மேலும் அறிய

7AM Headlines: இன்றைய நாளின் தலைப்புச் செய்திகள்

Headlines 7 AM: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கியச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக இங்கு பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • தெற்கு அந்தமானை ஒட்டி வங்கக்கடலில் உருவான புயல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் இறுதி விசாரணையை  ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு
  • 2022ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஆளுநர் ரவி முடித்து வைத்தார்.
    கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், மாணவி பயன்படுத்திய செல்போனை பெற்றோர் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • சென்னை மியூசிக் அகாடமியின் 96ஆவது ஆண்டு கருத்தரங்கம் மற்றும் இசை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.
  • மார்கழி இசை மன்றங்களில் தமிழ் இசைக்கும், தமிழ் பாடல்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் கோரியுள்ளார்.
  • 4 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 10 கல்லூரி ஆசிரியர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பணியிட மாறுதலுக்கான ஆணைகளை வழங்கினார்.
  • மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் உமர் என்பவரது வீட்டில் என்ஐஏ அலுவலர்கள் நடத்திய சோதனையில் கத்தி,வாள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
  • சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச்சில் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • அரியலூர் விவசாயி மரணம் பற்றிய விசாரணைக் குழுவில் புகாருக்குள்ளான காவல் துறையினர் இடம்பெறக்கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா:

  • அடுத்த ஆண்டு மே 7ம் தேதி நீட் நுழைத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
  • குருவிக்காரர் சமுதாயத்தை பழங்குடி பிரிவில் சேர்க்க பல்வேறு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா ஒப்புதலுக்காக, மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 
  • 5000 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது
  • ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா பயணம் இன்று 100-வது நாளை எட்டுவதையொட்டி, நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடா கங்கிரஸ் கட்சியினர் முடிவு
  • தேசிய ஜனநாயாக கூட்டணி ஆட்சியில் நாட்டில் மருத்துவ கல்வி இடங்கள் 87% அளவிற்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தகவல்
  • நீதிபதிகள் நியமனத்திற்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதித்துறையில் காலியிடங்கள் தொடரும் என மத்திய அரசு தகவல்
  • வாரணாசியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த கசி தமிழ் சங்கமம் இன்று நிறைவு பெறுகிறது 
  • 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த கர்நாடக கல்வித்துறை எடுத்துள்ள முடிவால், மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
  • எரிபொருள் விலையை உயர்த்தாததால் 3 பெட்ரோலிய நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • மெஹ்ராலி மற்றும் குருகிராம் காடுகளில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகள் ஷ்ரத்தா உடையது என டிஎன்ஏ சோதனையில் தெரிய வந்துள்ளது.

உலகம்:

  • பிரான்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின்படி 36ஆவது ரஃபேல் விமானம் இந்தியா வந்தடைந்தது.
  • 2022ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி வரை, உலகம் முழுவதும் 363 செய்தியாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக பத்தியாளர்களை பாதுகாக்கும் கமிட்டி தெரிவித்துள்ளது.
  • உலக சுகாதார அமைப்பு  அதன் தலைமை விஞ்ஞானியாக சௌமியா சுவாமிநாதனுக்கு பதிலாக டாக்டர் ஜெர்மி ஃபாரார் நியமிக்கப்படுவார் என்று அறிவித்துள்ளது. தற்போது வெல்கம் அறக்கட்டளையின் இயக்குநராக இருக்கும் டாக்டர் ஃபரார், 2023ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சுகாதார அமைப்பில் இணைவார்.

விளையாட்டு:

  • வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 404 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
  • ப்ரோ கபடி லீக் தொடரின் அரையிறுதிப்போட்டிகளில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் தோல்வி. ஜெய்பூர் மற்றும் புனேரி பல்தான் ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன.
  • அரையிறுதி போட்டிக்குப் பிறகு, பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்வே மொரோக்கோ அணியின் ஹக்கிமியை டேக் செய்து பதிவிட்டுள்ள நெகிழ்ச்சியான ட்வீட் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
Ajithkumar: எத்தனை வருஷம் ஆச்சு இப்டி பாத்து! அமர்க்களம் அஜித்தை அப்படியே கொண்டு வந்த ஆதிக்!
Ajithkumar: எத்தனை வருஷம் ஆச்சு இப்டி பாத்து! அமர்க்களம் அஜித்தை அப்படியே கொண்டு வந்த ஆதிக்!
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
Ajithkumar: எத்தனை வருஷம் ஆச்சு இப்டி பாத்து! அமர்க்களம் அஜித்தை அப்படியே கொண்டு வந்த ஆதிக்!
Ajithkumar: எத்தனை வருஷம் ஆச்சு இப்டி பாத்து! அமர்க்களம் அஜித்தை அப்படியே கொண்டு வந்த ஆதிக்!
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!
Breaking News LIVE: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தத்தளிக்கும் தூத்துக்குடி!
Breaking News LIVE: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தத்தளிக்கும் தூத்துக்குடி!
"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
Embed widget