வைரல் வீடியோ: மேடையில் அடிதடி.. உருண்டு பிரண்டு தாக்கிக்கொள்ளும் மணமக்கள்
ஒரு காணொளியில், ஒரு தம்பதியினர் தங்கள் திருமண நாளில் மண்டபத்தில் கடுமையான சண்டையில் ஈடுபடுவதைக் காட்டுகிறது
இணையத்தில் அவ்வப்போது சில விசித்திரமான விநோதமான திருமண வீடியோக்கள் வைரலாகி நமது பக்கத்தை ஆக்கிரமிப்பது உண்டு. வைரலாகும் எந்த ஒரு வீடியோவும் மக்களை மகிழ்விக்கின்றன. குறிப்பாக அழகான திருமண வீடியோக்கள் வைரலாவதில் ஆச்சரியமில்லைதான். இருப்பினும், எல்லா திருமணங்களும் அப்படிக் காதல் பொங்க இருப்பதில்லை. குறிப்பாக மணமகனும், மணமகளும் ஒருவரையொருவர் மேடையிலேயே தாக்கிக்கொள்வது எல்லாம் வீடியோவாக வைரலாகும்போது பார்வையாளர்களை சில சமயம் முகம் சுளிக்கச் செய்கிறது. அத்தகைய ஒரு காணொளியில், ஒரு தம்பதியினர் தங்கள் திருமண நாளில் மண்டபத்தில் கடுமையான சண்டையில் ஈடுபடுவதைக் காட்டுகிறது. வீடியோவில், மணமகள் கோபத்துடன் மணமகனை நோக்கி கையை நீட்டுகிறார், அதைத் தொடர்ந்து மணமகன் அவரைத் தடுக்க முயற்சிக்கிறார். பின்னர் இருவருக்குள்ளும் கடுமையான சண்டை ஏற்பட்டு இருவரும் ஒருவரோடு ஒருவர் மல்யுத்தம் செய்கிறார்கள். சுற்றியிருப்பவர்கள் தடுக்க முயன்றும் பலனில்லை. சண்டைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
View this post on Instagram
இன்ஸ்டாவில் வைரலான இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். பயனர்கள் வீடியோவில் தொடர்ந்து தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். சிலர் சண்டைக்கு உண்மையில் என்ன காரணம் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். சில இன்ஸ்டாகிராம் பயனர்கள் அதில் ‘தங்கள் திருமண நாளில் ஏற்கனவே சண்டையிட்டால் திருமணம் நீண்ட காலம் நீடிக்காது’ என்று கருத்து கூறியுள்ளனர். இருந்தாலும் மணமக்கள் சிரித்துக்கொள்வது போலவும் அந்த வீடியோவில் தென்படுகிறது. சண்டையிடும் அவர்களை மேடையில் இருப்பவர்கள் பிரிக்க முயலுகின்றனர்.