மேலும் அறிய

Travel: கோடை விடுமுறையை அனுபவிக்க வேண்டுமா? எங்கே செல்லலாம்? பிரம்மிக்க வைக்கும் அழகிய படகு இல்லங்கள்!

இந்தியாவின் பல மாநிலங்களில் தனித்துவமான, பிரம்மாண்டமான, அழகிய படகு இல்லங்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

எல்லோரும் பொதுவாக கோடை கால விடுமுறையை கழிக்க குளிர் பிரதேசங்கள், மலைப் பிரதேசங்கள் அல்லது  வெளிநாடுகளில் பார்வையிடாத இடங்களுக்கு செல்ல விரும்புவார்கள். அதிலும் தனித்துவமான விடுமுறையை அனுபவிக்க வேண்டும் என்றால் தேர்ந்தெடுக்கக்கூடிய சிறந்த இடம் தான் இந்த படகு இல்லங்கள்.

இந்தியாவின் பல மாநிலங்களில் தனித்துவமான, பிரம்மாண்டமான, அழகிய படகு இல்லங்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

ஆகவே சற்று வித்தியாசமான முறையில் விடுமுறையை அனுபவிக்க விருப்பம் என்றால் இந்த மாநிலங்களில் உள்ள படகு இடங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

படகு இல்லங்களுக்கு பெயர் போன மாநிலம் தான் கேரளா. இந்த படகு இல்லங்களில் பயணிப்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவை நோக்கி படையெடுப்பர். அங்குள்ள கெட்டுவல்லம் என்றழைக்கப்படும் படகு இல்லத்தில் பயணம் செய்வதையே பயணிகள் மிகவும் விரும்புகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தளவில் சுற்றுலாப் பயணிகள் பார்க்கக்கூடிய இடங்கள் ஏராளமாக இருக்கின்றன. பழங்கால அரண்மனைகள், பிரம்மாண்டமான கோட்டைகள், வரலாற்று முக்கியத்துவம் மிக்க கோவில்கள் ,அழகிய மலைப்பிரதேசங்கள், குடைவரை கோவில்கள் ,அழகிய சிற்ப கலைக்கூடங்கள், கடல் பிரதேசங்கள் என  ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கின்றன.

இவற்றில் இருந்து சற்று மாறுபட்ட விதமாக தண்ணீரிலேயே மிதந்தபடி புதிய அனுபவத்தை பெற விரும்புவோருக்கு சிறந்த இடம் தான் இந்த படகு இல்லங்கள்.

இந்த பிரம்மாண்டமான படகுகள் வீடுகள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன .சுற்றுலா பயணிகள் தங்கும் வகையிலும், அவர்களுக்குரிய சகல வசதிகளுடன் கடலின் அழகையும் உப்பங்கழிகள் மற்றும் அதன் நீரோட்டத்தை கண்டு ரசிக்கும் வகையிலும், சுற்றியுள்ள இயற்கை வனப்பை காணும் வகையிலும் இந்த படகு இல்லங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
 
இந்தியாவில் உள்ள சிறப்புமிக்க 5 அழகான படகு இல்லங்கள்:

கேரளா:

கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள படகு இல்லங்கள் தனித்துவம் மிக்கவை. படகுகள் என்ற உடனேயே முதலில் நினைவுக்கு வருவது கேரளாதான். கெட்டுவல்லம் என்று அழைக்கப்படும் படகு இல்லம், மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. ஆலப்புழா, குமரகம் மற்றும் கோவளம் போன்ற பகுதிகள் கேரளாவில் படகு இல்லங்களில் பயணிக்க சிறந்த இடங்களாக கருதப்படுகின்றன. 

கேரளாவின் அழகுமிக்க உப்பங்கழி நீரோட்டத்தின் மீது, படகு இல்லங்களில் பயணம் செய்வதும்,  அவைகளினுள்ளே வசிப்பதும் மிகவும் அற்புதமான அனுபவத்தை தரும். கேரளாவில் நீரால் சூழப்பட்ட சில கிராமங்களிலிருந்து, நகரப் பகுதிகளுக்கு செல்வதற்கு அக்காலத்தில் 'கெட்டுவல்லம்' என்று அழைக்கப்படும் இந்த படகு இல்லங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அது காலப்போக்கில் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக தொடங்கின. பின்னர் இந்த கெட்டு வெல்லம் எனப்படும் படகு இல்லங்களில் சுற்றுலாப் பயணிகள் சவாரி செல்ல தொடங்கினர்.  இதன் காரணமாக இந்த படகு இல்லங்கள் இன்று கேரள சுற்றுலாத் துறைக்கு பெரும் வருமானம் ஈட்டித் தந்து கொண்டிருக்கிறது.

ஆகவே கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல விரும்புவோர்,ஆலப்புழா,கொல்லம், குமரகம், பூவார் போன்ற பகுதிகளில்  உள்ள படகு இல்லங்களில் பயணம் செய்யலாம்.

