Women Condoms | செக்ஸுக்கு சரியானது ஆணுறையா? பெண்ணுறையா? - பாலியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
பெண்ணுறை என்ற ஒன்றும் சந்தையில் இருக்கிறது தெரியுமா? நைட்ரைல் எனப்படும் மெட்டீரியல் கொண்டு உருவாக்கப்படும் இந்த பெண்ணுறை கிட்டத்தட்ட ஆணுறை போலவே செயல்படும்.
தொலைக்காட்சி விளம்பரங்களில் பெரும்பாலும் ஸ்கோர், மூட்ஸ் என ஆணுறைக்கான விளம்பரங்கள் மட்டும்தான் பார்த்திருப்போம். அரசு எய்ட்ஸ் தொற்று விழிப்புணர்வில் கூட ஆணுறைதான் விளம்பரப்படுத்தப்படுகிறது. இவ்வளவு ஏன்? ஜி.எஸ்.டி. வரிவிலக்கில் கூட ஆணுறைக்குதான் விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், பெண்ணுறை என்ற ஒன்றும் சந்தையில் இருக்கிறது தெரியுமா? நைட்ரைல் எனப்படும் மெட்டீரியல் கொண்டு உருவாக்கப்படும் இந்த பெண்ணுறை கிட்டத்தட்ட ஆணுறை போலவே செயல்படும். யோனியின் உட்பகுதியில் சிறிய பாக்கெட் போன்று இது உபயோகிக்கப்படுகிறது.
இத்தனைக்கும் ஆணுறை அதன் தட்பவெப்பத்துக்கு ஏற்ப லேட்டக்ஸ் உட்பட பல்வேறு மெட்டீரியல்களால் தயாரிக்கப்படுகிறது. பெண்ணுறையின் நைட்ரைல் எத்தகைய வெப்பத்தையும் தாங்குவதாக இருந்தாலும் அது அதிகம் மார்க்கெட்டிங் செய்யப்படுவதில்லை... இருந்தாலும் பெண்ணுறையா? ஆணுறையா? எது உபயோகிக்கத் தகுந்தது? பாலியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
பெண்ணுறை அணிவதால் கருவுறுதல் 95 சதவிகிதம் வரை தவிர்க்கப்படுகிறது அதுவே ஆணுறையில் 99 சதவிகிதம் தவிர்க்கப்படுகிறது. இரண்டுமே 100 சதவிகிதம் பயன் அளிப்பதில்லை என்பது வேறு கதை.
ஆணுறைக்கு வெளிப்பகுதியில் மட்டும்தான் லூப் இருக்கும் அதுவே பெண்ணுறைக்கு இரண்டு பக்கத்திலும் லூப் தடவப்பட்டிருக்கும். அதனால் உடலுறவு இருவருக்குமே எளிதாக இருக்கும்.
ஆணுறை உபயோகிக்கும் பலர் உடலுறவின்போது தேவையான கிளர்ச்சியை அது தருவதில்லை என கம்ப்ளைன் செய்துள்ளனர் அதுவே பெண்ணுறையில் அது உருவாக்கப்படும் மெட்டீரியல் காரணமாக இதுபோன்ற புகார்களே எழுவதில்லை என்கின்றனர் அதனை உபயோகிக்கும் பெண்கள்.
ஆணுறை பெண்ணுறை இரண்டுமே ஒரே முறை உபயோகிப்பதுதான். விந்தணு வெளியேறியதும் அதை உடனடியாகத் கழற்றி எறிவது பரிந்துரைக்கப்படுகிறது.
பெண்ணுறையில் உள்ள மற்றொரு பாசிட்டிவ் அம்சம் அதனை பீரியட்ஸ் காலங்களிலும் பயன்படுத்தலாம். பொதுவாக பீர்யட்ஸ் சமயத்தில் உடலுறவு வைத்துக்கொள்ள பல ஜோடிகள் தயங்குவார்கள். ஆணுறை உபயோகப்படுத்துபவர்களுக்கும் இதில் சிறிது தயக்கம் உண்டு. இந்த சமயங்களில் பெண்ணுறையை உபயோகிக்கலாம்.,
காண்டம்களுக்கும் இன்சூரன்ஸ் இருக்கிறது தெரியுமா? ஆம், பெண்ணுறை உபயோகித்து அது பயனளிக்க வில்லை என்றால் நீங்கள் உடனடியாக அதை தயாரிக்கும் நிறுவனத்திடம் காப்பீட்டு உரிமை கோரலாம். அதுவே ஒருவேளை நீங்கள் உபயோகிக்கும் ஆணுறை பயன் அளிக்காமல் போனால் போனதுதான் பெண்ணுறை போல இதில் இன்சூரன்ஸ் கோர முடியாது. அந்த வகையில் பெண்ணுறைக்கு எக்ஸ்ட்ரா ஒரு மார்க்.
இந்தியச் சந்தைகளில் பெண்ணுறை இன்னும் பரவலாக விற்பனை ஆவதில்லை என்றாலும் மென்சூரல் கப்கள் போல இவை ஆன்லைனில் கிடைக்கின்றன. எதுவாக இருந்தாலும் உங்கள் உடல் மற்றும் உடலுறவுக்கான உங்கள் தேர்வை உங்களை விட வேறு யாராலும் சிறப்பாக புரிந்துகொள்ள முடியாது. ஒவ்வொரு உடலுறவு சமயத்திலும் இதனை உபயோகப்படுத்துவதன் மூலம் பெண்ணுறையா அல்லது ஆணுறையா? எது உங்களுக்குச் சரியானது என்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )