Health Tips : பாரம்பரிய மஞ்சள் பயன்பாடும் அதன் மருத்துவ குணங்களும்
மஞ்சள் ஒரு இயற்கையான கிருமி நாசினியாகும் ,மஞ்சளில் உள்ள நற்குணங்கள் நம் உடலுக்கு அதிகளவு நன்மைகள் மற்றும் சத்துக்களை தரக்கூடியது.
மஞ்சள் என்பது பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் ஒரு இன்றியமையாத ஒரு பொருளாக ,ஒரு மருந்தாக உள்ளது. கிராமங்களில் மஞ்சள் இல்லாத ஒரு பண்டிகையும் பார்க்க முடியாது. பொதுவாகவே நமது உடம்பில் கீழே விழுந்து அடிபட்டு ரத்தம் வந்தால் முதலில் நம் வீட்டில் இருப்பவர்கள் கொண்டுவந்து அந்த காயத்தின் மேல் வைத்தது கட்டுவது மஞ்சளை தான். ஏனென்றால் மஞ்சள் ஒரு இயற்கையான கிருமிநாசினி ஆகும். மஞ்சளில் உள்ள நற்குணங்கள் நம் உடலுக்கு அதிகளவு நன்மைகள் மற்றும் சத்துக்களை தரக்கூடியது.
மஞ்சளில் இயல்பாகவே ஆண்டிசெப்டிக், ஆன்டிவைரல் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளன. மஞ்சள் ஒரு இன்றியமையாத பாரம்பரியமாக நமது வீடுகளில் திகழ்கிறது.மஞ்சள் உண்மையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு அற்புதமான மசாலா என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
நியூட்ரிஷன் டுடே நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, கீல்வாதம், இருதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் அபாயங்களைக் குறைக்க குர்குமின் என்ற மூலப்பொருள் பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. குர்குமின் மூலப்பொருள் மூலம் நமது உடம்புக்கு ஆரோக்கியம் ஏற்படுத்துவதற்கு எளிய ஒரு சில வழிமுறைகள் உள்ளது.
மஞ்சளை பயன்படுத்தி சளி மற்றும் இருமலில் இருந்து விடுபடலாம்:
1.பச்சை மஞ்சள் தூள் ஒரு பங்கு மற்றும் தேன் மூன்று பங்கு எடுத்து இரண்டு பொருட்களை நன்றாக கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் சளி மற்றும் இருமல் அனைத்தும் காணாமல் போய்விடும். மஞ்சள் கிருமி நாசினியாகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது .
2. நமது வீடுகளில் அசைவம் சாப்பிடுவது இயல்பான செயலாகும் .நாம் வாங்கி வரும் அசைவத்தை மஞ்சள் கொண்டு சுத்தம் செய்வதால் ,அதில் நமக்கு தெரியாமல் இருக்கும் சிறுசிறு நுண்ணுயிரிகள் இரக்க நேரிடும். இதனால் நம் வயிற்றுக்குள் ஏற்படும் தேவையற்ற உபாதைகளை பெருமளவில் தடுக்கலாம். குர்குமின் நன்மைகளை முழுமையாக பெற நமது வீட்டில் பெரும்பாலான உணவுகளில் மஞ்சளைப் பயன்படுத்தலாம்.
3. மஞ்சளைப் பயன்படுத்தி தேநீர் உற்பத்தி செய்தும் குடிக்கலாம். மஞ்சள் தேநீர் குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஒரு கப் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் அரை டீஸ்பூன் உலர்ந்த இஞ்சித் தூள் (சாந்த்), நான்கில் ஒரு பங்கு கருப்பு மிளகுத் தூள் (காலி மிர்ச்) மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். சுமார் 5 நிமிடங்கள் கொதிக்கவும். நீங்கள் வெல்லத்தை இனிப்பாக சேர்க்கலாம் அல்லது தவிர்க்கலாம். கலவையை வடிகட்டி, பருகவும். இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் மஞ்சளின் முழு தன்மையும் முழுமையாகப் பெறலாம். அதேபோல் நம் உடல் நலமும் நோயின்றி ஒரு புத்துணர்வுடன் நாம் ஒவ்வொரு நாளையும் கடக்க எளிதாக இருக்கும் இதை பயன்படுத்தினால்.
4. மஞ்சள் தூளை பாலில் போட்டுக் காய்ச்சி சாப்பிட வாய்ப்புண், தொண்டை எரிச்சல், வயிற்றில் எரிச்சல் போன்றவை சரியாகிறது.
5. மஞ்சள் சேர்த்துக் கொதிக்கவைத்த வெந்நீரில் வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் ஆறுவதோடு, சளி முறிந்து எளிதில் வெளியாகும்.
6 . மஞ்சள், குப்பைமேனி இலையை சேர்த்து அரைத்து கரப்பான், சொரி, சிரங்கால் ஏற்படும் தோல் நிறமாற்றத்திற்கு மேல்பூச்சாக பூச நிவாரணம் கிடைக்கும். மஞ்சளை விழுதாக் அரைத்துச் சுடவைத்துப் பற்றுப்போட வீக்கம் குறையும்.
7.மஞ்சளுடன் அரிசி மாவைச் சேர்த்து களியாகக் கிண்டியோ, சதத்துடன் சேர்த்து அரைத்தோ அதை கட்டிகளின் மீது போடுவதால் அது பழுத்து உடைந்து விடும்.
8. மஞ்சள், வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப்போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப்புண் போன்றவை குணமாகும் . இந்த மருத்துவ முறைகள் தொன்று தொட்டே நமது மூதாதையர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.
9. முகத்துக்குப் பூசும் மஞ்சள் முகத்தில் முடி வளராமல் தடுக்கிறது. மஞ்சள் முகத்துக்கு ஒருவித மினுமினுப்பைத் தருவதற்கும், வசீகரத்தைத் தருவதற்கும் உதவுகிறது. மேலும் இது மிகவும் மங்களகரமான ஒரு பொருளாகவும் கருதப்படுகிறது.
10. பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, கர்ப்பப்பை சிக்கலுக்கு, மஞ்சள் பொடி சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கிறது.
11.சளி தொந்தரவால் அவதிப்படுபவர்கள், தினமும் காலையில் மூக்கடைப்பால் சிரமப்படுபவர்கள், வேப்பிலை, தேன், மஞ்சள், மிளகு இவற்றை உட்கொள்வதன் மூலம் பெரிதும் பலன் பெறலாம்.
10, 12 மிளகை பொடித்து 2 ஸ்பூன் தேனில் இரவு ஊற வைத்து காலையில் இதை சாப்பிடலாம். தேனில் சிறிது மஞ்சள் கலந்து உண்பதும் பலன் தரும்.