மேலும் அறிய

டெல்டா மாவட்டத்தில் விரைவில் 100 கோடியில் மெகா அரிசி ஆலை - உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி பேட்டி

100 கோடி செலவில் 800 மெட்ரிக் டன் நெல் அரைக்கும் வகையில் டெல்டா மாவட்டங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மெகா அரிசிஆலை நிறுவப்பட உள்ளது 7 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு புதியதாக ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன

திருவாரூர் மாவட்டம்  விளமல் ஊராட்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1,072 பயனாளிகளுக்கு 1 கோடியே 98 லட்சத்து 56 ஆயிரத்து 290 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகிக்க, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந்த நிகழ்ச்சியில் கல்ந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி, பேசும்போது, தமிழக மக்களின் நலன் காக்கும் திட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கான அரசாக தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு திகழ்ந்து வருகிறது. இன்றைய தினம் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அந்தவகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 55 நபர்களுக்கு ரூ.11 லட்சத்து 87 ஆயிரத்து 662 மதிப்பிலான பேட்டரியால் நகரும் நாற்காலி,கல்வி உதவிதொகை, வங்கி கடன் மானியம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகைக்கான ஆணைகளும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் 17 நபர்களுக்கு பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சத்து 96 ஆயிரத்து 500 மதிப்பிலான கான்கீரிட் குடியிருப்பு வீடுகளும்,தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 6 நபர்களுக்கு சுய தொழில் தொடங்க ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் காசோலைகளும், வேளாண்மைத்துறை சார்பில் 3 நபர்களுக்கு மரக்கன்றுகளும், வேளாண்மைப் பொறியியல்துறை சார்பில் 3 நபர்களுக்கு சூரிய மின் சக்தி மோட்டர் நிறுவ அரசு மான்யமாக ரூ.6 லட்சத்து 10 ஆயிரத்து 197 மதிப்பிலான காசோலைகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 7 நபர்களுக்கு ரூ.31 ஆயிரத்து 931 மதிப்பிலான தையல் இயந்திரம் மற்றும் சலவை இயந்திரமும், வருவாய்த்துறை சார்பில் 143 நபர்களுக்கு ரூ.30 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான வீட்டுமனைப்பட்டாவும், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 838 நபர்களுக்கு ரூ.1 கோடியே 32 ஆயிரம் மதிப்பிலான முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளும் ஆக மொத்தம் 1072 நபர்களுக்கு ரூ.1 கோடியே 98 லட்சத்து 56 ஆயிரத்து 290 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
 
டெல்டா மாவட்டத்தில் விரைவில் 100 கோடியில் மெகா அரிசி ஆலை - உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி பேட்டி
 
தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் 12 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை நெல்லின் ஆதார விலையை 1,960 ரூபாயில் இருந்து 2,060 ரூபாயாகவும், பொது ரகம் ஆதார விலை 1,940 ரூபாயில் இருந்து 2015 ரூபாயாகவும் உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் குறுவை சாகுபடி 3 லட்சம் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான தொகையை உடனடியாக விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கொள்முதல் நெல் உடனடியாக அரவை ஆலைக்கு  அனுப்ப வேண்டும். நெல்மணிகளை பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களில் மட்டுமே சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சட்டசபை உணவு மானிய கோரிக்கையில் தமிழகத்தில் 5 இடங்களில் ஒரு ஆலைக்கு 500 மெட்ரிக் டன் நெல் அரவை செய்யும் வகையில் திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை கடலூர் ஆகிய இடங்களில் புதிய அரிசி ஆலைகள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெல்டா மாவட்டத்தில் விரைவில் 100 கோடியில் மெகா அரிசி ஆலை - உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி பேட்டி
 
அதேபோல 100 கோடி செலவில் 800 மெட்ரிக் டன் நெல் அரைக்கும் வகையில் டெல்டா மாவட்டங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மெகா அரிசி ஆலை நிறுவப்பட உள்ளது. நுகர்வோர் வாணிப கழக பராமரிப்பில் 21 மாடன் ரைஸ் மில் இயங்கி வருகின்றன. இப்போது அவற்றில் தரமான அரிசி அரவைக்கு ஏற்ப கலர் சாட்டர் பொருத்தப்பட்டுள்ளது மேலும் அரசு நெல் அரவைக்கு போகும் தனியார் நிறுவன அரிசி ஆலைகளிலும் கலர் சாட்டர் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் கார்டு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தபடி இதுவரை தமிழ்நாடு முழுவதும் 7 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு புதியதாக ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தைப்பொங்கலுக்கு 21 வகையான மளிகைப் பொருட்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது எனவும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget