மேலும் அறிய

Vettai Thunaivan| ’அழிந்து வரும் நாட்டு நாயினங்கள்’ அழிக்க முயற்சிப்பது யார்..?

நாட்டு நாயினங்கள் பெருகிவரும் அளவுக்கு, அழிந்தும் கொண்டிருக்கின்றன.இழப்பு அந்த இனங்களுக்கும் மட்டுமா? நமக்கும்தான் இல்லையா! இப்படி நீளும் போக்கை நாம் தடுக்க வேண்டாமா அப்படி தடுக்க என்ன செய்ய வேண்டும்?

  வேட்டைத்துணைவன் -  25

  சிப்பிப்பாறை / கன்னி நாய்கள் பகுதி : 17

 நாட்டு நாய் இனங்களை அழிப்பது யார்?

கிட்டத்தட்ட 16 பகுதிகளாக இந்த சிப்பிப்பாறை / கன்னி நாய்களைப் பற்றி பார்த்து வருகிறோம். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில் கூட தமிழக நாயினங்கள் அத்துனையையுமே "இராஜபாளைய நாய்கள்" என்ற ஒரே பெயரில் அழைக்கும் வழக்கம் இங்கிருந்து."அழிந்து வரும் பாரம்பரிய நாய் இனங்கள்" எனத் தலைப்பிட்டு, வருடம் ஒரு முறை வரும் சிறப்புப் பக்கமொன்றில் இராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை என்ற நாய்களுக்குத் தலா ஒரு படமும் ஒரு பத்தி குறிப்பும் ஒதுக்கப் படும். அப்படி வெளியாகும் ஒரு பக்கக்கட்டுரை தவிர்த்து இவை எங்குமே பேச்சு பொருள் கிடையாது . தப்பித் தவறி இலக்கியத்தில் உதாரணமாக இடம் பெறுபவவை கூட "பெயர் தெரியாத பறவை ஒன்று பறந்து சென்றது" என்ற கணக்கில் விழும் பருவட்டு அடியாகத்தான் இருந்திருக்கிறது.

இன்றைய நிலை அப்படி அல்ல. அறிமுகத்துக்கு அடுத்த கட்டத்தை நாம் வீட்டில் இருந்த படியே, காடு களம் பார்க்காமலே தெரிந்துகொள்ளலாம். போக சில மாதத்திற்கு முன்பு இந்தியப் பிரதமரின் "மான் கி பாத்" உரை துடங்கி  கொரோனா நோய் தோற்றாளர்களை கண்டறிவதில் பயபடுத்த உள்ளது வரையில் செய்திகளில் பேசப்பட்டு வருகிறது.

நங்கு இறங்கிய நெஞ்சும், கூரான முகமும், நீண்ட உடலும்,  ஓட்டத்துக்கு என்றே தயார் செய்யப்பட்ட "aerodynamic body" அமைப்பு கொண்ட இந்த வேட்டை நாய்களைப் பற்றிய தகவல்களை பேசத் தொடங்கியதும் இப்படி ஒரு நாயை வாங்க வேண்டும் என்ற ஆசையும் பலருக்கு ஒட்டிக்கொண்டு விடுகிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு ! ஒன்றும் தவறல்ல ! அதே சமையம் அது என்ன மாதிரியான எதிர்பார்ப்பை பெரும் ஆசையாகிறது என்பதுதான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விசியம்.

