மேலும் அறிய

Navratri 5th Day: சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் நவராத்திரி 5-ஆம் நாள் முடிந்தது.. அன்னை மகேஸ்வரியின் நாள்..

நவராத்திரியின் ஐந்தாவது நாளான இன்று வழிபடும் தெய்வம் சக்தியின் வடிவமான மகேஸ்வரி அன்னையாகும்.

நவராத்திரியின் ஐந்தாவது நாளான இன்று  வழிபடவேண்டிய தெய்வம் சக்தியின் வடிவமான மகேஸ்வரி அன்னையாகும்.
 ஈஸ்வரனின் பாதி சக்தி என்பதால் இவள் மகேஸ்வரி என்றும், கந்தனின் அன்னை என்பதால் ஸ்கந்த மாதா என்றும் போற்றப்படுகிறாள்.

வீட்டில் இன்றைய தினம் கடலை மாவினால் பறவைக் கோலங்களில் ஏதேனும் ஒன்றை போட்டு அழகு படுத்தலாம் ‌‌‌‌. அம்பிகைக்கு தயிர் சாதமும், ஏதேனும் ஒரு நவதானிய சுண்டலும் செய்து பிரசாதம் படைக்க வேண்டும் ‌. 

இன்றைய தினம் ஆறு வயது சிறுமிகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து,  வழிபடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் , புத்திரபாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

இந்த நவராத்திரியில், ஐந்தாம் நாள் வெள்ளி கிழமை அன்று வருவது மிகச்சிறப்பான நாளாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை ,துர்கா தேவியின் அவதாரங்களை போற்றி கொண்டாடப்படும் திருவிழாவாகும். 

 நவராத்திரியின் இந்த ஒன்பது நாட்கள், தேவியை நினைத்து மனதார பூஜித்து வந்தால், அம்பாளின் ஆசீர்வாதத்தால்  நல்லவை அனைத்தும் நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.

உழவர்கள், அலுவலகங்களில் பணி செய்வோர், உழைப்பின் முழுப்பலனை பெற, அன்னையின் அருள் அவசியம் வேண்டும்,
ஆணுக்கு பெண் சளைத்தவள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில், வீரத்துடன் வளர்க்கப்பட்ட மீனாட்சியை இன்று வழிபடுவது, பெண்களுக்கு மிகவும் சிறந்தது.

மனித நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்து, சாதாரண தன் பக்தர்களும், தெய்வநிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே கொலு வைப்பது வழக்கம் என்பதை வலியுறுத்தும் இந்நாள். அதேபோல் நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒன்பது வண்ணங்களுடன் தொடர்பு உடையது. 
ஒவ்வொரு நாளுக்கும் குறிப்பிட்ட வகையான பூக்கள், உணவுகள் மற்றும் பழங்களும் அம்பாளுக்கு படைக்கப்படுகிறது.

 இந்த இந்த நாளில் பக்தர்கள் காலையில் எழுந்து நீராடி , மஞ்சள் நிறத்தில் ஆடைகளை அணிந்து தமது பூஜை வழிபாடுகளை பயபக்தியுடன் விரதம் இருந்து தொடங்கலாம். ஐந்தாம் நாளன்று, அம்மனுக்கு மஞ்சள் நிற பூக்களும், பழங்களும் அர்ச்சனை செய்து தானம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.  அதேபோல் இன்றைய தினத்தில் ஆறு ஏலக்காய்களை அம்மனுக்கு சமர்ப்பணம் செய்தால் சகல வளங்களும் மேம்படும் என்பது நம்பிக்கை.

நவராத்திரி நாள் 5: செப்டம்பர் 30, வெள்ளி கிழமை

வழிபட வேண்டிய சக்தி தேவி: வைஷ்ணவி தேவி (மோகினி), மகேஸ்வரி, ஸ்கந்த மாதா

திதி: பஞ்சமி

மலர்: மனோ ரஞ்சிதம், பாரிஜாதம், திருநீற்றுப் பச்சிலை

நிறம்: பச்சை

பச்சை நிறம் செழிப்பு, இயற்கை, வளர்ச்சி, மனதை அமைதி, போன்றவற்றை குறிக்கிறது. பச்சை நிற ஆடையில் அம்பாளுக்கு பூஜை செய்தால், உங்கள் வாழ்வில் நிம்மதியும், செழிப்பும் நிலைத்து நிற்கும்.

கோலம்: கடலை மாவினால் பறவை கோலம் போட வேண்டும்

ராகம்: பந்துவராளி ராகம்

நைவேத்தியம்: காலை நேரத்தில் தயிர் சாதம் மற்றும் மாலை நேரத்தில் கடலை பருப்பு சுண்டல்

மந்திரம்: லலிதா சஹஸ்ரநாமம்
கனக தாரா ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி, 

பலன்கள்: புத்திர பாக்கியம்,வீட்டில் சுபிட்சம் உண்டாகும்,  பெண் தெய்வ ஆசீர்வாதம் கிடைக்கும், சாப நிவர்த்தி பெறலாம்.

