வெல்லம், புதினா உட்பட 4 மேஜிக் பொருட்கள்.. இதைக் குடிங்க.. எதிர்ப்பு சக்திக்கு ஒரு டானிக்
வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்புச்சக்தியுடன் இருக்க வெல்லம் கலந்து பானங்களை அன்றாட வாழ்வில் சேர்த்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள்.
ஆயுர்வேத மருத்துவத்தில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் கலந்து சூடான அல்லது குளிர்ச்சியானப் பானம் பருகினால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
காலையில் எழுந்தவுடன் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால் நம்மை அறியாமலேயே நம் உடல் சோர்வாகிவிடும். நீங்கள் அப்படி உணர்கிறீர்களா? அப்படின்னா ஆரோக்கியமான மற்றும் உற்சாகளிக்கக்கூடிய புத்துணர்ச்சியூட்டும் வெல்லம் சேர்த்த பானங்களுடன் உங்களது காலைப்பொழுதை தொடங்குங்கள் என்கிறார் யோகா பயிற்சியாளர் அவ்னி தல்சானியா. மேலும் எம்ப்டி கலோரிகள் என்று கூறப்படும் சர்க்கரையை தவிர்த்தும் வெல்லத்தை சேர்க்கும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்குத் தீர்வாக அமைகிறது எனவும் கூறப்படுகிறது.
எனவே இந்நேரத்தில் வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறியுள்ள தகவல்கள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம். இதுகுறித்து யோக பயிற்சியாளர் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தேவையானப் பொருட்கள்:
வெல்லம்
சியா விதைகள்
எலுமிச்சை
புதினா இலைகள்
View this post on Instagram
செய்யும் முறை:
முதலில் வெல்லத்தில் தண்ணீர் ஊற்றி உருகும் வரை கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும் இதனை சுமார் 10-15 நிமிடங்கள் ஆறவைக்கவும். பின்னர் வெல்லநீரில் 3-4 எலுமிச்சைகளைப் பிழிந்துக்கொள்ளவும்.
இதன்பிறகு நன்றாக மிக்ஸ் செய்துக்கொண்டு, சுவைக்காக சியா விதைகள் மற்றும் புதினா இலைகளை சேர்த்து பருகும் போது உடலுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றது.
இதோடு மட்டுமின்றி தினமும் நாம் காலையில் பருகும் தேநீர்களில் வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். இவ்வாறு மேற்கொள்ளும் போது உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு உடல் எடையைக்குறைப்பதற்கு சிறந்த டயட் ஆகவும் பார்க்கப்படுகிறது.
வெல்லம் கலந்த பானம் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்:
வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து பருகும் போது உடலுக்கு பல விதங்களில் நன்மை அளிக்கிறது. மேலும் செரிமானத்துக்கு உதவக்கூடிய என்சைம்களைத் தூண்டுவதால் செரிமானப் பிரச்சனை இருக்காது. மேலும் கிட்னி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமலும் நம்மைப் பாதுகாக்க உதவுகிறது.
சுவாசப் பாதைகள், நுரையீரல்கள், உணவுக் குழாய், வயிறு மற்றும் குடல் ஆகியவற்றை சுத்தம் செய்வதற்கு வெல்லம் உதவுகிறது.
வெல்லத்தில் இரும்புச்சத்து மட்டுமில்லாமல் பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றது.
பருவக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்குத் தீர்வாக அமைகிறது.
எலுமிச்சை மற்றும் வெல்லம் சேர்த்து பருகும் போது உடலுக்குத் தேவையான வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் கிடைக்கின்றது.
தினமும் உங்களுடைய காலைப்பொழுதை வெல்லம் கலந்த பானத்துடன் தொடங்கினால் நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். எனவே வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்க வெல்லம் கலந்து பானங்களை அன்றாட வாழ்வில் சேர்த்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள்.