.செவலப் புள்ள, வெள்ளப் புள்ள, மயிலப் புள்ள, சந்தனப் புள்ள, கீறிப் புள்ள, கருவுன புள்ள, சாம்பபுள்ள, கரம்ப புள்ளை, கரு மூஞ்சி கருங்செவலை, ரெத்தச் செவல, பால் பருக்கி, சந்தன பருக்கி, செம்பருக்கி, செங்கப்பருக்கி, தேன் பருக்கி, செம்பற, கருமற, சாம்பமற, நெஞ்சு வெள்ள, பூ வாலு, நெத்தி ராமம், பிடதி வெள்ள, பாச்சக் கழுத்து, வெங்கால், வட்டு செம்பற, பூதக்கால் செம்பற, பால் கன்னி, கருங்கன்னி, புள்ளக் கன்னி, செங்கன்னி போன்று நிறைபாடுகளின் அடிப்படையிலோ,  உடல் அமைப்புகளில் உதாரணமாக காதுகளை வைத்து பறவைக்காது, குத்துக்காது, நெரி காது, குதுரக்காது, ஒற்றைக் குத்து செவி என்பது போன்றோ, பிரித்துச் சொல்லப்படும் அடையாளத்தையும் போன கட்டுரையில் பார்த்த உடல் அமைப்புகளையும்  தெரிந்து கொண்டுதான் நாம் வாங்க முன்வருகிறோமா?

வாங்கி வளர்க்கப் போவது ஒரே ஒரு குட்டி அதற்கு இவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டுமா?  என்றால் ஆம் ! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.Vettai Thunaivan| ’அழிந்து வரும் நாட்டு நாயினங்கள்’ அழிக்க முயற்சிப்பது யார்..?

பொதுச் சமூகத்திற்கு குறிப்பாக படித்த இளைஞர்களுக்கு இந்த நாய்களைப் பற்றிய அறிமுகத்தை பெரிய அளவில் கொண்டு சேர்த்தது இணையம்தான். அறிமுகத்திற்கு பெரியதோர் மெனக்கிடல் தேவை இல்லை. நமது மரபு - பாரம்பரியம் என்று தலைப்பிட்ட ஒரு you tube வீடியோ போதும். அதுக்கு பலம் சேர்க்கும் பல குட்டிகதைகள் ஓராயிரம் நாளும் பொழுதும் முளைத்துக்கொள்ளும்.  அலை அலையாக மக்கள் இந்த இனத்தின் மீது ஆர்வம் கொண்டு தேடுகிறார்கள் நாளுக்கு நாள் வாங்க முன்வருகின்றனர். பின்ன  பாரம்பரியம் ஆயிற்றே? அதுவும் அழிந்து வரும் தமிழர்களின் பாரம்பரியம். தமிழராகிய நாம் அதை அனுமதிக்கவே முடியாது. அடுக்கு மாடி குடியிருப்பே ஆனாலும் அங்கு கொண்டுப் போய் வேட்டை நாய் வளர்த்து பாரம்பரியத்தை காத்தாக வேண்டும். கட்டியே போட்டு காலை வளைத்து இனம் காக்க வேண்டும். 

கடந்த 10 ஆண்டுகளாக இந்த மாற்றம் இருந்தாலும்,  இதில் ஒரு பெரிய அலையை உருவாக்கியது ஜல்லிக்கட்டு போராட்டம்தான்.. zomotta app மூலம் உணவை ஆர்டர் செய்வது போல இணையத்திலும்- முகநூலிலும் குட்டிகளை புக்கிங் செய்கிறார்கள். நல்ல விலைக்கு வாங்கவும் செய்கிறார்கள். அதை முன்வைத்து பெரிய சந்தையும் இங்கு உருவாகியுள்ளது. நல்ல வேட்டை நாய்க்குட்டி ஒன்று சராசரியாக எட்டாயிரம் முதல் இருப்பத்தையாயிரம் வரைக்கும் கூட விலைபோகிறது. 

அப்போது முன்பு சொல்லப்பட்டு வந்த பிரதான காரணங்களான அறிமுகமின்மையும், வெளிநாட்டு நாய் இனங்களின் மீதான மோகமும் இதில் அடிபட்டு விட்டதே ! அப்படி என்றால் நாட்டு நாய்கள் அழிகிறது என்பதெல்லாம் வெறும் பேச்சா? தொடர்ந்து வேட்டை நாய்களை கவனித்து வருபவன் என்ற முறையில் நான், நாட்டு நாய்கள் அழிகிறது என்றுதான் சொல்வேன். ஆனால் முன்னவர்கள் போல எண்ணிக்கை அடைப்படையில் அல்ல. 

