Hip Bone Fracture : இவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு அபாயம் அதிகம்.. ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்..
புகையிலை ,மது மற்றும் போதை பொருள் பாவனையில் இருந்து மீண்ட பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு அபாயம் இருப்பதாக ஆய்வில் தகவல்
லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு ஒரு கட்டுரையை வெளியிட்டு இருக்கிறது, இதன்படி சைவ உணவு உண்ணும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு அபாயம் இருக்கிறது என்ற செய்தியை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் வசிக்கும் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுத்தர வயதுடைய பெண்களிடம் நடத்திய ஆய்வின்படி அசைவம் உண்பவர்களை விட சைவம் உண்ணும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
புகையிலை மது மற்றும் போதை வஸ்துக்கள் இவற்றில் இருந்து மீண்டு வந்து, சைவ உணவு முறைக்கு மாறும் பெண்களுக்கு இந்த தாக்கம் அதிகம் இருக்கிறது என்றும் இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில் சற்றே ஒரு ஆறுதலான விஷயம் இருக்கிறது.
ஏனெனில் இது உணவுப் பழக்கத்துடன் தொடர்புடைய விஷயமாக இருக்கிறது. இந்த ஆராய்ச்சி முழுவதும் உலகளாவிய அளவில் நடைபெறாமல் இங்கிலாந்தில் மட்டுமே நடைபெற்றது இதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
பொதுவாக அசைவ உணவில் ப்ரோட்டீன்,கால்சியம்,இரும்பு, கால்சியம் தவிர அசைவ உணவுகளில் துத்தநாகம், செலினியம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ள என்பதை மறுப்பதற்கு இல்லை. இதே நேரம் இவர்கள் வசிக்கும் நாட்டின் தட்பவெப்ப நிலை, இவர்கள் உண்ணும் உணவுகளின் தன்மை, ஆகியவற்றை பொறுத்தே இந்த ஆய்வுகளின் முடிவை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும்.
இங்கிலாந்தில் பாண் வகை, பிரட்,இறைச்சி, பால் சார்ந்த சீஸ் பொருட்கள் , காய்கறிகள் மற்றும் ஓட்ஸ் என இவர்கள் உணவுப் பழக்க வழக்கம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதிலிருந்து திடீரென ஒருவர் சைவத்திற்கு மாறும்பொழுது சமச்சீர் உணவை எடுத்துக் கொள்கிறாரா என்பதையும் இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
இந்த ஆராய்ச்சியில் இவர்கள் எடுத்துக் கொண்ட அளவீடுகளில் பொருத்தவரை பெண்களின் உணவு பழக்கம்,வயது மற்றும் பொழுதுபோக்கிற்காகவும் உற்சாகத்திற்காகவும் அவர்கள் எடுத்துக் கொள்ளும் போதை வஸ்துக்கள் மற்றும் ஆரம்பத்தில் இருந்தே சைவ உணவை உட்கொள்ளும் நபர்களா அல்லது அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறிய நபர்களா என்பதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் இருந்து ஒருவர் சைவ உணவை உட்கொள்ளும் போது அவர் உடலும் மற்றும் அவருடைய குடும்ப பழக்க வழக்கத்தின் காரணமாக காய்கறிகள், கீரைகள் பழங்கள், கிழங்கு வகைகள் சிறு தானிய வகைகள் இவை அனைத்தும் சமச்சீராக அவர்கள் உணவுகளில் இருந்து கொண்டே இருக்கும்.
ஆனால் அசைவத்தில் இருந்து திடீரென சைவத்திற்கு மாறும் நபர்கள் புரதம், கால்சியம் விட்டமின்கள் ,நார்ச்சத்து ,மாவு சத்து மற்றும் மினரல்கள் என அனைத்தும் கலந்த சமச்சீர் உணவை எடுத்துக் கொள்ளாத போது, மேற்சொன்ன எலும்பு முறிவு குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.
அதே நேரம் சைவ உணவுகளில் இத்தகைய சத்துகள் இல்லை என்று கூறி விட முடியாது. உதாரணத்திற்கு தென்னிந்தியாவை பொறுத்தவரை சிறுதானிய பருப்பில் ஒரு வகையான துவரம் பருப்பு சார்ந்த சாம்பார் அல்லது துவரம் பருப்பு சேர்த்த காய்கறிகள் சேர்த்த கூட்டு போன்றவை தினம் தோறும் சைவ உணவு உண்பவர்களின் மெனுவில் கட்டாயம் இடம்பெறும்.
அரிசியில் கார்போஹைட்ரேட்டும் , இரும்புச் சத்தும் இருப்பதைப் போன்று இத்தகைய பருப்பு வகைகளில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. இதைப்போலவே சைவ உணவு உண்ணபவர்கள் பால் கலந்த டீ, காபி அல்லது தயிர்,பால் மற்றும் பாலாடை கட்டி என உண்ணுகிறார்கள், அவர்களுக்கு கால்சியமானது இந்த வகையிலும் கிடைக்கிறது.
கேழ்வரகு, பீன்ஸ், கொண்டைக்கடலை, (துவரம்பருப்பு) என இவை அனைத்திலும் கால்சியம் மக்னீசியம் நிறைந்து காணப்படுகிறது. சைவ உணவுகளான கீரை மற்றும் காய்கறிகளில் கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துகளை அதிக அளவில் கொண்டுள்ளனர்.
இதேபோல கிழங்குகளில் கார்போஹைரேட்டுகளை விட்டமின்கள் மற்றும் கால்சியம் என நிறைய சத்துக்களை கொண்டுள்ளது.
சிறுதானியங்களில் இரும்பு சத்து கால்சியம் மக்னீசியம் புரதம் மினரல்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் என நிறைந்து காணப்படுகின்றன.
இதைப்போல பழங்களிலும் விட்டமின்களும் நார்ச்சத்துக்களும் நீர்ச்சத்துகளும் நிறைந்து காணப்படுகின்றன.
ஆகவே அசைவம் சாப்பிடாத சைவ உணவு உண்ணும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு அபாயம் ஏற்படும் என்ற இந்த ஆய்வு அறிக்கையை மிக கவனமாக நாம் ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும்.ஏனெனில் இன்று சைவ உணவு மிகவும் பிரபலமாகி வருகிறது.
உயிர் கொள்ளாமை என்ற நோக்கம் ஒருபுறம் இருந்தாலும் கூட இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை குறைபாடு ஆகியவற்றிற்கு சைவ உணவு பெரும்பான்மையான நாடுகளில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.