மேலும் அறிய

Vastu Tips : வீட்டில் எந்த அறைக்கு என்ன நிறம் சரி... வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன?

வாஸ்து சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட சில நிறங்களைத் தேர்வு செய்து அதை வீட்டின் அந்தந்த அறைக்குப் பொருத்தமாக அடித்தால் எல்லாமே வளமாகும் சுபமாகும் எனக் கூறுகின்றனர் வாஸ்து நிபுணர்கள்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட சில நிறங்களைத் தேர்வு செய்து அதை வீட்டின் அந்தந்த அறைக்குப் பொருத்தமாக அடித்தால் எல்லாமே வளமாகும் சுபமாகும் எனக் கூறுகின்றனர் வாஸ்து நிபுணர்கள்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீடுகட்டுவது இப்போது சர்வ சாதாரண நிகழ்வாக ஆகிவிட்டது. ஒரு காலத்தில் வசதி படைத்தோர் மட்டுமே வாஸ்து சாஸ்திரத்தின் படி வீடு கட்ட, கட்டிய வீட்டை அங்கே இடித்து, இங்கே இடித்து வாசலை மாற்ற கதவை மாற்ற என இருந்தனர். ஆனால் வாஸ்து அறிஞர் ஆச்சார்யா இந்து பிரகாஷ் இதற்கு எளிய முறையில் தீர்வு சொல்கிறார்.

சமையலறைக்கு உகந்த நிறம் இதுதானாம்!
சமையலறை அன்னபூரணியின் ஆட்சி பீடம். அங்கு வளம் நிறைய வேண்டுமானால் அன்னபூரணிக்கு உகந்த நிறம் பூசினால் போதும் எனக் கூறுகிறார் வாஸ்து அறிஞர் ஆச்சார்யா இந்து பிரகாஷ். சமையலறையில் தங்க நிறத்தில் வண்ணம் பூச வேண்டும். அல்லது வெள்ளை நிறத்தில் பூச வேண்டும். இந்த இரண்டு நிறங்களும் இருந்தால் என்றும் உணவுக்குப் பஞ்சம் இருக்காது. அதேபோல் பூஜை அறையில் இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் நிற படம் வைக்க வேண்டும். குளியளறையில் நீலம் அல்லது வெள்ளை நிறப் படம் மாட்டிவைக்க வேண்டும். இந்த மூன்றையும் உறுதிப்படுத்தினால் குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்கு எந்தக் குறைவும் இருக்காது. 

கல்வி சிறக்க:
உங்கள் பிள்ளைகளின் கல்வி சிறக்க அவர்களி அறையில் க்ரீம் கலர், வெளிர் பர்ப்பிள் கலர், வெளிர் பச்சை நிறம், நீல நிறம் (வானத்தின் நீலம்) ஆகியனவற்றில் ஏதேனும் ஒரு நிறத்தைத் தேர்வு செய்து சுவரில் அடித்தால் குழந்தைகளுக்குப் படிப்பு நன்றாக வருமாம். மஞ்சள் என்பது கல்விக்கான நிறமாம். பச்சை என்பது ஞானத்துக்கான நிறமாம். இந்த நிறங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து உங்கள் பிள்ளைகளின் ஸ்டடி ரூமில் அடிக்குமாறு பரிந்துரைக்கிறது வாஸ்து சாஸ்திரம் எனக் கூறுகிறார் ஆச்சார்யா இந்து பிரகாஷ். அதேபோல் பிள்ளைகளின் அறையில் உள்ள சுவரில் மாட்டும் ஓவியங்கள், படங்களையும் பார்த்துப் பார்த்து தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறுகிறது சாஸ்திரம். சாஸ்திரப்படி சுவர் ஓவியங்களை வரைந்தால் பிள்ளைகளின் மனம் அங்குமிங்கும் அலையாமல் பாடத்தில் முழு கவனம் செலுத்துமாம்.

Vastu Tips : வீட்டில் எந்த அறைக்கு என்ன நிறம் சரி... வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன?

வாஸ்து சாஸ்திரத்தின் முக்கியத்துவம்:

வாஸ்து சாஸ்திரம் என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.

கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும் என்று வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர்.

கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்கவேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Embed widget