வேட்டை நாய்கள் கடந்த 40 ஆண்டுகளை விட இப்போது அதிக அளவில் இன்று பெருகியுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் என்று மூன்று மாவட்டங்களில் மட்டும் காணக் கிடைக்கும் சின்ன இனமல்ல இப்போது இந்த நாய்கள். பலர் மூலமாக பஞ்சாலை நிறுவனம் போல தொடர்ந்து இரைச்சல் எடுக்கும் பெரும் சத்தததோடு நாளும் பொழுதும் வேட்டை நாய்கள் பெருக்கப்பட்டுக் கொண்டு வரும் பெருந்திரள்.

மேம்போக்காகப் பார்க்கப் போனால் அது ஒரு வகையில் நாய்களுக்கான மறுமலர்ச்சி தானே எனக் கேக்கத்தோன்றும். ஆனால் கள எதார்த்தம் என்பது வேறு. எப்படி தீவிரமாக பெறுக்கப்படுகிறதோ அதை விடத் தீவிரமாக அழிந்துகொண்டும் வருகிறது. இந்த முரணை விளங்கிக்கொள்ளாமல் நம்மால் நிச்சியம் நல்ல நாய்களை கண்டடைய முடியாது. அழிகிறது என்றால் அதற்கான காரண கர்த்தா ஒருவர் வேண்டும் அல்லவா? அப்படியேன்றால் நாட்டு இன நாய்களை அழிப்பது யார்? 

நாய்களை போட்டி போட்டு வாங்கிக்கொண்டு இருக்கிறார்களே அவர்களே தான். முன்பு சொன்னது போல ஒரு தொடுகையில் இணையம் நமக்கு வழங்குவது தகவல்களை தானே ஒழிய அறிவை அல்ல. இங்கு அறிவோடு தங்கள் விருப்பத்தையும்  பொருத்திப்பார்ப்பதில் தான் சிக்கல் துடங்குகிறது. 

முதலில் நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும் இன்றைய சூழலில் குட்டிகள் பிறப்பது பொறுத்து வாங்குவோர் எண்ணிக்கை அல்ல. வாங்கும் கூட்டம் பொறுத்துத்தான் குட்டிகளின் எண்ணைக்கை. ஆக வாங்குவோர் மட்டுமே இங்கு தர நிர்ணய தேர்வுக் குழு அதிகாரிகள். பழமையை மீட்டு எடுக்கிறேன் என்ற பெயரில் அதன் பன்முகத்தன்மையை உணராதவர்கள் அவர்கள்.Vettai Thunaivan| ’அழிந்து வரும் நாட்டு நாயினங்கள்’ அழிக்க முயற்சிப்பது யார்..?

அவர்களுக்கு களத்தில் பெயர் வாங்கிய நாய்களின் இனவழி தெரியாது, இருப்பதுக்கும் மேற்பட்ட நிறைபாடுகள் தெரியாது, ஒற்றைகுறுக்கு, ரெட்டைக் குறுக்கு தெரியாது, வேட்டைக்கு உகந்த விழித்தெறிப்பு கண் கொண்ட நாய்களை தெரியாது, கோவக் குறி உடைய எரி  கண்னையோ, வாவெட்டோ தெரியாது. வெயில் தாங்கும் தாக்கத்து உள்ள பரு ரோம நாய்கள் தெரியாது. வலுவோடு ஓடும் பருவலிப்பு நாய்கள் தெரியாது, எட்ட எட்டு வைக்கும் கூனுக்கால் அமைப்பு தெரியாது. முயலை அமட்டும் வாச்சூடு உள்ள நாய்களைத் தெரியாது. 

