Brain Rot: அதென்ன ப்ரெயின் ராட்; 2024-ம் ஆண்டுக்கான வார்த்தை - தெரிஞ்சிக்கோங்க!
Brain Rot: ப்ரெயின் ராட் என்ற வார்த்தை பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
ப்ரெயின் ராட் (Brain Rot) என்னும் வார்த்தையை, ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ் (Oxford University Press) 2024-ம் ஆண்டிற்கான வார்த்தை (word of the year) என அறிவித்துள்ளது. ப்ரெயின் ராட் என்ற வார்த்தை 1854-ம் ஆண்டு 1854-ல் பயன்படுத்தப்பட்டதாக ஆவணங்கள் இருந்தாலும் 2023-2024 ஆண்டு காலகட்டத்தில் அதன் பயன்பாடு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் ரீல்ஸ், போஸ்ட் பார்க்காமால் இருக்க முடியாதா? இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பவரா? பல மணி நேரம் ஸ்கோர்ல் செய்துட்டே இருக்கீங்களா? இப்படி ரீல்ஸ் அதிகம் பார்ப்பவர்கள் ‘ப்ரெயின் ராட்’ பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். இதைதான் ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ் ‘Word of the Year for 2024’ ஆக குறிப்பிட்டுள்ளது.
ப்ரெயின் ராட் என்றால் என்ன?
இது தொடர்பாக ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ ஏதோ ஒன்றினை அதிகமாக நுகர்வதன் காரணமாக மனநிலை மற்றும் அறிவுசார் நிலையில் ஏற்படும் மாற்றம்: குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சீரழிவு.” என்று குறிப்பிட்டுள்ளது. தரம் குறைந்த / பயனற்ற ஆன்லைன் கன்டென்ட்களை தொடர்ந்து நுகர்வதால் மூளையின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும் பயனற்ற ஒன்றிற்கு நேரம் செலவிடுவதை, முக்கியத்துவம் வாய்ந்த விசயங்கள் இருந்தும் அதை செய்யாமல் ரீல்ஸ் பார்ப்பதை குறிப்பிட, பயனற்ற தகவல்கள் கொண்ட ரீல்ஸ்களை குறிப்பிட்ட இந்த பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரெயின் ராட் - வார்த்தை தேர்வு செய்தது எப்படி?
ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் மொழித்திறன் நிபுணர்கள் ஆறு வார்த்தைகளை பரிந்துரைத்துள்ளனர். அவற்றில் பொதுமக்கள் வாக்களித்ததில் இருந்து ‘ப்ரெயின் ராட்’ என்பதை தேர்வு செய்துள்ளனர். 2023-2024 இடைப்பட்ட ஆண்டுகளில் ‘ப்ரெயின் ராட்’ என்ற வார்த்தை 230 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. Gen Z, Gen Alpha கிட்ஸ் ‘ப்ரெயின் ராட்’ என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியிருப்பதாகவும் இந்த வார்த்தை சமூக வலைதளத்தில் பிரபலமாவதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
ப்ரெயின் ரா என்ற வார்த்தைக்கு பொருள் ஒரு நபரின் மனநிலை பயனற்ற கன்டென்ட்களை நுகர்வதால் ஏற்படும் பாதிப்பு ஆகும். இது இண்டர்நெட், சமூக வலைதளங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பே பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை. ஹென்றி டேவிட் தாரோ என்பவர் 1854-ல் புத்தகம் ஒன்றில் இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிரார். இப்போது இணைய உலகம் மீதான வெறுப்பை பிரதிபலிக்கவே இந்த வார்த்தையை நாம் பயன்படுத்துகிறோம். சமூக ஊடகங்கள் பற்றிய நமது கவலைகளை வெளிப்படுத்த நாம் பயன்படுத்தும் வார்த்தை மட்டுமே இது என்பதையும் ஆக்ஸ்ஃபோர்டு பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
உண்மையில் ப்ரெயின் ராட் எனும் ஒரு பாதிப்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்றாலும் சமீபத்திய நிலையை வைத்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ப்ரெயின் ராட் என்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்: “தொடர்ச்சியான பயனற்ற தகவல்களை ரீல்ஸ் / சமூல வலைதளம் மூலம் நுகரும்போது குறிப்பாக அதிகமாக நுகர்வு நடைபெறுமானால், அங்கு ’mental fatigue' ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. இது கவனசிதறல், மனச்சோர்வு, உற்பத்தித் திறன் குறைபாடு ஆகியவற்றை ஏற்படும். குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளது.