காதல் எப்போதும்... எங்கேயும் வரும்... காதலில் விழுவதை கண்டறிய அறிகுறிகள் உள்ளதா? இதோ அவை!
சினிமாவில் காட்சிப்படுத்தப்படுவது போல் தினமும் இரவு தூக்கம் இன்மை தான் முக்கிய அறிகுறியா? இதற்கு வல்லுநர்களின் பதில் என்ன?
காதல் என்பது இந்த உலகில் மனிதர்கள் அனைவருக்கும் ஏற்படும் முக்கியமான உணர்வுகளில் ஒன்று. சிலருக்கு திருமணத்திற்கு முன்பாகவே காதல் தொடங்கியிருக்கும். மற்ற சிலருக்கு திருமணத்திற்கு மனைவியின் மேல் காதல் அதிகமாக இருக்கும். எப்படி இருந்தாலும் காதல் என்ற உணர்வு இல்லாமல் மனிதர்கள் இருப்பது மிகவும் கடினமான ஒன்று. அப்படிப்பட்ட முக்கியமான உணர்வில் நீங்களும் வயப்பட்டுள்ளீர்களா என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடியும்?
அதற்கு ஏதேனும் சில அறிகுறிகள் உள்ளதா? சினிமாவில் காட்சிப்படுத்தப்படுவது போல் தினமும் இரவு தூக்கம் இன்மை தான் முக்கிய அறிகுறியா? இதற்கு வல்லுநர்களின் பதில் என்ன?வல்லுநர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் ஆய்வின்படி நாம் ஒருவருடன் காதல் வயப்பட்டு விட்டோமா என்பதை சில நடவடிக்கைகளை கண்டறியலாம் என்று கூறுகின்றனர். அதன்படி அவர்கள் கூறிய சில நடவடிக்கைகள்
சபரிசத்தை எப்போதும் விரும்ப தொடங்குவது:
நீங்கள் காதல் வயப்பட்டுவிட்டால் அந்த நபரின் சபரிசம் எப்போதும் உங்களுடைய நினைவில் இருக்கும் அவர்களின் சபரிசத்தை நீங்கள் எப்போதும் நியாபக படுத்தி கொண்டே இருப்பீர்கள்.
மகிழ்ச்சியான நேரம்:
ஒருவர் மீது நீங்கள் காதல் வயப்பட்டுவிட்டால் உங்களுடைய கஷ்டமான நேரங்களில் கூட அவருடன் இருந்த மகிழ்ச்சியான தருணம் தான் நினைவிற்கு வரும். அத்துடன் அந்த நபருடன் அதிக நேரத்தை செலவிட நீங்கள் விரும்புவீர்கள்.
முக்கியமான ஆலோசனையை பெறுதல்:
பொதுவாக உங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை நீங்கள் தான் எடுப்பீர்கள். ஆனால் ஒரு வேளை நீங்கள் காதல் வயப்பட்டுவிட்டால் அதில் ஒருமுறையாவது உங்களுடைய அன்புக்கு உரியவரிடம் கருத்து கேட்காமல் முடிவு எடுக்கமாட்டீர்கள்.
அவர்களுடன் வருங்கால திட்டம் குறித்த உரையாடல்:
காதல் வயப்பட்டுள்ளவர்கள் தங்களுடைய வருங்கால திட்டங்கள் குறித்து பேசும் போது தங்களை அறியாமல் அன்புக்கு உரியவர்களையும் சேர்த்தே திட்டமிடுவார்கள். இதுவும் ஒரு முக்கியமான அறிகுறி அதிக பேரிடம் தெரியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறிய தியாகங்களை செய்வது:
காதல் வயப்படுவதற்கு முன்பாக நீங்கள் ஒரு விஷயங்களில் எப்போதும் வலைந்து கொடுக்கவே அல்லது சமாதானம் செய்யவோ மாட்டீர்கள். ஆனால் காதல் வந்த பிறகு உங்களுக்கு பிடிக்காத அது போன்ற விஷயங்களை அவர்கள் செய்தாலும் நீங்கள் அதை பெரிதாக எடுத்து கொள்ள மாட்டீர்கள். மேலும் அவர்களுக்காக நீங்கள் எந்தவித தியாகத்தையும் செய்ய துணிவீர்கள்.
மகிழ்ச்சியோ துக்கமோ முதலில் சொல்வது அவரிடம் தான்:
உங்களுடைய வாழ்வில் மகிழ்ச்சியான செய்தி என்றாலும் அல்லது துக்கமான செய்தி என்றாலும் முதலில் அவர்களிடம் பகிர வேண்டும் என்று மனம் துடிக்கும். இதுவும் ஒருவகையான காதல் அறிகுறி என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அவரின் துயரம் உங்களுடையதாகும்:
பொதுவாக ஒருவர் தன்னுடைய காதலி அல்லது காதலன் துக்கமாக இருக்கும் போது அவர்களுடைய துக்கத்தை உங்களுடையதாக கருதுவார்கள். அவருடைய துயரம் உங்களுடையதாக மாறும்.
எப்போதும் அவர்களை பற்றி பேசுதல்:
ஒருவர் காதல் வயப்பட்டுவிட்டால் அதன் பின்னர் அவர்களை அறியாமலே அவருடைய நண்பர்களிடம் காதலி/காதலன் குறித்தே அதிகமாக பேச நேரிடும். இதுவும் ஒரு வகையான சுகமான அறிகுறியாகவே உள்ளது.
பிடித்த விஷயத்தை அவருடன் செய்ய நினைப்பது:
காதல் வயப்பட்டவர்கள் தங்களுக்கு பிடித்த விஷயத்தை தங்களுடைய அன்புக்கு உரியவருடன் செய்ய வேண்டும் என்று கருதுவார்கள். அதுவும் ஏற்கெனவே அவர்கள் தனியாக அந்த விஷயத்தை செய்திருந்தாலும் மீண்டும் அவர்களுடன் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.
அவர்களுடைய குறுஞ்செய்திக்காக காதிருப்பது குறையும்:
பொதுவாக ஒரு உறவின் தொடக்கத்தில் அவர்களுடைய குறுஞ்செய்தி எப்போது வரும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். அதுவே அவர்கள் இருவருக்கும் இடையே காதல் உறவு மலர்ந்துவிட்டால், அந்த பயம் இருக்காது. மேலும் அவரிடம் இருந்து நிச்சயம் பதில் செய்தி வரும் என்ற உணர்வு அதிகமாகிவிடும். இதுவும் இருவருக்கு இடையே இருந்த நட்பான உறவு காதலாக மாறியுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க:வளரும் குழந்தைகள் எடுத்து கொள்ள வேண்டிய 5 சூப்பர் உணவுகள்!