(Source: ECI/ABP News/ABP Majha)
Thanksgiving Destinations: நன்றி தெரிவித்தல் நாள் கொண்டாட்டம்; செல்ல வேண்டிய உலகின் 5 சிறந்த இடங்கள்! இதோ!
Thanksgiving Destinations: நன்றி தெரிவித்தல் நாளுக்கு செல்ல வேண்டிய சிறந்த சுற்றுலா தளங்கள் லிஸ்ட். nந்
Thanksgiving Destinations:
அமெரிக்காவில் நவம்பர் மாத நான்காவது வியாழக்கிழமையன்று ‘Thanksgiving day’ கொண்டாடப்படுகிறது. அதாவது ’நன்றி நவில்தல் நாள்’, நன்றி தெரிவித்தல் நாள்’. இது அமெரிக்க மக்களின் பாரம்பரிய அறுவடை திருநாள். நாம் தைப்பொங்கல் கொண்டாடுவது போல, அங்கே இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இது கனடா, செயிண்ட் லூசியா, லிப்ரியா உள்ளிட்ட நாடுகளிலும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவின் போது குடும்பம், நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களுடன் இணைந்து பல வித உணவு வகைகளை சமைத்து உண்டு மகிழ்வர். தங்கள் அன்பிற்குரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொது விடுமுறையும் அளிக்கப்படும்.
இந்தாண்டு நாளை ( 23-ஆம் தேதி) நன்றி தெரிவிக்கும் நாள் அமெரிக்காவில் கொண்டாடப்பட உள்ளது.
நன்றி தெரிவிக்கும் நாளன்று செல்ல வேண்டிய சிறந்த இடங்களை இக்கட்டுரையில் காணாலம். நீங்கள் இதுவரை சென்றிராத அழகிய இடங்களுக்கு பயணிக்க இதோ லிஸ்ட்.
ட்ரோமோலாண்ட் கோட்டை, அயர்லாந்து (Dromoland Castle, Ireland)
அல்டாண்டிக் பெருங்கடலை கடந்து, அயர்லாந்து கிளேரின் நகருக்குச் செல்லலாம். நன்றி தெரிவிக்கும் நாளை பிரம்மாண்டமாக கொண்டாடலாம். அயர்லாந்தில் உள்ள ட்ரோமோலாண்ட் கோட்டையில் பாரம்பரிய முறைப்படி கொண்டாடங்கள் நடைபெறும். ஃபால்கன்ரி, வில்வித்தை, களிமண் சுடுதல் மற்றும் கோல்ஃப் ஆகிய விளையாட்டுப் போட்டிகளுடன் வாரத்தை செலவிடலாம்.
மாவூய், ஹவாய் (Maui, Hawaii)
வெய்யிலோடு நீங்கள் நன்றி தெரிவிக்கும் நாளை கொண்டாட விரும்பினால், உங்களுக்கு ஏற்ற இடம், ஹவாயில் உள்ள மாவூய் தீவு. கடற்கரையில் சுவையான உணவுகளுடன் பாரம்பரிய முறையில் கொண்டாட்டங்கள் நடைபெறும். அந்த வாரத்தையே கொண்டாடிட, அங்கிருந்து அருகில் உள்ள தீவுகளுக்கும் செல்லாலம்.
ஹானா (Hana) ஸ்விம்மிங் ஹோனாலோ பே( swimming Honolua Bay), உள்ளிட்ட இடங்களுக்கு செல்லலாம். மேலும், மாவூய் தீவில் உள்ள மக்களின் பழமையான உணவு வகைகள், வாழ்வியல் முறை ஆகியவற்றை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா (San Francisco, California)
இந்த நாளை கொண்டாட மேற்கு கடற்கரைக்குச் சென்று வளைகுடாவில் உள்ள நகரத்திற்கும் செல்லாம். கலிஃபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகர் விழா கோலம் பூண்டிருக்கும். அமெரிக்காவின் பாரம்பரிய விழாவினை கொண்டாட அன்றைய நாளில் தயாரிக்கப்படும் பிரத்யேக உணவுகள் உள்ளிட்டவைகளுடன் ஆடல், பாடல் என கொண்டாட்டம் கலைக்கட்டும்.
அங்குள்ள கோல்டன் கேட் பாலம், கோல்டன் கேட் பூங்கா, உள்ளிட்டவைகளுக்கும் சென்று வரலாம். நகரம் இலையுதிரும், குளிர்காலத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கும்.
நியூயார்க்
நியூயார்க் நகரம் யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். அதுவும், பாரம்பரிய கொண்டாட்டத்தின்போது நியூயார்க் சென்றால் ரம்மியமாக இருக்கும்.
அதுவும், இலையுதிர்காலத்தில் நியூயார்க்குடன் எதையும் ஒப்பிட முடியாது. இந்த ஆண்டு நன்றி தெரிவிக்கும் நாளை அங்கே சென்று கொண்டாடாலம். உங்களுக்கு எதிர்பாராத பல நல்ல அனுபவங்களும் நினைவுகளும் பரிசாக கிடைக்கும். உணவு வகைகளும் ருசியாக, புதிய வகைகளாக இருக்கும்.
Bahamas
நீங்கள் வெப்பமண்டல பகுதிக்குச் செல்ல நினைத்தால், மியாமி மற்றும் கிழக்கு கடற்கரையில் அல்லது அருகிலுள்ள பல நகரங்களுக்குச் செல்லலாம். குறிப்பாக பஹாமாஸுக்குச் செல்வது பட்ஜெட் ஃபிரெண்ட்லியும் கூட. தீவுகளுக்குப் பயணம் செய்து, நீச்சல், ஸ்நோர்கெல்லிங், படகு பயணம், விண்ட் சர்ஃபிங் மற்றும் பலவிதமான நீர் விளையாட்டுகள் போன்றவைகலை என்ஜாய் செய்யலாம். நீல நிற கடற்கரையில் உங்கள் நேரத்தை செலவிடலாம். அருகெ சுற்றிப் பார்க்க பல இடங்களும் இருக்கின்றன.
முக்கியமான விஷயம், இந்த நகரங்களில் தேங்க்ஸ்கிவிவிங்கை கொண்டாட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்தாண்டு நன்றி தெரிவித்தல் நாளை சிறப்பாக கொண்டாட நீங்க எங்கே பயணம் செய்ய போறீங்க. பயணம் இனிதாக அமையட்டும்.
ஹேப்பி தேங்க்ஸ்கிவ்விங் மக்களே!