Signs of Love: நீங்கள் காதல் கடலில் விழுந்துவிட்டீர்களா? இவையெல்லாம் தான் அறிகுறிகள், செக் பண்ணலாமா..!
Signs of Love: நீங்கள் ஒருவரை காதலிக்க தொடங்கிவிட்டீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் பற்றி இந்த தொகுப்பில் அறியலாம்.
Signs of Love: கீழே பட்டியலிடப்பட்டுள்ள அறிகுறிகளை உணர்ந்தால், நீங்கள் காதலில் விழுந்துவிட்டீர்கள் என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
காதலுக்கான அறிகுறிகள்:
காதல் எப்போது, யார் மீது, எதற்காக வரும் என்ற கேள்விகளுக்கான பதிலை யாராலும் சொல்ல முடியாது. ஆனால், அதில் விழுந்தால் வெளியே வருவது என்பது அவ்வளவு சுலபமான காரியமும் அல்ல. காதல் கொள்பவர்களுக்கான அனைவரது முடிவும் வெற்றியாகுமா அல்லது தோல்வி அடையுமா என்தை கணிக்க முடியாது, ஆனால் இந்த இரண்டுக்கும் இடையே ஒரு கட்டம் இருக்கிறது. ஒரு மனிதனை எவ்வளவு நேசிக்க முடியும் என்பதை அப்போதுதான் உணரமுடியும். நீங்கள் காதலில் விழுந்துவிட்டீர்கள் என்பதை அறிய சில அறிகுறிகள் உள்ளன. நீங்கள் யாரையேனும் விரும்புகிறீர்களா? ஒருவர் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு காதல் தானா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள கீழே பட்டியலிடப்பட்டுள்ள அறிகுறிகள் உங்களிடம் உள்ளதா என்பதை கவனியுங்கள்.
அதிகப்படியாக நினைப்பது:
நீங்கள் ஒருவரைப் பற்றி அதிகமாக நினைப்பது என்பது, வெறுப்பின் காரணமாக இருக்கலாம் அல்லது அவர் மீது அதிகப்படியான அன்பபை செலுத்துவதாலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் விரும்பும் நபருடன் இருப்பது, எப்போதும் அவர்களுடன் இருப்பது என்று நீங்கள் கற்பனை செய்தால், அது நிச்சயமாக காதல் தான். அவர்களைப் பற்றி பகல் கனவு காண்கிறார்கள் என்றால் நீங்கள் காதலிக்கிறீர்கள் என்பதற்கான முதல் அறிகுறி இதுதான்.
பட்டாம்பூச்சி பறக்கும்:
யாரை நீங்கள் ஸ்பெஷல் என கருதுகிறீர்களோ அவர், உங்கள் அருகில் வந்தாலோ. அல்லது உங்களுடன் பேசினாலோ,நீங்கள் பயமாகவோ அல்லது உற்சாகமாகவோ உணர்வீர்கள். இது நீங்கள் காதலிக்கிறீர்கள் என்பதற்கான மற்றொரு அறிகுறி இது. அந்த நபர் உங்களிடம் பேசும்போது ஒருவித பதற்றத்தை உணர்ந்தாலுமே, அடிவயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதை உணரலாம்.
அதிக நேரத்தை செலவிட விரும்புவது:
குறிப்பிட்ட நபருடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவது, முடிந்தவரை அவர்களுடன் இருக்க முயற்சிப்பது. அவர்களைப் பற்றி கூடுதல் தகவல்களை அறிய விரும்புவது, உங்களின் இன்ப துன்பங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவது, உங்களின் ஒவ்வொரு தருணத்திலும் உங்களுடன் இருக்க வேண்டும் என விரும்புவதும் காதலை உறுதிப்படுத்தும் அறிகுறிதான். ஒருநாள் அவர்களை பார்க்காவிட்டாலும், துடித்துப்போவதும் காதலின் வெளிப்பாடு தான்.
மனம் விட்டு பேசலாம்..!
உங்கள் அன்புக்குரியவரிடம் உங்களைப் பற்றி எல்லாவற்றையும் சொல்ல விரும்புகிறீர்கள். அவர்களிடம் எந்த விஷயத்தை பற்றி பேசுவதும் உங்களுக்கு எளிதானதாக இருக்கும். உங்களது பேச்சு மற்றும் நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், உண்மையாகவும் இருக்கும். உங்களது உணர்வுகளையும் எண்ணங்களையும், ஒளிவு மறைவு இன்றி ஒருவரிடம் அதிகம் பகிர்ந்து கொண்டால், நீங்கள் காதலிக்கிறீர்கள் என்றே அர்த்தம்.
பாதுகாப்பாக உணர்வீர்கள்:
எந்தவொரு உறவிலும் நம்பிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் ஒரு நபருடன் வசதியாக இருக்கிறீர்களா அல்லது சங்கடமாக இருக்கிறீர்களா என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும், மற்றவர்களை விட அந்த நபரைச் சுற்றி இருக்கும்போது பாதுகாப்பாக உணர்கிறீர்களா? இதுவும் உங்கள் அன்பின் சிறப்பியல்பு. மற்றவர் மீது நம்பிக்கை வைப்பதும் அன்பின் அடையாளம் ஆகும்.
பொறாமை பொங்கி வரும்:
நீங்கள் விரும்பும் நபருடன் யாராவது பேசினாலும். அவர்கள் உங்களைத் தவிர மற்றவர்களுக்கு நேரம் கொடுக்கும்போது உங்களுக்கு பொறாமை பொங்கி வரலாம். காதலில் இது பொதுவான விஷயம். இந்த அறிகுறிகளை நீங்கள் யாரிடமிருந்தும் உணர்ந்தால், அதன் அர்த்தம் அன்பு என்பதை உணர்ந்து உங்கள் காதல் வாழ்க்கையை அனுபவிக்கவும்.