கேரளாவின் பசுமையான, உப்பங்கழி நீர்ப்பரப்பினை ரசித்து கொண்டே, உங்கள் வீடுகளில் இருப்பதை போன்ற ஒரு உணர்வை இந்த படகு இல்லங்களில் பெறலாம். இங்கு உங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல படகு இல்லங்களை தேர்வு செய்து கொள்ளலாம். பல்வேறு வடிவங்களிலும் ஏராளமான வசதிகளுடனும் இந்த படகு இல்லங்கள் காணப்படுகின்றன.

தால் ஏரி, ஸ்ரீநகர்:

ஸ்ரீ நகரின் அணிகலன்‌என்று அழைக்கப்படும் தால் ஏரி, காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். 26 கிமீ பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த கண் கவரும் ஏரி, ஸ்ரீ நகருக்கு வரும்  சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான சுற்றுலாத் தலமாகும்.

இமயமலையை பின்னணியாகக் கொண்டிருக்கும் இந்த ஏரி ஷிக்காரா  எனப்படும் மரப் படகு இல்ல பிரயாணத்துக்கு மிகவும் புகழ் பெற்றதாகும். இங்கிருக்கும் படகு இல்லங்கள் மூலம் தால் ஏரியைச் சுற்றிப்பார்த்து ரசிக்க முடியும். கோடை காலத்தில் விடுமுறையை கழிக்க கூடிய பகுதியாக இந்த ஸ்ரீநகரின் தால் ஏரி இருக்கிறது.

கண் கவரும் சுற்றுச்சூழலை கொண்ட ,இயற்கை பேரழகை தன்னகத்தை வைத்துள்ள ஸ்ரீநகர்  பகுதியை சுற்றி பார்க்க இந்த தால் ஏரியில் படகு இல்லங்களில் பயணிப்பது மிகவும் பிரமிப்பானது. படகு இல்லங்கள், ஷிக்காரா மரப்படகுகளிலும் சவாரி செய்திடும் அதேவேளை  சுற்றுலாப் பயணிகள் அழகான சூரிய அஸ்தமனத்தை இந்தப் பகுதியில் கண்டு ரசிக்க முடியும்.

அசாம்:

அசாம் இந்தியாவில் உள்ள அழகிய மலை வாசஸ்தலங்களுக்கு பெயர் பெற்ற மாநிலமாகும். இந்த மாநிலத்தில் ஏராளமான  பசுமை மிக்க தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ளன. அதேபோல் சுற்றிலும் இயற்கை வனப்புமிக்க பிரம்மபுத்திரா நதிக்கும் பெயர் பெற்றது அசாம் . இந்த பிரம்மபுத்திரா ஆற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை பெற வேண்டுமென்றால் படகு இல்லங்களில் சவாரி மேற்கொண்டு சில நாட்கள் தங்கி அழகை கண்டு ரசிக்கலாம். இங்கு நீரில் விளையாடி மகிழும் டால்பின்களின் அழகையும் நாம் காணலாம். அதேபோல் இந்த பிரம்மபுத்திரா ஆற்றை சுற்றிய பகுதிகள் வலசை வரும் பறவைகளுக்கு அடைக்கலமாக இருக்கிறது .ஆகவே இங்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகளையும் நாம் கண்டு ரசிக்கலாம்.

உடுப்பி, கர்நாடகா:

கர்நாடக மாநிலத்தின் உடுப்பியில் உள்ள ஸ்வர்ணா நதி என்பது படகு சவாரிக்கு தனித்துவமான இடமாகும். இந்த ஸ்வர்ணா நதி பகுதியில் தனித்துவமான  உப்பங்கழி பகுதிகள் நிறைந்துள்ளன . இங்கு மரப்படகுகள் ,படகு இல்லங்களில் சென்று நாம் அழகை கண்டு ரசிக்கலாம். இந்தப் பயணத்தில் கலாச்சார சமூகங்கள், தென்னந் தோட்டங்கள், வயல்வெளிகள் என ஏராளமான இயற்கை வளங்களை காணலாம். இங்கு சொகுசு ஹோட்டல்கள் போலவே சொகுசு படகு இல்லங்களும் இருக்கின்றன. சுற்றுலா பயணிகள் தமது பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு அழகான படகு இல்லங்களை தேர்வு செய்து பயணிக்கலாம்.
 
கோவா:

கோவாவிலும் அழகுமிக்க படகு  இல்லங்களில் பயணிக்கலாம். இங்கு பிரம்மாண்டமாக இருக்கும் படகு இல்லங்களில் இரவு நேர கொண்டாட்டங்கள் அதிக அளவில் நடத்தப்படுகிறது. அதேபோல் இங்குள்ள நீரோட்ட பகுதிகளின் அழகையும் இந்த படகு இல்லங்களின் மூலம் பயணிக்கும் போது நாம் பெறலாம். கோவாவை பொறுத்த அளவில் படகு இல்லங்களில் இரவு களியாட்ட விழாக்கள் அதிகளவில் நடத்தப்படுகிறது. அது ஒரு புறம் இருந்தாலும் அங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்க நமது பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் ஆடம்பரமான படகு இல்லங்களை வாடகைக்கு எடுத்து பயணிக்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
Embed widget