மேலும் அறிய

Headlines December 08: காலை 8 மணி தலைப்புச் செய்திகள்! உங்களைச் சுற்றி நடந்தவை..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர், தஞ்சாவூர், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை
  • கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
  • வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ளதால், சென்னை, நாகை, கடலூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது; புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும் என தகவல்
  • மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
  • ஈரோட்டில் வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பலை பிடிக்க சென்ற வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
  • தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.405.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,644 புதிய குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • தேனி - போடி புதிய ரயில் பாதை: ”அதிவேக தொழில்நுட்ப ஆய்வு நடைபெறும் நேரத்தில் பொதுமக்கள் ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம்” என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா:

  • குஜராத், இமாச்சல் சட்டபேராவை தேர்தல் முடிந்ததையொட்டி, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. 
  • இந்தியாவிலிருந்து நடப்பாண்டில் 9,670 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசி ஏற்றுமதி - மத்திய அரசு தகவல்
  • வெளிநாடு சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. 
  • ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு- பதேர்வா, கதுவா, தோடா, உதம்பூர், ஜம்மு, கத்ரா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
  • டெல்லி மாநகராட்சி தேர்தலில் 126 இடங்களை வென்று டெல்லியை  கைப்பற்றியுள்ளது ஆளும் ஆம் ஆத்மி கட்சி.  
  • பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. 
  • நாட்டின் வடக்குப் பகுதிகளில் பனி மூட்டத்தின் போது ரயில்களை சீராக இயக்க இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
  • நாட்டில் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களுக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளில் சி.பி.ஐ. 56 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
  • இந்தியாவில் 93% கிராமங்களில் மொபைல் போன் வழி இணையதள வசதி ஏற்படுத்தப்படும்: மத்திய அரசு தகவல்
  • கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு மத்திய அரசு ரூ.50 ஆயிரம் வழங்கி வருகிறது என மத்திய அமைச்சர் நித்யானந்தா ராய் தெரிவித்துள்ளார். 

உலகம்:

  • மெட்டாவை தொடர்ந்து, ட்விட்டர், பேஸ்புக், அமேசான் இந்தியாவில் பைஜூஸ் என பல்வேறு நிறுவனங்களும் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
  • வடகொரியாவில் கிம் ஜாங் உன் ஆட்சியின் கீழ், குறைந்தது 23 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
  • அண்மைக் காலமாக இலங்கையின் பொருளாதாரம் பின்னடைவுக்குச் சென்றுள்ள நிலையில், பொருளாதார சீர்திருத்தங்கள் செய்வது இயலாது என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

விளையாட்டு:

  • இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம். 
  • உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
  • ப்ரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Embed widget