Weight Loss: வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ டிப்ஸ்!
Weight Loss: தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய தவற வேண்டாம்.
Weight Loss: உடல் பருமனாக இருப்பது ஆரோக்கியமின்மை இல்லை என்று சொல்கிறது மருத்துவ உலகம். ஆனாலும், உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாதவர்கள் கொஞ்சம் மெனக்கெடல்களைச் செய்ய வேண்டிதான் இருக்கிறது. உடல் எடையை குறைப்பது என்பது ஒரே மாதத்தில் சாத்தியமில்லை. அது நாம் எட்டிப் பிடிக்கும் இலக்கும் அல்ல. உடல் எடையை குறைத்தல் என்பது ஒரு பயணம். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பெரும்பாலும் பின்பற்றும் டயட்டில் அவர்களுக்கு பிடித்த, ரசித்து ருசித்து சாப்பிட உணவுகள் ஏதும் இடம்பெறாது. அந்த வேதனை உடல் எடை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்களே புரியும். ஆனாலும், பிடித்தமான உணவுகளை சாப்பிட்டும் உடல் எடையை குறைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
எதை உண்பது? எதைத் தவிர்க்க வேண்டும்? - இப்படி பல கேள்விகள். அதற்கு கூகுளிலும், நாம் சந்திப்பவர்களிடமும் குவிந்திருக்கிறது ஏராளமான பதில்கள். சரி, ஊட்டச்சத்து நிபுணர் புதிதாக ஒரு விஷத்தை சொல்லியிருக்கிறார். கேளுங்களேன். ஆமாம்! உடற்பயிற்சியுடன் கூடிய ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்றினால், உடல் எடையை குறைக்கும் பயணம் எளிதாகும் என்று சொல்கிறனர். அதோடு, எடை குறைப்பதில் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைப்பது எளிதானது அல்ல. அதற்கென செய்ய வேண்டியவைகள் குறித்து இங்கே காணலாம்.
காலை எழுந்ததும் தண்ணீர்
காலையில் எழுந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சிறந்த வழியாகும். இரவு உணவிற்கு பிறகு,நீண்ட நேரம் உணவு எடுத்துக்கொள்ள மாட்டோம், இல்லையா? அப்படியிருக்கையில், காலையில் ஒரு க்ளாஸ் தண்ணீர் நச்சுத்தன்மையை வெளியேற்றுவதற்கும் செரிமானத்திற்கும் உதவுகிறது. இது கொழுப்பை கரைப்பதை துரிதப்படுத்துகிறது.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி - உடல் எடை குறைக்கும் பயணத்தில் மிகவும் அவசியமானது. அதுவும்,காலையில் எழுந்ததும் யோகா, நடைப்பயிற்சி, ஜாகிங் உள்ளிட்ட உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய தவற வேண்டாம்.
காலை உணவு - புரோட்டீன் அதிகம் இருக்கட்டும்
காலை உணவு மிகவும் அவசியமானது. இதில் முட்டை, பயிர் வகைகள் உள்ளிட்ட புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். புரோட்டீன் ஸ்மூதி உள்ளிட்டவைகளை சாப்பிடலாம். புரோட்டீன் மிகுந்த உணவுகளை சாப்பிடுவதால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வை தவிர்க்க முடியும். ஆற்றல் கிடைக்கும்.
ஆரோக்கியமான உணவு முறை
ஆரோக்கியமான உணவு முறை உடல் எடையை குறைக்க உதவுகிறது. என்ன சாப்பிடுகிறோம் என்பதை உணர்ந்து சாப்பிட வேண்டும். துரித உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், அதிக எண்ணெய் மிகுந்த உணவுகள் உள்ளிட்டவைகளை தவிர்க்க வேண்டும். என்ன உணவு சாப்பிடுகிறோம் என்று உணர்ந்து ருசித்து உண்ண வேண்டும். அப்போது, சாப்பிட்ட திருப்தி உணர்வு கிடைக்கும். அதனாலேயே சாப்பிடும்போது எந்த சிந்தனையும் இல்லாமல் சாப்பிட வேண்டும்.
High-Intensity Interval Training - (HIIT)
High-Intensity Interval Training - என்பது அதிக அதிக இண்டென்சிட்டி வோர்க்கவுடஸ் மற்றும் குறைந்த இண்டென்சிட்டி வோர்க்கவுட்ஸ் இரண்டிற்கும் இடைவெளியுடன் பயிற்சி செய்வதுதான.
நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள்
நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் உடல் எடை குறைப்பதற்கு நல்ல சாய்ஸ். அதுவும், வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்புகளை குறைக்க அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை டய்ட்டில் சேர்க்க வேண்டும். முழு தானியங்கள், காய்கறி என அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
மகிழ்ச்சி முக்கியம்
வாழ்க்கை முறை மாற்றங்களால், அதிகரிக்கும் மன அழுத்தம் காரணமாக உடல் எடை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, மன அழுத்தத்தை குறைக்க யோகா உள்ளிட்டவற்றை பின்பற்றலாம்.
தேவையான அளவு தூக்கம் முக்கியம்
உடல் எடையை குறைக்கும் பயணத்தில் சிலர் தூக்கத்தின் முக்கியத்துவத்தை மறந்து விடுகிறார்கள். உங்கள் உடலில் ஒரு இன்ச் எடை குறைய வேண்டும் என்றாலும் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்காவிடில் அது நடைபெறாது.