ஒரு கால்தான் இல்லை.. ஆனால் நம்பிக்கை நிறைய இருக்கு - ஜம்முவின் நம்பிக்கை நாயகனாய் மாறிய சிறுவன்
ஜம்மு – காஷ்மீரின் ஹண்ட்வாரா நகரில் ஒற்றைக் காலில் 2 கிலோ மீட்டர் நடந்து அதாவது குதித்து குதித்து பள்ளிக்குச் செல்லும் 9ம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவன்.
ஜம்மு – காஷ்மீரின் ஹண்ட்வாரா நகரில் ஒற்றைக் காலில் 2 கிலோ மீட்டர் நடந்து அதாவது குதித்து குதித்து பள்ளிக்க்குச் செல்லும் 9ம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவன். இவருக்கு Jaipur foot தொண்டு நிறுவனம் உதவ முன்வந்துள்ளது.
ஒற்றைக் காலுடன் 2 கிலோ மீட்டர் குதித்து குதித்து பள்ளிக்குச் செல்லும் பர்வேஷ் அகமது தான் இன்றைக்கு இணையவாசிகளிடம் டிரெண்ட். இன்றைக்கு எங்கு சென்றாலும் வாகனத்தை சார்ந்து வரும் சூழலுக்கு எல்லோரும் மாறிவரும் நிலையில், பர்வேஷ் அகமதுவின் கல்வி கற்கும் ஆர்வமும் அதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சியும் அனைவரின் கவனத்தையும் பாராட்டினையும் பெற்றுள்ளது.
#WATCH| Specially-abled boy walks to school on one leg to pursue his dreams in J&K's Handwara. He has to cover a distance of 2km while balancing on a one leg
— ANI (@ANI) June 3, 2022
Roads are not good. If I get an artificial limb,I can walk. I have a dream to achieve something in my life, Parvaiz said pic.twitter.com/yan7KC0Yd3
தினமும் ஒரு மணி நேரம்
ஜம்மு – காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் குவார் பகுதியைச் சேர்ந்த பர்வேஷ் அகமது, சமீபத்தில் நடந்த விபத்தில் தனது இடது காலை இழந்தார். வீட்டின் வறுமை காரணமாக செயற்கை கால் பொறுத்திக்கொள்ள முடியாத சூழலிலும் தனது பள்ளிப் படிப்பை தொடருகிறார். பள்ளிக்குச் செல்ல தனது வீட்டிலிருந்து 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறார். இதற்காக தினமும் 2 கிலோ மீட்டர் ஒற்றைக் காலுடன் நடந்து அதாவது குதித்து குதித்துச் சென்று வருகிறார். இதற்காக அவர் பள்ளிக்குச் செல்ல ஆகும் நேரம் ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக செலவாகிறது.
செயற்கை கால்
மருத்துவமனையில் வழங்கப்பட்ட சக்கர நாற்காலி இருந்தாலும், பள்ளிக்குச் செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக இருப்பதால், சக்கர நாற்காலியினை பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளார். பர்வேஷ் அகமதுவின் இந்த முயற்சியும் ஆர்வமும் JAIPUR FOOT எனும் தொண்டு நிறுவனத்தின் கவனத்தினை ஈர்த்துள்ளது. இத்தொண்டு நிறுவனத்தின் சார்பாக பர்வேஷ் அகமதுவிற்கு செயற்கை கால் பொருத்திக் கொள்ள அனைத்து உதவிகளையும் செய்யப்போவதாக அதன் சேர்மென் பிரேம் பந்தாரி தெரிவித்துள்ளார். வாலிபாலில் சிறந்த பயிற்சி பெற்று, பதக்கம் வென்று தனது கிராமத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன் எனவும் பர்வேஷ் கூறியுள்ளார்.