இணைய வழியாக அவர்கள் அறிந்தது எல்லாம் சொற்ப லட்சணம் மட்டுமே. அவர்கள் கோரும் அம்சங்களும் கூட அதற்குள்ளேயே சுழலுவது மட்டுமே .அவர்கள் தருவதே நாய்களை உருவாக்க உதவும் வரைபடம். ஏகதேசம் எல்லோரின் வரைபடமும் ரெண்டே ரெண்டுதான் . அதில் முதலாவது, "நல்லா உயரமான நாய் குட்டி வேண்டும்  " என்பது ரெண்டாவது "இந்த நிறத்தில் எனக்குக் குட்டி வேண்டும்" என்பது 

அவ்வளவுதான் தயாராகி விட்டது நாய்களை உருவாக்கவேண்டிய ஆர்டர். கிடைத்துவிட்டது உருவாக்கத்துக்கான மாதிரி வரைபடம். இனி அசுர வேகத்தில் உற்பத்தி துடங்கிவிடும். நல்ல நாய்களில் சில உயரமான நாய்களும் உண்டு. அதே நேரத்தில் உயரம் மட்டும் நாய்களுக்கான தர நிர்ணயம் அல்ல ! என்ற எளிய உண்மையை இணையமும் சரி,  சந்தையில் கடை விரிப்பவர்களும் சரி வாங்க வருபவர்களுக்கு உணர்த்த முயற்சிப்பதேயில்லை. 

முன்பு வேட்டைநாய்களில் நல்ல நாய் எது என்பதை நாய்களுடைய உறுதியும், வலுவும், ஸ்திரத்தன்மையும், வேட்டையாடும் பண்பும், கூர்மையும்,  இனவழியும்  தீர்மானித்தது. அந்த பண்பு உள்ள நாய்கள் மட்டுமே இன விருத்தி செய்யப்பட்டு பெருக்கப் பட்டது. இன்று அதற்க்கான களங்கள் இல்லை. 

இன்றய தேதியில்  தோற்றமே பிரதானம். திடம் அல்ல. உயரமே பிரதானம் நாய்களின் ஆரோக்கியம் அல்ல. தேவை உள்ள வடிவமே முக்கியம். நல்ல நாய் அல்ல. அப்போதும் உயரமான நாய்கள் உண்டு. அவை அந்த அடிப்படையில் குறிவைத்து பெருக்கப்படவில்லை ஆததால் உயரமும் உரமும் வாய்ந்த சில நாய்கள் நிலைத்து நின்றது.  இன்று எங்கு பார்த்ததாலும் 30 இன்ச் உயரம் உள்ள நாய்கள் தான் brand model கள். தொடர்ந்து உயரம் மட்டுமே பிரதானமாகக் கொண்டு உற்பத்தி செய்து அழகாக காட்சிப் படுத்துகிறார்கள் " breeder " கள். அலைமோதி கொண்டு அதையே வாங்குகிறார்கள் மக்கள். 

விளைவு வலு இல்லாத சோளத்தட்டை போன்ற கால் உடைய பொம்மை நாய்கள். இன்றைய தேதியில் பிட்டிச்சதைப்  பிடிப்புள்ள வேட்டை நாய்களை காண்பதே அரிதாகி விட்டது. முதல் எதிர்பார்ப்பு இப்படி என்றால் இரண்டாவது இன்னமும் மோசம். "இந்த நிறம் தான் வேண்டும் " என்ற முறையிடல், 

வெள்ளை மூஞ்சி என்று அழைக்கப்படும் "இராஜபாளைய நாய்" இனங்களோடு ஒப்பிடும்போது வேட்டை நாய்கள் பல நிறங்களில் வருகின்றன. உடல் அமைப்பிற்கும் பல மாறுபாடுகள் உண்டு. அந்த பல நிறத்தன்மையே, உடல் மாறுபாடுகளுமே அந்த இனத்தின் ஸ்திரத்தன்மையுடைய அடையாளம். அவற்றிலிருந்து  ஒரு நிறத்தை மட்டும் பிரித்தெடுத்து அதை மட்டுமே தொடர்ந்து இன விருத்தி செய்தால் என்ன ஆகும்? நிச்சியம் அதன் தன்மை ஒரு கட்டத்தில் குறுக்கும் அல்லவா? இராஜபாளைய நாய்களில் முக்கிய குறைபாடாக உருவெடுத்து நிக்கும் செவிட்டுத் தம்மை கூட அத்தகைய செயலின் விளைவே !

