Health Tips: உஷார்.. மருத்துவர் பரிந்துரையில்லாமல் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்றீங்களா..? ப்ளீஸ் இதைப்படிங்க..!
சிலருக்கு கடைகளில் மிட்டாய் வாங்குவதுபோல் சுயமாக மருந்து, மாத்திரைகளை வாங்கும் பழக்கம் இருக்கும். சளி, இருமல், காய்ச்சல், வயிறு உபாதை என சகலத்துக்கும் தாங்களே மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கிக் கொள்வார்கள்.
சிலருக்கு கடைகளில் சாக்கலேட் வாங்குவதுபோல் சுயமாக மருந்து, மாத்திரைகளை வாங்கும் பழக்கம் இருக்கும். சளி, இருமல், காய்ச்சல், வயிறு உபாதை என சகலத்துக்கும் தாங்களே மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கிக் கொள்வார்கள்.
வைட்டமின் மாத்திரைகள்:
இன்னும் சிலர் ஹெல்த் கான்சியஸ் என்ற பெயரில் வைட்டமின், அயர்ன், ஜிங்க் என்று சத்து மாத்திரைகளையும் விழுங்கிவைப்பார்கள். வைட்டமின், ஜிங்க் போன்ற சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் அதனை முறையாக மருத்துவரிடம் பரிந்துரையை பெற்று உட்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அதிகமான சப்ளிமென்ட், முறையற்ற சப்ளிமென்ட்டுகள் உடலில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்திவிடும்.
இணையங்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்தும் மக்கள் சில நேரங்களில் கண்டபடி வைட்டமின் மாத்திரைகளை உட்கொள்வது உண்டு. வைட்டமின் பி, கே, டி, பி12, பயோடின், ஜிங்க் போன்ற சப்ளிமென்ட்டுகளும் சந்தையில் மலிந்து கிடக்கின்றன. இதனாலும் கூட மக்கள் அதிகமாக சுயமாக இவற்றை உண்ணும் போக்கு வந்துள்ளது. பல நேரங்களில் நம் உணவுப் பழக்கவழக்கங்களில் சிற்சில மாற்றங்களை ஏற்படுத்தினாலே போதும் அவை சரியாகிவிடும். மிகவும் மோசமான பிரச்சனைகள் வரும்போதுதான் மருத்துவர்களே எந்த குறைபாடு உள்ளதோ அதற்கேற்ப வைட்டமின், அயர்ன், கால்சியம், ஜிங்க் என சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைக்கின்றனர்.
வைட்டமின்கள் அதிகமானால் அது நிச்சயமாக உள் உருப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
வைட்டமின் ஏ: வைட்டமின்கள் அதிகமானால் லேசான குமட்டலை ஏற்படுத்தும். மிக அதிகமான வைட்டமின்கள் கோமாவை கூட ஏற்படுத்தும். வைட்டமின் ஏ வை ஒரு நபர் 200 மில்லிகிராமுக்கு மேல் எடுத்துக் கொண்டால் Hypervitaminosis ஹைப்பர்வைட்டமினோஸிஸ் ஏற்படும். ஒரு நபரின் உடலில் வைட்டமின் ஏ அதிகமாக இருக்கும்போது ஹைப்பர்விட்டமினோசிஸ் ஏ உருவாகிறது. இந்த நிலை வைட்டமின் ஏ நச்சுத்தன்மை என்றும் அழைக்கப்படுகிறது.
ஹைப்பர்விட்டமினோசிஸ் ஏ ஒரு கடுமையான அல்லது நாள்பட்ட வைட்டமின் ஏ சத்து அதிகரிப்பால் உண்டாவது இருக்கலாம்.இது அக்யூட் மற்றும் க்ரானிக் என இரண்டுவகைப்படுகிறது. ஒரு நபர் சில மணிநேரங்களில் அதிக அளவு வைட்டமின் ஏ உட்கொள்ளும் போது கடுமையான (அக்யூட்) ஹைப்பர்வைட்டமினோசிஸ் ஏ ஏற்படுகிறது. இதற்கு நேர்மாறாக, வைட்டமின் ஏ அளவுகள் காலப்போக்கில் உடலில் மெதுவாக உருவாகும்போது நாள்பட்ட (க்ரானிக்) ஹைப்பர்வைட்டமினோசிஸ் ஏ ஏற்படுகிறது.
வைட்டமின் பி: வைட்டமின் பி அதிகமானால் அது உயர் ரத்த அழுத்தம், அடிவயிற்று வலி, பார்வையில் கோளாறு, கல்லீரல் சேதம் ஆகியனவற்றை ஏற்படுத்தும். வைட்டமின் பி6 அதிகமானால் குமட்டல், நெஞ்செரிச்சல், சரும வெடிப்புகள், வெளிச்சத்தால் ஏற்படும் அழற்சிகள் ஆகியன ஏற்படும்.
வைட்டமின் சி: வைட்டமின் சி அதிகமானால் அது வயிற்றோட்டம், அடிவயிற்று வலி, குமட்டல், வாந்தி, ஒற்றைத் தலைவலி ஆகியனவற்றை ஏற்படுத்தும்.
வைட்டமின் டி: பசியின்மை, சீரற்ற இதயத் துடிப்பு, திடீர் எடை குறைவு, உறுப்புகள் சேதம் ஆகியன ஏற்படும். வைட்டமின் டி ஓவர்டோஸ் உடலில் நச்சுத்தன்மையை ஏற்றும்.
வைட்டமின் இ: வைட்டமின் இ அதிகமானால் அதனால் அடிவயிற்று வலி ஏற்படும். ரத்தம் உறைதலைத் தடுக்கும்.
வைட்டமின் கே: வைட்டமின் கே அதிகமானால் வேறு ஏதும் பக்க விளைவுகள் ஏற்படாது. ஆனால் ஒருவேளை வைட்டமின் கே ஓவர்டோஸ் ஆன நபர் ரத்தம் அடர்த்தி குறைக்கும் வார்ஃபாரின் அல்லது ஆன்ட்டிபயாடிக்ஸ் ஏதும் எடுத்துக் கொள்பவராக இருந்தால் அது அந்த மருந்துகளின் விளைவுகளில் தடையை ஏற்படுத்தும்.