MedhuVadai Makers | மெதுவடை அழகா ரவுண்டா, குட்டி ஓட்டையோட வரணுமா.. இதை செஞ்சாவே போதும்.. ஸ்டார்ட் ம்யூசிக்..
மெது வடை அல்லது ஊர்ப்பக்கம் உளுந்து வடை. பேரச் சொன்னாலே சும்மா வாயூறும்ல ரக உணவு வகை. பல் இல்லாத குழந்தை முதல் பல் செட் வைத்த தாத்தா வரைக்கும் எல்லோருக்கும் பிரியமான வடை மெதுவடை.
மெது வடை அல்லது ஊர்ப்பக்கம் உளுந்து வடை. பேரச் சொன்னாலே சும்மா வாயூறும்ல ரக உணவு வகை. பல் இல்லாத குழந்தை முதல் பல் செட் வைத்த தாத்தா வரைக்கும் எல்லோருக்கும் பிரியமான வடை மெதுவடை.
உளுந்தை சரியா ஊறவைத்து, பதமாக தண்ணீர் கூடிவிடாமல் அரைத்து. மாவில் இஞ்சி, மிளகாய் அல்லது மிளகு, கருவேப்பிலை, மல்லி, வெங்காயம், உப்பு சேர்த்து. சேர்த்து... இதுக்கு அப்புறம் தாங்க வரவே மாட்டேங்குது என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. அதற்குத்தாங்க மெது வடா பிராஸஸை ஈஸியாக்க இயந்திரங்கள் வந்துவிட்டன. அதில் சிலவற்றை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.
1. MDM HUB மெது வடா மேக்கர்:
MDM HUB மெது வடா மேக்கர் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலால் உருவானது. இதில் பாதுகாப்பான, க்ரிப் ஹேண்டில் உள்ளது. இறுக்கமான பிடிமானம் இருப்பதால் சூடான் எண்ணெய் மீது பயமில்லாமல் வடைகளைப் பிழிந்துவிடலாம். மாவு சிறிதும் வீணாகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. Nityasiddh மெது வடா மேக்கர்:
இந்த இயந்திரம் உங்களுக்கு வடை சுடுவதில் ஒரு எளிய அனுபவத்தைத் தரும். இதன் மிருதுவான, பளபளப்பான பூச்சு, இயக்கவும் சுத்தம் செய்யவும் எளிமையானதாக இருக்கும். கைகளில் இருந்து வழுகிச் செல்லாத அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கூம்பு வடிவ அமைப்பு மாவு வீணாகாமல் பார்த்துக் கொள்கிறது. இதை சுத்தம் செய்வதும் மிகவும் எளிது. இதன் விலை ரூ.367 மட்டுமே. அமேசானில் ஷாப் செய்யலாம்.
3. WESHOP'S மெது வடா மேக்கர்:
ஒரே ஒரு அழுத்தில் அழகான ஒரு வடை வாணலியில் குதித்து விழும். முதன்முறை வடை சுடுவோர் கூட எந்தத் தயக்கமும் தடங்கலும் இல்லாமல் இதனைப் பயன்படுத்தலாம். கைகளில் மாவாக்கு சிரமப்பட வேண்டாம். இதன் விலை வெறும் ரூ.279. அமேசானில் கிடைக்கிறது.
இந்த மெஷின்களை ட்ரை பண்ணிப் பாருங்க. அப்புறம் அடிக்கடி வடை வீட்டிலேயே தயாரிப்பீர்கள்.
வடை இயந்திரத்தை பற்றி சொல்லிவிட்டு ரெசிபி சொல்லாவிட்டால் எப்படி?
இதோ மெது வடை அல்லது உளுந்து வடை ரெசிபி:
ஒரு கோப்பை உளுந்துக்கு ஒரு தேக்கரண்டி பச்சரிசி அல்லது துவரம்பருப்பை சேர்த்து ஊறவைக்கவும். குறைந்தது அரை மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.
ஊறிய பருப்பை க்ரைண்டரில் இட்டு அரைக்கவும். தண்ணீர் அதிகம் சேர்த்துவிடக்கூடாது. தண்ணீர் தெளித்து தெளித்து உளுந்து ஒரு பந்துபோல் வரும்வரை அரைக்கவும். ஒரு சின்ன துண்டு மாவை எடுத்து தண்ணீரில் போடுங்கள். அது மிதக்கும். அந்தப் பதத்தில் மாவை எடுத்து வைத்துக் கொள்ளவும். அதில் உப்பு, நுண் துண்டுகளாக வெட்டிய இஞ்சி, மிளகு அல்லது பச்சை மிளகாய் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கடைசியாக சேர்க்கவும். முதலிலேயே வெங்காயத்தைச் சேர்த்தால் மாவு தண்ணீர் விட்டுவிடும். நறுக்கிய கருவேப்பிலையை சேர்த்து வடையை சுட ஆரம்பிக்கலாம்.
மெதுவடையை அப்படியே சாப்பிடலாம், சாப்பாரில் ஊறவைத்தும் சாப்பிடலாம். தயிரில் ஊறவைத்து கொஞ்சம் காராபூந்தி போட்டு தயிர் வடையாகவும் சாப்பிடலாம். ரசம் ஊற்றி ரச வடையாகவும் சாப்பிடலாம். அது உங்கள் சாய்ஸ்.