Covaxin Phase III Report | வெளியானது கோவாக்ஸின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள்..
78 முதல் 100 சதவிகிதம் வரை கோவாக்ஸின் தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக செயலாற்றுவது தெரியவந்துள்ளது
கொரோனாவுக்கு எதிராக அரசு அங்கீகரித்த கோவாக்ஸின் தடுப்பூசிகளின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கோவாக்ஸின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் மற்றும் டெல்லி ஐ.சி.எம்.ஆர் இணைந்து இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்களில் செலுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட மூன்றாம்கட்ட பரிசோதனை முடிவுகளின்படி 78 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை கோவாக்ஸின் தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராகச் செயலாற்றுவது தெரியவந்துள்ளது.
Vaccine Efficacy – The Higher The Better?
— BharatBiotech (@BharatBiotech) April 21, 2021
With the accelerated Phase 3 vaccination schedule starting on May 1st, it is essential to know the answer to the above question and thereby, make an informed decision.
To know the answer, read this- https://t.co/t2rx31FUzO@SuchitraElla
அண்மையில் புதிய தடுப்பூசிக் கொள்கையை வெளியிட்ட அரசு, வருகின்ற 1 மே முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் மேலும் மாநிலங்களும் தனியார் மருத்துவ நிறுவனங்களும் நேரடியாகவே தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்துகொள்ளலாம் என அறிவித்தது இந்தச் சூழலில் குறிப்பிடத்தக்கது.
Also Read: மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயுக்கசிவு - 22 நோயாளிகள் உயிரிழப்பு..