செக்ஸ் லைஃப் ஹெல்த்தியா இருக்கணுமா? இந்த உடற்பயிற்சிகள் போதும்னு சொல்றாங்க..
செக்ஸ் லைஃப் ஆரோக்கியமாக நீடிக்க தேவையான உடற்பயிற்சிகள் என்னென்ன?
பொதுவாக தம்பதிகள் இடையே இருக்கும் தாம்பத்ய உறவு அவர்களுக்கு மத்தியில் அன்பை பரிமாறி கொள்வதுடன் அவர்கள் உடலில் இருக்கும் சில கலோரிகளை எரிக்கவும் உதவும். ஆகவே உடலுறவில் ஈடுபடுவது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் சற்று உதவுகிறது. மேலும் சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் அது மிகவும் முக்கியமானதாக அமைகிறது. இந்தச் சூழலில் உடலுறவின் போது பெரும்பாலான தம்பதிகள் சந்திக்கும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று உடலுறவில் சில பிரச்சனைகளை எதிர்கொள்வதாகும். இந்தப் பிரச்னைக்கு பல நேரங்களில் எளிய வகை உடற்பயிற்சிகளின் மூலம் தீர்வு காணமுடியும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது இந்த விஷயம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு சில எளிய உடற்பயிற்சி செய்தாலே செக்ஸ் லைஃப் ஆரோக்கியமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி ஆரோக்கியமான செக்ஸ் லைஃப் தேவையான உடற்பயிற்சிகள் என்னென்ன?
க்ளூட் பிரிட்ஜ்:
இந்த வகையான உடற்பயிற்சி செய்ய நீங்கள் முதலில் தரையில் படுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் உங்களுடைய இரு கால்களையும் ஒன்று சேர்த்து கால் பகுதியில் இருந்து இடுப்பு பகுதி வரை தரையிலிருந்து சற்று மேலே தூக்க வேண்டும். இந்த நிலையை சில விநாடிகள் நீடித்து வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் இடுப்பு மற்றும் அதற்கு கிழே உள்ள தசைகள் வலு அடையும்.
புஷ் அப்:
இந்த வகையான உடற்பயிற்சி பெரும்பாலும் அனைவரும் செய்வதுதான். அதாவது படுத்துக்கொண்டு தரையை வரை சென்று கையை வைத்து உடலின் எடையை தாங்கி பிடித்து கொண்டு புஷ் அப் எடுக்க வேண்டும். இதில் கையின் நிலையை மாற்றியும் புஷ் அப் எடுத்து பழக வேண்டும்.
லெட்ரல் லூஞ்:
இந்த உடற்பயிற்சியை செய்ய முதலில் நேராக நிற்க வேண்டும். பின்னர் உங்களுடைய ஒரு காலை சற்று முன்னால் வைத்து மற்றொரு காலை முட்டி போடுவது போல் வைக்க வேண்டும். சிறிது நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நேராக வந்து கால்களை மாற்ற வேண்டும். இப்படி சில நிமிடங்கள் இரண்டு கால்களிலும் மாறி மாறி செய்ய வேண்டும்.
ஜிம் பால் க்ரன்ச்ஸ்:
இந்த வகையான உடற்பயிற்சிக்கு ஜிம்மில் பயன்படுத்தப்படும் பந்து தேவைப்படும். அந்தப் பந்தின் மீது உடலின் நடு பகுதி படும் வகையில் படுக்க வேண்டும். உங்களுடைய கை மற்றும் தலை ஆகிய இரண்டும் பந்துக்கு கீழே இருக்க வேண்டும். அதேபோல் மறுபுறம் பந்துக்கு கீழே உங்களுடைய கால்கள் இருக்கும் வேண்டும்.
இவ்வாறு சில உடற்பயிற்சிகளை செய்யும் போது உங்களுடைய உடல் தசைகள் வலு அடையும். மேலும் உடற்பயிற்சி கூடத்தில் ஸ்குவாட் பயிற்சி ஆகியவையும் செய்தால் அது உடலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமையும்.
மேலும் படிக்க:சண்ட போட்டுட்டு, சமாதானமாக ரொமான்ஸா.. டோட்டலி ஓக்கேன்னு சொல்றாங்க எக்ஸ்பர்ட்ஸ்..!