வேட்டை நாய்களில் அப்படியான குறைபாடுகள் இல்லைதான். ஆனால் அதற்கான  துடக்கப் புள்ளிகளை தற்போது பார்க்க முடிகிறது. உதாரணமாக உங்களை கவரும் நாய் கன்னி ( அதாவது கருப்பு - செங்கன்னியோ / பால் கன்னியோ / கருங்கன்னியோ ) என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே உங்களுடைய  விருப்பத் தேர்வு கன்னிக் குட்டி என்றாகிறது. 

இப்போது உங்களுக்கான தாய்  நாய் குட்டிகளை ஈன்று விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள் . வெவ்வேறு நிறத்தில் 5 குட்டிகள் உங்கள் முன் இருக்கிறது. இந்த இடத்தில் உங்கள் தேர்வு எது? குட்டிகளில் நல்ல ஆரோக்கியமான குட்டியா? அல்லது புடித்த நிறமான குட்டியா? 

நினைவில் கொள்ளுங்கள் நல்ல நாய்கள் எந்த நிறத்திலும் வரும். அதே வேலையில்  நீங்கள் ஒரு நிறத்தை அழுத்தும் போது உங்களுக்கு கை சேருவது  நிறந்தானே அன்றி தரமல்ல. விதிவிளக்குகள் இருக்கலாம். ஆனால் அது அத்தனையும் விதி ஆகாது ! "நான் பணம் கொடுக்கிறேன். எனக்கு பிடித்ததை கேட்கிறேன். இதில் தவறென்ன உள்ளது " என்ற  கேள்வியை நீங்கள் முன்வைத்தால், நீங்கள் பணம் குடுக்க முடியும் என்பதாலேயே  வலிந்து ஒரு இனத்தை சுருக்குகிறீர்கள் என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.  

இதைச் சிந்தித்துப் பாருங்கள் கன்னி ஒரு பொதுவான நிறம். இதுவே இன்னும் அரிதான நிறத்தில் உங்கள் கவனம் குவிந்தால்? அது உங்களைப் போலவே பலரையும் கவர்ந்ததால், அந்த கவர்ச்சி இங்கு ஒரு சந்தையை உருவாக்கினால்?  அதற்கே தொடர்ந்து சந்தையில் மௌசு இருந்தால்? அத வரவேற்பு காரணமாக " breeder"  கள் அந்த நிற நாய்களை மட்டுமே தொடர்ந்து இன விருத்தி செய்தால், ராஜபாளைய நாய்களை சர்வ நாசம் ஆக்கிக்கொண்டு இருக்கும் "inbreeding" இந்த இனத்திலும் அதிகம் நடந்தால்? அதையே விற்பனையும்  செய்தால்? திடம், வலு, ஆரோக்கியம் உள்ள எல்லா குட்டிகளையும் புறம் தள்ளிவிட்டு நிறம் மட்டுமே எங்கும்  நிறைந்தால்? 

இழப்பு அந்த இனங்களுக்கும் மட்டுமா? நமக்கும்தான் இல்லையா! இப்படி நீளும் போக்கை நாம் தடுக்க வேண்டாமா அப்படி தடுக்க என்ன செய்ய வேண்டும்? இந்த நாய்கள் உற்பத்தியாகும் போக்கை கவனிக்க வேண்டும். அதில் நடமாடும் செல்வாக்கை கணக்கிட வேண்டும் அதற்கு நான் முறையான breeding என்ன என்பதை அறிந்திட வேண்டும். அறிவோம்..

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget