விழுப்புரத்தில் கஞ்சா புகைப்பது போல வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இது தொடர்பாக கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
கண்டாச்சிபுரம் அருகேயுள்ள மீன்வெட்டும் தொழிலில் ஈடுபடும் இளைஞர் கஞ்சா புகைப்பது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞரை கண்டாச்சிபுரம் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள வி.புதுப்பாளையம் பகுதியை சார்ந்த சதீஷ் என்ற இளைஞர் கஞ்சா புகைப்பது போன்று வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இது தொடர்பாக கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரனையில் காசிமேடு பகுதியில் மீன் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வரும் சதீஷ் கஞ்சா போதைக்கு அடிமையானதும், கஞ்சா புகைத்துவிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா பழக்கம் கொண்ட சதீஷ் என்ற இளைஞரை கண்டாச்சிபுரம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
மேலும் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா கூறியதாவது :-
விழுப்புரம் மாவட்டத்தில் போதை கஞ்சா பொருட்கள் கடத்தலை தடுக்கும் விதமாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது, போதை மாத்திரை ஊசி கடத்தலை தடுக்கும் விதமாக தற்போதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 900 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர், மேலும் போதை மாத்திரை ஊசி, கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யபடுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். கஞ்சா கடத்தலில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 194 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 242 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 39 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த ஒருவருடமாக குட்கா கடத்தலில் 568 வழக்குகளில் பதிவு செய்யப்பட்டு 589 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், குட்கா கடத்தலில் ஈடுபடுவோர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை எடுக்கப்படும் எனவும் விழுப்புரம் மாவட்டத்தில் குற்றசம்பவங்களை தடுக்க மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூடுதலாக வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ் பி ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.