Background

தமிழ்நாட்டில் தொடர்ந்து 251வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. 

இன்றைய விலை

இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 251ஆவது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி இன்று (ஜனவரி.27) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை கடந்துள்ளது.  

எத்தனால் கலந்த பெட்ரோல்

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

17:07 PM (IST)  •  27 Jan 2023

தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை..!

சீமைக் கருவேல மரங்களை அகற்றச் சொன்ன உயர்நீதி மன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

15:22 PM (IST)  •  27 Jan 2023

2 ஊராட்சித் தலைவர்கள் பதவி நீக்கத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 ஊராட்சித் தலைவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

13:55 PM (IST)  •  27 Jan 2023

Breaking News Live : குட்கா தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

12:51 PM (IST)  •  27 Jan 2023

Breaking News Live : சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு

மும்மை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிந்து 59,206 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்ஃடி 320 புள்ளிகள் சரிந்து 17,572 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

12:07 PM (IST)  •  27 Jan 2023

Breaking News Live : உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்திய பெருங்கடலை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.
அடுத்த இரண்டு தினங்களில் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து, வரும் மூன்று நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடற்கரையை நெருங்கும் வாய்ப்பு உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழக அரசு அதிரடி!
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழ்நாடு அரசு அதிரடி!
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்”  - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்” - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
WhatsApp: புதிதாக வெளியாக இருக்கும் ‘சாட் மெமரி’ வசதி; வாட்ஸ் அப் அப்டேட் -விவரம்!
WhatsApp: புதிதாக வெளியாக இருக்கும் ‘சாட் மெமரி’ வசதி; வாட்ஸ் அப் அப்டேட் -விவரம்!
Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Manadu : கார் பார்கிங்கில் தேங்கிய மழைநீர்!அடாவடி செய்யும் பவுன்சர்கள் நடக்குமா தவெக மாநாடு?Irfan baby Delivery Video : மீண்டும்..மீண்டுமா?தொப்புள்கொடி வெட்டும் வீடியோ அடுத்த சர்ச்சையில் இர்ஃபான்!Bus Accident : FULL SPEED-ல் வந்த பேருந்து ஒன்றோடு ஓன்று மோதி விபத்து பதறவைக்கும் CCTV காட்சி SalemVijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழக அரசு அதிரடி!
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்.. தமிழ்நாடு அரசு அதிரடி!
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்”  - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் நான் கலைஞரின் பேரன்” - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
WhatsApp: புதிதாக வெளியாக இருக்கும் ‘சாட் மெமரி’ வசதி; வாட்ஸ் அப் அப்டேட் -விவரம்!
WhatsApp: புதிதாக வெளியாக இருக்கும் ‘சாட் மெமரி’ வசதி; வாட்ஸ் அப் அப்டேட் -விவரம்!
Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மெரினாவில் ரகளை.. போலீசை தகாத வார்த்தை சொல்லி திட்டிய ஜோடி.. தட்டி தூக்கிய காவல்துறை! 
மெரினாவில் ரகளை.. போலீசை தகாத வார்த்தை சொல்லி திட்டிய ஜோடி.. தட்டி தூக்கிய காவல்துறை! 
நாளை மறுநாள் உருவாகிறது புயல்: எங்கு கரையை கடக்கும்: பயணிக்கும் பாதை இதோ.!
நாளை மறுநாள் உருவாகிறது புயல்: எங்கு கரையை கடக்கும்: பயணிக்கும் பாதை இதோ.!
Chennai Beach: இரவில் பிரைட்டாக ஒளிர்ந்த சென்னை கடல்: ஆபத்தா? காரணம் என்ன?: உஷார் மக்களே.!
இரவில் பிரைட்டாக ஒளிர்ந்த சென்னை கடல்: ஆபத்தா? காரணம் என்ன?: உஷார் மக்களே.!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Embed widget