Haunting Hill House Review: மிரட்டும் வீடு... துரத்தும் பயங்கரம்... எப்படி இருக்கு தி ஹாண்டிங் ஆஃப் ஹில் ஹவுஸ்?
The Haunting of Hill House Review: தி ஹாட்டிங் ஆஃப் ஹில் ஹவுஸ் என்ற புத்தகத்தின் அடிப்படையில் நெட்ஃபிளிக்ஸ்-ல் அதே பெயரில் வெளி வந்த வெப்சீரிஸ் இது.
Mike Flanagan
Michiel Huisman, Carla Gugino, Henry Thomas, Elizabeth Reaser, Oliver Jackson-Cohen, Kate Siegel, Victoria Pedretti, Lulu Wilson, Mckenna Grace
The Hauting of Hill House: ‘தி ஹாட்டிங் ஆஃப் ஹில் ஹவுஸ்’ கதையை யார் சொல்கிறார்கள் என்ற அடிப்படையில் கதை அமைந்திருந்தால் என்ன ஆகும்?
தி ஹாட்டிங் ஆஃப் ஹில் ஹவுஸ் என்ற புத்தகத்தின் அடிப்படையில் நெட்ஃபிளிக்ஸ்-ல் அதே பெயரில் வெளி வந்த வெப்சீரிஸ் இது. ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் பிரச்சனைகளுடன் எதிர்பார்க்காத பல திருப்பங்களும் நிறைந்து இருக்கும் கதை.
ஹுயு, ஒலிவியா கிரெய்ன் மற்றும் அவர்களது ஐந்து குழந்தைகள் - ஸ்டீவன், ஷெர்லி, தியோடோரா (தியோ), லூக் மற்றும் எலினோர் (நெல்)யை சுற்றி கதை நகர்கிறது. ஹுயு மற்றும் ஒலிவியா ஹில் ஹவுஸ்யை புதுப்பித்து வரும் பணத்தில் புது வீடு கட்ட முடிவு செய்து அந்த வீட்டிற்கு குழந்தைகளுடன் செல்கின்றனர்.
எதிர்பாராத பழுது காரணமாக, அவர்கள் நீண்ட காலம் அந்த வீட்டில் தங்க, அமானுஷ்ய நிகழ்வுகளை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள். எதிர்பாராத இழப்பின் காரணமாக குடும்பம் வீட்டை விட்டு வெளியேறுகிறது. மீண்டும் 26 வருடத்திற்கு பிறகு இழப்பின் காரணமாக குடும்பம் ஒன்று சேர்கிறது.
முதல் எபிஸோடில் 26 வருடத்திற்கு பின் வளர்ந்த ஸ்டீவன் ஒரு புத்தக எழுத்தாளர், சிறு வயதில் ஹில் ஹவுஸில் அனுபவித்த கதையை அடிப்படையாக வைத்து எழுதிய ‘தி ஹாட்டிங் ஆஃப் ஹில் ஹவுஸ்’ புத்தகம் பெரும் வெற்றி அடைந்தாலும், சகோதர சகோதரிகளுடன் இருந்த நல் உறவை இழக்கிறார். வெற்றி அடைந்தாலும் பல அமானுஷ்ய நிகழ்வுகளை ஸ்டீவன் எழுதவில்லை. தியோ திருமணமான ஷெர்லியின் வீட்டில் வசிக்கிறார்.
நெல்லின் சிறு வயதில் பார்த்த அமானுஷ்யம் மீண்டும் தொடர, ஸ்டீவன் ஷெர்லியை அழைக்கிறார். ஸ்டீவன், ஷெர்லி அழைப்பை எடுக்காததால் அவர்களது தந்தை ஹுயுவுக்கு அழைத்து தனது இரட்டை சகோதரன் போதைக்கு அடிமையான லூக் பற்றி விசாரிக்கிறார். வீடு திரும்பிய ஸ்டீவன், நெல் அங்கே நிற்பதைக் கண்டு லூக்கை பற்றி விசாரிக்க ஹுயு ஸ்டீவனை தொடர்பு கொள்கிறார்.
ஸ்டீவன் ஏன் அழைப்பை எடுக்கவில்லை, லூக்கிற்கு நடந்தது என்ன? நெல் ஏன் ஸ்டீவன் வீட்டில் இருந்தார்? என்பது இந்த எபிசோடின் மிச்சக் கதை. மற்ற பேய் படத்தை போல பின்னனி இசை, தேவையற்ற பயமுறுத்தும் காட்சிகள் என எதுவும் இல்லாம் முழுக்க முழுக்க கதையை அடிப்படையாக வைத்துக் கதை நகர்கிறது. நடிகர்கள் குறிப்பாக தியோ கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கும் கேட் சீகல் நன்றாக நடித்துள்ளனர். ஒவ்வொரு பேய் கதையைப் போல, இத்தொடரில் வரும் ’ஹில் ஹவுஸ்’ பாலடைந்து இருப்பது இயற்கையாக பயத்தை ஏற்படுத்துகிறது.
இயக்குநர் மைக் ஃபிளனகன் மற்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து எடுத்த கதைகளைப்போல இல்லாமல் புத்தகத்தில் இருந்த சுவரஸ்யமான தருணங்களையும் இணைத்து இயக்கியிருப்பது பாரட்டுகளைப் பெற்றது.
அக்குடும்பத்தில் என்னதான் ஆனது? குடும்பத்தினர்களுக்குள் என்ன பிரச்சனை, என்பது அடுதடுத்த எபிசோடுகளில் குறிப்பிட்டுயிருப்பார்களா என்ற சுவாரஸ்யம் குறையாமல் இருக்கிறது தி ஹாட்டிங் ஆஃப் ஹில் ஹவுஸ்.