நவராத்திரி ஐந்தாம் நாள் வழிபாட்டில், ஆரஞ்சு நிறத்தில் பிரசாதம்,ஆரஞ்சு நிற லட்டு, பழங்களை படையலுக்கு வைத்து சாப்பிடுவது சிறப்பு என சொல்லப்படுகிறது.

காலையில், பால் சாதம் படைத்து வழிபடலாம்:
 பசும்பாலில்  வேக வைத்த சாதத்தில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ,நெய்யில் முந்திரி, உலர் திராட்சை வறுத்து சேர்த்தால், தெய்வீக சுவையுடன், பிரசாதம் தயார். இது தவிர புளியோதரை, உளுந்தன்னம், இனிப்பு, மாதுளம் பழம் கலந்த தயிர் சாதம் படைத்தும் வழிபடலாம்.

வெள்ளிக்கிழமை நவராத்திரி அன்று, பாரிஜாத மலர், பவளமல்லி, பிச்சிப்பூ, மரிக்கொழுந்து, வில்வ இலை கொண்டு பூஜிப்பது, அதிக பலன்களை தரும்.

கொலு வைக்கப்பட்ட இடத்தில், கடலை மாவினால் பறவை வடிவ கோலம் இட்டு, விளக்குகள் ஏற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, பிரசாதம் வைத்து கற்பூரம் காட்டி ஆரத்தி எடுக்க வேண்டும். நவராத்திரியின் ஐந்தாம் நாளில், வைஷ்ணவி தேவியையும், மகேஷ்வரியையும் வணங்கி வழிபடலாம். 

நவராத்திரியின் ஐந்தாம் நாளில் மோகினி தேவியை வழிபட்டால் உலக மாயைகளில் இருந்து விடுபட முடியும் என்பது ஐதீகமாக இருக்கிறது. அதேபோல் இந்நாளில் வைஷ்ணவி தேவி, மகேஸ்வரி ஆகியோரை வழிபடும் போது மன சஞ்சலங்கள் ,வீண் விரயங்கள், பணம், பொருள் செலவு ஆகியவற்றிலிருந்து நிம்மதி கிடைக்கும் என என்பது நம்பிக்கை. நவராத்திரி ஐந்தாம் நாளில் பெண் தெய்வங்களின் அனுகிரகத்தை பெற வீட்டுக்கு ஒற்றைப்படையில் சிறுமிகள் மற்றும்  சுமங்கலி பெண்களை அழைத்து உணவு வழங்கி, மருதாணி,
ஆடை, வளையல், கண்ணாடி,  போன்ற மங்களப்  பொருட்களை , தேங்காய் வெற்றிலை பாக்குடன் வழங்கி, ஆசி பெற்றால், வாழ்க்கை சிறப்பாக அமையும் எனக் கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election 2024 LIVE: விறுவிறுப்பாக நடைபெறும் 4 ஆம் கட்ட மக்களவை தேர்தல்..!
விறுவிறுப்பாக நடைபெறும் 4 ஆம் கட்ட மக்களவை தேர்தல்..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vetrimaaran on Ilayaraja Vairamuthu : இளையராஜா VS வைரமுத்து “பாடல் யாருக்கு சொந்தம்?”- வெற்றிமாறன்Priyanka Gandhi on Amit shah : ”என்ன பண்ணீங்க அமித்ஷா? லிஸ்ட் சொல்லுங்க பார்ப்போம்” பிரியங்கா சவால்Vetrimaaran Pressmeet : ”சாதி ஏற்றத்தாழ்வு இல்லையா? நீங்கலாம் எங்க வாழ்றீங்க?” வெற்றிமாறன் பதிலடிNellai Jayakumar : மர்மம் விலக்குமா டார்ச் லைட்? ஜெயக்குமார் மரணத்தில் திருப்பம்! வலுக்கும் சந்தேகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election 2024 LIVE: விறுவிறுப்பாக நடைபெறும் 4 ஆம் கட்ட மக்களவை தேர்தல்..!
விறுவிறுப்பாக நடைபெறும் 4 ஆம் கட்ட மக்களவை தேர்தல்..!
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
Andhra Assembly Election 2024: ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்ற தேர்தல்! ஆட்சி யாருக்கு? ஜெகன் Vs சந்திரபாபு?
7 AM Headlines: நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்! இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்! இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு - இன்றைய ஹெட்லைன்ஸ்!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Today Movies in TV, May 13:  லீவு போட ரெடியா இருங்க - டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன தெரியுமா?
Today Movies in TV, May 13: லீவு போட ரெடியா இருங்க - டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன தெரியுமா?
Embed widget